பத்தா Vs சிக்மா.. நேற்றைய வசூலில் தெரிந்த வித்தியாசம்! ஜேசன் சஞ்சய்க்கு இது கொஞ்சம் சிக்கல் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் வசூலைப் பார்த்தால்தான் உண்மையான நிலவரம் என்ன என்பது ஓரளவுக்கு புரியும். அந்த வகையில் இப்போது விஜய் சேதுபதியின் பத்தா படத்தையும், ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. பத்தா படத்துக்கு ஆரம்பத்தில் பெரிய ஓப்பனிங் இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் வசூல் மேலே போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் சிக்மாவுக்கு முதல் நாளில் கிடைத்த வேகத்தை அடுத்தடுத்த நாட்களில் தக்க வைக்க முடியவில்லை.

சிக்மா வசூல் நிலவரம்

முதலில் சிக்மாவைப் பார்த்துவிடலாம். அக்டோபர் 2-ம் தேதி படம் வெளியானபோது இந்திய அளவில் முதல் நாளில் சுமார் ரூ.2.35 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இயக்குநராக அறிமுகமான ஜேசன் சஞ்சய்க்கு இது மோசமான தொடக்கம் இல்லை என்றுதான் அப்போது சொல்லப்பட்டது. ஆனால் 2வது நாளில் வசூல் ரூ.1.50 கோடியாகக் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமையும் அதே ரூ.1.50 கோடி அளவில்தான் இருந்தது. 3 நாட்கள் முடிவில் இந்திய வசூல் சுமார் ரூ.5.35 கோடி என கணிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் இன்னும் கொஞ்சம் அதிகமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அப்படி பெரிய ஏற்றம் வராதது சிக்மாவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

Vijay Sethupathi Jason Sanjay box office Sigma

பத்தா வசூல் நிலவரம்

மறுபக்கம் விஜய் சேதுபதியின் பத்தாவை பார்த்தால் அக்டோபர் 1-ம் தேதி வெளியான பத்தா, முதல் நாளில் சுமார் ரூ.1.50 கோடி வசூல் செய்தது. ஆனால் அடுத்த நாளே ரூ.2.70 கோடியாக உயர்ந்தது. அதற்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை இன்னும் பெரிய ஏற்றம் வந்து, 4வது நாளில் மட்டும் ரூ.3.10 கோடி வசூல் செய்திருக்கிறது. அதாவது முதல் நாளில் சிக்மா முன்னிலையில் இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பத்தா வேகமாக முன்னேறிவிட்டது.

4 நாட்கள் முடிவில் பத்தா இந்தியாவில் ரூ.10.05 கோடி வசூலைத் தாண்டியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைதான் இதுவரை அந்த படத்துக்கு அதிக வசூல் வந்த நாளாகவும் அமைந்திருக்கிறது. இங்குதான் இந்த 2 படங்களுக்கும் இடையிலான வித்தியாசம் நன்றாகத் தெரிகிறது. சிக்மா முதல் நாளில் அதிகமாகத் தொடங்கியது. ஆனால் அங்கிருந்து வசூல் அப்படியே குறைந்து நின்றுவிட்டது. பத்தா முதல் நாளில் குறைவாகத் தொடங்கினாலும், அடுத்தடுத்த நாட்களில் மக்கள் வருகை அதிகரித்து வசூலும் ஏறிக்கொண்டே போகிறது.

நேற்று திங்கட்கிழமை என்பதால் 2 படங்களுக்குமே வசூல் குறைவது இயல்பான விஷயம்தான். பத்தாவைப் பொறுத்தவரை திங்கட்கிழமை சுமார் ரூ.1.30 கோடி வசூல் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் 5 நாட்களில் படம் ரூ.11 கோடியைத் தாண்டியிருக்கிறது. சிக்மாவைப் பொறுத்தவரை நேற்று 4வது நாள் வசூல் தொடர்பான முழுமையான இறுதி எண்ணிக்கையில் இன்னும் சின்ன மாறுபாடுகள் இருக்கின்றன.

Vijay Sethupathi Jason Sanjay box office Sigma

யார் முன்னிலை

ஆனால் ஒரு விஷயம் மட்டும் ஏற்கனவே தெரிந்துவிட்டது. பத்தா படத்துக்கு நாளுக்கு நாள் வசூல் கூடுகிறது. சிக்மாவுக்கு முதல் நாள் கிடைத்த வேகம் அடுத்த நாட்களில் தொடரவில்லை. அதுவும் 2 படங்களும் இப்போது தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த வித்தியாசம் கவனிக்கப்படாமல் போகாது. குறிப்பாக ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால் சிக்மா மீது ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி அடுத்தடுத்த நாட்களில் வசூல் பெரிய அளவில் உயரவில்லை என்பதுதான் இப்போது பேசப்படும் விஷயம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+