பளபளக்கும் ஆடையோடு.. ஒத்தக் காலை.. மிரள வைக்கும் பவித்ரா லட்சுமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பளபளக்கும் ஆடையோடு ஒத்த காலை தூக்கி கலக்கலான போஸ் கொடுத்து ரசிகர்களை பாடாய்படுத்தும் பவித்ரா லட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.

குக் வித் கோமாளி மூலம் ரசிகர்களை பாடாய் படுத்துவது போதாது என்று இணையதளங்களிலும் காலடி எடுத்து வைத்து ரசிகர்களை தூங்க விடாமல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் சீரியல் ரசிகர்களை டிவியை விட்டு எந்திரிக்க விடாமல் செய்து கொண்டிருக்கும் ஒரே நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான் .

கோமாளி ஷோ

கோமாளி ஷோ

இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது டிவி முன்பு கிடக்கின்றனர் .அதுவும் சனி மற்றும் ஞாயிறு இரண்டு தினங்களிலும் இது ஒளிபரப்பப்படும் இதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் அதிகம் தான் தற்போது இந்த சீரியல் முடிவடையும் தருவாயில் நெருங்கி விட்டாலும் இந்த சீரியலின் கன்டஸ்டன்ட்களுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறார்கள்.

பவித்ராவால் பரவசம்

பவித்ராவால் பரவசம்

அதிலும் முக்கியமாக பவித்ரா லட்சுமிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது. பவித்ரா இந்த நிகழ்ச்சியின் மூலமாக முதல்முறையாக ரசிகர்களை கவர ஆரம்பித்திருக்கிறார். இருந்தாலும் அவருக்கும் ரசிகர்களுக்கும் ஒரு இணக்கம் ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவர் புகழுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் மற்றும் புகழை கொஞ்சி பேசும் போது முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன் வேற லெவல் இருக்கிறதாம் .

கொஞ்சி கொஞ்சி பேசி

கொஞ்சி கொஞ்சி பேசி

இவரது சேட்டைகளையும் கொஞ்சலான பேச்சையும் ரசிப்பதே சிலரின் வேலையாக இருந்து வருகிறதாம். இவர் தமிழ்நாட்டில் அதுவும் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர் .அதனால்தான் தமிழை கொஞ்சி கொஞ்சி பேசி ரசிகர்களை வசியப்படுத்தி இருக்கிறார். இவர் முதலில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

காதல் கதை

காதல் கதை

அவரது காதல் கதையின் மூன்று காட்சிகள் என்ற தலைப்பில் ஒரு பைலட் படத்தில் நடித்த பிறகுதான் இவர் புகழ் பெற்றிருக்கிறார் . சில வார்த்தைகள் கேட்கும் போது சிலருடைய ஞாபகங்கள் வரும் அந்த மாதிரி தான் இவரது ஹலோ சீனியர் என்னும் டிரேட்மார்க் இவரால் வந்ததுதான் .இவர் இந்த கோமாளி சீசன் 2வில் இவருடன் கன்டஸ்டன்ட் ஆக இருக்கும் அஸ்வின் கூட ஒரு ஷார்ட் பிலிமில் நடித்து பெரும் பாப்புலராகி விட்டார்.

டான்ஸர்

டான்ஸர்

இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் டான்ஸ், மாடல் ,பேஷன் டிசைனர் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் பிகாம் படிக்கும்போது பேஷன் டிசைனரிங்க்கும் படித்து இருக்கிறார். அதனால் தான் காலேஜ் முடிந்ததும் ஷார்ட் பிலிம் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் முதலில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே டான்ஸராக தான் அறிமுகமாகியிருக்கிறார்.

இரண்டரை வயதிலேயே

இரண்டரை வயதிலேயே

இப்ப வரைக்கும் இவர் மீடியாவில் இருப்பதற்கு காரணம் டான்ஸ்தான். அதனால் டான்ஸ்தான் இவர் பெரிதும் டான்ஸை நம்பிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகை என்று சொல்வதைவிட டான்ஸர் என்று சொன்னால் ரொம்ப சந்தோஷப்படுவார் .அந்த டான்ஸ் மீது இவருக்கு ஆசை இரண்டரை வயதில் இருந்தே வந்துவிட்டதாம். அதற்கு காரணம் இவரது அம்மா தானாம்.

சினிமா ஆசை

சினிமா ஆசை

டான்ஸை முறைப்படி கற்று முடித்திருந்தாலும் இவரது ஆசை சினிமாவில் போகலாம் என்று ஆனால் அவரது அம்மா அதற்கு முடியாது என்று சொன்னதும் வேண்டாம் என்று விட்டு விட்டார். ஆனால் காலேஜ் படிக்கும்போதே இவர் அவருடைய நண்பரின் சகோதரர் இவர் அழகாக இருக்கிறார் கேட் வாக்கிற்கு வருவாரா என்று கேட்டிருக்கிறார் .இவரும் அதற்கு சரி என்று மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

மாடலிங்கில் ஆசை

மாடலிங்கில் ஆசை

அதற்குப்பிறகுதான் மாடலிங்கில் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது .அந்த நேரத்தில் விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கு ஆடிசன் நடைபெற்றிருக்கிறது. இவர் அதில் கலந்து கொண்டிருக்கிறார். இவர் அதில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்று டாப் 20 வரைக்கும் போயிருக்கிறார். ஆனாலும் இவருக்கு கிராமத்தில் இருந்து சென்னையில் வந்தது பெரிய கஷ்டமாக இருந்து இருக்கிறது.

மானாட மயிலாட

மானாட மயிலாட

அதனால் இவரால் தொடர்ந்து அங்கு இருக்க முடியாமல் திணறி இருக்கிறார் .அதனால் மீண்டும் ஊருக்கு சென்றுவிட்டார் .அதன்பிறகு மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதற்கு பிறகு பல விளம்பர மாடல்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். அதற்குப்பிறகுதான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவர் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று இருக்கிறார் .

சூப்பர் பொருத்தம்

சூப்பர் பொருத்தம்

இவருக்கும் புகழுக்கும் தான் ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கிறது என்று ரசிகர்களால் தற்போது ரசிக்கப்படுகிறது .போன சீசனில் ரம்யா பாண்டியன் புகழ் ஜோடியை ரொம்பவே ரசித்து இருக்கிறார்கள். ஆனால் இந்த சீசனில் புகழ் பவித்ரா ஜோடிதான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. தற்போது இவர் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் .அடிக்கடி போட்டோக்களை எடுத்து குவிக்கும் இவர் அந்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவருடைய போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் ஹாட்டின் களை பறக்கவிட்டு இவரது அழகை கொஞ்சி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+