காதல் ஜோடிக்கு இன்று டும் டும்.. வானத்தைப் போல சீரியல் நடிகையை கரம் பிடித்த பசங்க திரைப்பட நடிகர்
சென்னை: நடிகை ப்ரீத்தி குமார் தன்னுடைய காதலை சமூக வலைதளத்தில் தெரிவித்த சில மாதங்கள் கழித்து இன்று நடிகர் கிஷோரோடு திருமணம் செய்து இருக்கிறார்.
நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பிரீத்தி குமார் திருமணத்திற்கு அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ப்ரீத்தி குமார் மற்றும் கிஷோர் இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

காதல் திருமணம்
பசங்க மற்றும் கோலி சோடா போன்ற திரைப்படங்களில் நடித்து வந்த நடிகர் கிஷோர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வானத்தைப்போல சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த பிரீத்தி குமாரை இன்று திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

பிறந்தநாளில் காதல் அறிவிப்பு
சின்னத்திரை நடிகை ப்ரீத்தி குமார் தன்னுடைய பிறந்தநாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் காதலிக்கும் நபரை பற்றி ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி தான் கிடைத்தது. காரணம் அவர் பசங்க திரைப்படத்தில் அன்புக்கரசுவாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட கிஷோர் தான்.

சீரியல் நடிகை
ப்ரீத்திகுமார், ஆபீஸ் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிறகு லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்கள் நடித்திருக்கிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

வெளிவந்த ரகசியம்
இந்த நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான பசங்க திரைப்படத்தின் மூலமாக நடிக்க வந்து பல விருதுகளை பெற்றிருந்த கிஷோர், சமீபத்தில் தான் 13 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாடு அரசின் தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவரும் நடிகை ப்ரீத்தி குமாரும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் சில வருடங்களாக நடைபெற்று வந்தாலும் அதை குறித்து எந்த தகவலையும் வெளியே தெரிவிக்காமல் ரகசியமாக வைத்திருக்கின்றனர். முதல் முறையாக ப்ரீத்தி பிறந்த நாளில் ப்ரீத்தியை பற்றி உருக்கமாக கேப்ஷன் கொடுத்து கிஷோர் ப்ரீத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு பிறகு தான் இவருடைய காதல் ரகசியம் பலருக்கும் தெரிந்தது.

வயது வித்தியாசம்
ப்ரீத்தியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிஷோர் பற்றி உருக்கமாக பல தகவல்களை வெளியிட்டு இருந்தார். இதற்கு முன்பு இவர்கள் இருவரும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு வந்தாலும் அந்த அளவிற்கு யாருக்கும் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்து வந்தது. ஆனால் இவர்களுடைய திடீர் அறிவிப்பு பலரையும் திக்கும் முக்காட வைத்துவிட்டது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய காதல் பற்றி தான் பலரும் பேசி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். குறிப்பாக ப்ரீத்தி கிஷோரை விட நான்கு வயது அதிகம் என்ற செய்திகள் பரவி வருகிறது.

கிஷோர் கொடுத்த விளக்கம்
இப்படி ஒரு நிலையில் கிஷோரை விட பிரீத்தி நான்கு வயது அதிகமானவர் என்ற விமர்சனத்திற்கு கிஷோர் எனக்கு வயது பற்றி எல்லாம் எதுவும் பிரச்சனை கிடையாது. முக்கியமாக என்னுடைய வீட்டில் எந்த பிரச்சனையும் கிடையாது. இப்படி கமெண்ட் போடுபவர்களை எல்லாம் நான் பார்க்கவே மாட்டேன். ஆனால் அவள் பார்ப்பாள். ஆனால் அதை எல்லாம் பார்த்துவிட்டு என்னிடம் சொல்லுவார் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications