இது என்ன பாவாடை கட்டாம சேலை... பவித்ரா ஜனனியின் சூப்பர் கெட்டப்.. ரசிகர்கள் குஷி!
சென்னை: விதவிதமான உடை அணிந்து கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கும் பவித்ரா ஜனனியின் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
இவர் மாடலிங்கில் விதம் விதமாக கலக்கினாலும் கூட, தற்போது வித்தியாசமான முறையில் சேலை கட்டி புது விதமான ஃபேஷனை காட்டி இருக்கிறார். ரசிகர்களின் பாராட்டுக்களையும் அள்ளியிருக்கிறார்.
சீரியல்களில் கதாநாயகியாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் மோகம் எல்லா நடிகைகளையும் ஆட்கொண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாவாடை இல்லாமல் சேலை
ஆளாளுக்கு கலக்கலான போட்டோ ஷூட்டிங் நடத்தி இன்ஸ்டாகிராம் கலங்க வைத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பவித்ரா ஜனனியும் களமிறங்கியிருக்கிறார். அதுவும் தற்போது அவர் உள்பாவாடை அணியாமல் பேண்ட் போட்டுக்கொண்டு வித்தியாசமாக சேலை கட்டி போட்டோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் தட்டி விட்டிருக்கிறார். அது வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் கூட்டம்
சினிமாக்களில் நடிக்கும் நடிகர்களை விடவும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. சினிமா நடிகைகள் வருடத்திற்கு 5 படங்கள் வேண்டுமென்றால் நடிப்பார்கள். ஆனால் சீரியல் நடிகைகள் ஒரு வாரத்தில் 6 நாட்கள் தொலைக்காட்சியில் தினமும் வந்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இணையதளங்களிலும் போட்டோவை மட்டும் அப்லோடு பண்ணாமல் சூட்டிங் ஸ்பாட்டில் என்ஜாய்மென்ட் வீடியோக்களையும் டிக் டாக் வீடியோக்கள் உள்ளிட்டவை களையும் வெளியிடுவது, அது போதாதென்று லைவ்வில் வந்து ரசிகர்களிடம் ஆக்டிவ் ஆக இருக்கிறார்கள்.

பவித்ரா ஜனனிக்கு செம கூட்டம்
அதனாலோ என்னவோ சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகர்களுக்கும் ஃபேன்ஸ் இருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஈரமான ரோஜாவே சீரியல் மலராக நடிக்கும் பவித்ரா ஜனிக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் சென்னையில் பிறந்து அங்கேதான் பள்ளி-கல்லூரி முடித்திருக்கிறார். காலேஜ் படித்துக்கொண்டிருக்கும்போது மாடலிங்கில் காலடி எடுத்து வைத்து அதன் மூலமாக சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானார்.

ஈரமான ஹீரோயின்
பிறகு கல்யாணம் முதல் காதல் வரை, பகல் நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை அவர் நடித்து வந்த சீரியல்களில் எல்லாமே இவர் சின்ன சின்ன ரோல்களில் நடித்து கொண்டிருந்தார். தற்போது நடிக்கும் ஈரமான ரோஜாவே சீரியல் மட்டும் தான் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த சீரியல் இவருக்கு கிடைத்த வரப்பிரசாதமாக தான் நினைக்கிறார். அது மட்டுமல்ல அவரது நடிப்புத் திறமைக்கும் கிடைத்த அங்கீகாரமாகவும் இருக்கிறது.

தன்னம்பிக்கை பாஸ் தன்னம்பிக்கை
சிலர் இந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் போது இதுவரைக்கும் துணை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த இவரால் இனி ஹீரோயினாக நடிக்க முடியுமா என்றெல்லாம் பேசி வந்திருக்கிறார்கள். ஆனாலும் தன்னால் முடியும் என்று இதில் நடித்து பெரும் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் அன்பையும் வாரிக் குவித்து வைத்துள்ளார். சிறுவயதிலே டான்ஸ் ஆடுவது நடித்துக் காட்டுவது காமெடி செய்வது பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விக்ரம் படம் இவருக்கு ரொம்பவே பிடிக்குமாம். அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம்.

சிக்கன் கொடுத்தா ஜனனிக்குப் பிடிக்கும்
பவித்ராவுக்கு சிக்கன் பிரியாணி என்றாலே கொள்ளைப் பிரியமாம். சாப்பாடு விஷயத்தில் இவர் டயட் எல்லாம் கொஞ்சம் கூட கிடையாதாம். மனசுக்கு பிடித்ததை எப்ப வேணாலும் சாப்பிட்டு ஜாலியாக இருப்பாராம் .புது புது ஆடை உடுத்தி அதை விதவிதமாக போட்டோ எடுத்து இணையதளங்களில் பதிவிடுவது ரொம்பவே பிடித்தமானதாம். அதனால் அடிக்கடி போட்டோஷூட் நடத்துவதில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது..

உள் பாவாடை இல்லாமல் சேலை கட்டி
தற்போது இவர் நடத்தியிருக்கும் போட்டோஷூட் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாடல் உடை உடுத்தி போட்டோ ஷூட் பல நடத்தி இருந்தாலும் அவரது கண்ணியமான உடை அலங்காரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடிப்பிலும் சரி, உடையிலும் சரி இவரது கேரக்டருக்கு பிளஸ் பாயிண்ட் ஆகவே இவரது உடை அலங்காரமும் இருப்பதால் ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். பிறகென்ன பாவாடை இல்லாமலும் சேலை கட்டலாம்.. பவித்ராவுக்கு அதுவும் செம அழகே.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications