Sembaruthi Serial: நீ இப்போ சமையல்காரி இல்லை பார்வதி.. குட்வில் அம்பாசிடர்!
சென்னை:நீ இப்போ சமையல்காரி இல்லை பார்வதி. என் கம்பெனியோட குட்வில் அம்பாசிடர். அதனால உட்கார்ந்து பேசுன்னு சொல்றாங்க அகிலாண்டேஸ்வரி.
இல்லம்மா நான் நின்னுக்கிட்டே சொல்ல வந்ததை சொல்லிட்டு போயிடறேன்னு பார்வதி சொல்ல, அது சரி வராது பார்வதி. நான் என் கம்பெனியோட குட்வில் அம்பாசிடருக்கு குடுக்க வேண்டிய மரியாதையை குடுக்கணும்னு சொல்றாங்க.
மித்ராவும் வனஜாவும் பொருமி நிற்க பார்வதி நுனி சீட்டில் உட்காருகிறாள்.

கம்பீரமா உட்காரு
என்ன இப்படி உட்கார்ந்து இருக்கே... என் கம்பெனியோட குட்வில் அம்பாசிடர். நல்லா கமீபரமா உட்காருன்னு அகிலாண்டேஸ்வரி சொல்ல பார்வதி நன்றாக உட்காருகிறாள். இப்போ சொல்லு என்ன விஷயம்னு கேட்கறாங்க. பார்வதி மென்னு விழுங்கியபடி பேச ஆரம்பிக்கறா.

டார்கெட் தாண்டி
மார்க்கெட்டிங் டீம் டார்கெட் தாண்டி அச்சீவ் செய்து இருக்காங்களாம் மேடம். அதுக்கு பார்ட்டி கேட்கறாங்க. இதுவரைக்கும் இவ்ளோ சேல்ஸ் யாரும் இன்க்ரீஸ் பண்ணினது இல்லையாம். பார்ட்டியும் கொடுத்தது இல்லையாம். இப்போ பார்ட்டி கொடுத்தால், இனி வரவங்களுக்கு இது ஒரு உந்துதலா இருக்கும்னு அவங்க நினைக்கறதா சொல்றாங்கன்னு பார்வதி தயங்கி தயங்கி பேசறா.

சமையல் குறிப்பா
இது என்ன சமையல் குறிப்ப பார்வதி உடனடியா முடிவு பண்றதுக்கு? சரி அவங்க நினைக்கறது இருக்கட்டும்.. நீ என்ன நினைக்கறேன்னு அகிலாண்டேஸ்வரி கேட்க..நான் என்ன நினைக்கறது அம்மா.. நீங்க என்ன சொல்றீங்களோ அதை அப்படியே அவங்ககிட்டே சொல்லிடறேம்மான்னு சொல்றா.

புத்தி இல்லே
உனக்கு கொஞ்சம் கூட புத்தி இல்லையா? நீ என்ன போஸ்ட் மேன் வேலையா பார்க்கறே? குட்வில் அம்பாசிடர் பதவியில் இருக்கே... சரி முதல் தடவைன்றதால உன்னை மன்னிச்சு விடறேன்.. நீயும் கொஞ்சம் யோசிக்கணும் பார்வதி. இது ஒருத்தரால சாத்தியம் இல்லை. இவங்களுக்கு பார்ட்டி குடுத்தா புரடக்ஷன்ல இருக்கறவங்க ஒண்ணும் செய்யலைன்னு ஆகிடாதா? அப்புறம் சேல்ஸ்ல இருக்கறவங்க ஒண்ணுமே செய்யலைன்னு ஆகிடாதா? இவங்க மூணு பேரும் இல்லைன்னா இது சாத்தியம் இல்லை. அதனால் முடியாதுன்னு சொல்லுன்னு சொல்றாங்க...

அசத்தல் நடிப்பு
பிரியா ராமன் அசத்தலாக கம்பீரமாக நடிச்சு இருக்கார். இவருக்காகவும் பார்வதியாக நடிப்பவருக்காவும் இந்த சீரியலை பார்ப்பவர்கள் அதிகம். ஆதியாக நடிக்கும் கார்த்தி பெண்களுக்கு பிடித்த நடிகர். ஆதி பார்வதி இருவருக்கும் திருமணமாகி வீட்டில் குடும்ப புகைப்படத்தை மாட்டியும் அகிலாண்டேஸ்வரிக்கு இந்த உண்மை தெரியாமல் இருப்பதுதான் கதையை நகர்த்தும் யுக்தி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications