அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது.. ரசிகர்களை நெளிய விட்ட பவித்ரா
சென்னை: பவித்ரா ஜனனி போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளன.
அழகாய் மேக்கப் போட்டு போரடித்துவிட்டது என பார்ப்பவர்கள் பதறிப் போகும் வகையில் மாடலிங் போட்டோஸ் போட்டுள்ளார் பவித்ரா.
கன்னாபின்னாவென மேக்கப் போட்டு கண்டமேனிக்கு போட்டோ வெளியிட்ட ஈரமான ரோஜாவே பவித்ராவின் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.

ரோஜாவே
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் பவித்ரா இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக போட்டோசூட் எடுக்கிறேன் என ரசிகர்களை பயமுறுத்தும் வகையில் போட்டோ வெளியிட்டிருக்கிறார் .போட்டோவை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடன் அந்த சீரியலில் ஜோடியாக நடிக்கும் திரவியமும் ரொம்பவே பயந்து போய் விட்டார் .

முட்டி மோதல்
சீரியலில் தான் இவர்கள் அடிக்கடி சண்டை போட்டு முட்டி மோதிக் கொண்டு இருப்பார்கள் என நினைத்திருந்த நேரத்தில் நிஜத்திலும் நாங்கள் அப்படித்தான் என இன்ஸ்டாகிராமில் ஒரு போர் நடத்தி இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்த்து இவர்கள் கமெண்ட் போட அதைப்பார்த்து ரசிகர்களும் ரசிக்கின்றனர். மண்டை மீது தூக்கிக் கட்டிய கொண்டையோடு மிரட்டும் பார்வையால் ஜிகுஜிகு உடையில் கழுத்தில் எந்த ஆபரணமும் போடாமல் செமையாக காட்சி தருகிறார்.

பளபள அழகு
பளபளவென மேல் அழகை காட்டியபடி உதட்டில் கருப்பு வண்ண லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு இவரா அவர் என யோசிக்கும் வகையில் வித்தியாசமாக போட்டோஸ் வெளியிட்டிருக்கிறார் . இதுவரைக்கும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாகவும் ரொம்பவே வித்தியாசமாகவும் ஃபோட்டோஸ் எடுத்திருக்கிறார் .இதுவரைக்கும் இவரை சீரியலில் ஹோம்லியாக பார்த்து வந்த ரசிகர்கள் திடீரென இவர் இந்த மாதிரி ஒரு போட்டோ வெளியிட்டதும் ஷாக் ஆகி விட்டனர் .

அவரா இவர்
அவர்தான் இவரா என கேள்வி கேட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் இளைஞர்களால் அதிகமாக ரசிக்கப்படும் சீரியலாக ஈரமான ரோஜாவே சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் மலர் வெற்றி ஜோடியை அனைவருக்கும் ஃபேவரைட் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர் .இதில் மலராக நடிக்கும் பவித்ரா பலருக்கும் பிடித்த பெண்ணாக இருந்து வருகிறார். இவர் இந்த சீரியலுக்கு முன்புவரை பல சீரியல்களில் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார் .

சீரியலில் நாயகி
இரண்டாம் கதாநாயகியாக நடித்து வந்த இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார் .முதலில் இவர் கதாநாயகி என்றதுமே பலர் இவருக்கு கதாநாயகி கேரக்டர் எல்லாம் செட் ஆகுமா என பேசி வந்தனர் .ஆனால் தற்போது இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பார்த்து முதலில் பேசியவர்கள் கூட தற்போது பொறாமைப் பட்டு வருகின்றனர்.

புடவை அடையாளம்
சினிமாக்கள் ஆக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒருவரை ஒரு கேரக்டரில் பார்த்துவிட்டால் ரசிகர்கள் அதே கேரக்டரில் மனதில் செட் பண்ணி விடுவார்கள் .அந்த மாதிரி பவித்ரா என்றாலே புடவையில் கிராமத்து பெண்ணாக கணவன் மீது பேரன்பு கொண்டிருக்கும் ஒரு கதாநாயகியாக தான் இருந்து வருகிறார் .ஆனால் திடீரென இவர் மாடல் உடையில் வித்தியாசமான கெட்டப்பில் களமிறங்கியது ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி விட்டனர்.

நல்லாதாய்யா இருக்கு
ஆனாலும் இந்த கெட்டப்பும் இவருக்கு நன்றாக இருக்கிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர் .ஆனால் திரவியம் மட்டும் இது என்ன யாராவது அடுப்பு கரில பல்லு விளக்கிட்டு வாய் கழுவாமல் அப்படியே வருவாங்கலா என கலாய்ச்சு இருக்கிறார் .அதற்கு பவித்ராவும் அசால்டாக மாடலிங்கை பற்றி ஒன்றும் தெரியாதவர்களிடம் நான் எதுவும் சொல்ல முடியாது என்று முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ராட்சச அழகு
அவர் மட்டுமல்லாமல் அவருடன் நடிக்கும் நடிகைகளும் இது அழகான ராட்சசியாக இருக்கிறது என கூறியிருக்கிறார் . அதற்கு பவித்ராவும் தேங்க்யூ என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ரசிகர்களும் வித்தியாசமாக முயற்சியை எடுத்திருக்கும் இவருக்கு வாழ்த்துக்களையும் அழகிற்கு ஆராதனைகளையும் செய்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications