ஒற்றைப் பார்வையால்.. உத்துப் பார்த்த பவித்ரா.. பொத்துன்னு விழுந்த ஃபேன்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவிதையும் ஒருநிமிடம் உன்னைக் கண்டு தான் யார் என்பதை மறந்து போகும் இந்த ஒற்றைப் பார்வையால் அந்த அளவிற்கு பார்க்கும் பார்வையாலே பார்ப்பவர்களை வெட்கப்பட வைத்திருக்கிறார் பவித்ரா லட்சுமி.

அவரது இந்த லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் இன்ஸ்டாகிராமில் செம வைரலாக சுற்றிக்கொண்டிருக்கிறது

மாதாமாதம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவர்களை தற்போது இந்த ஊரடங்கு வீட்டிற்குள்ளே போட்டோஷூட் எடுக்க வைத்துவிட்டது.

மேக்கப்போடு சுத்துவோம்ல

மேக்கப்போடு சுத்துவோம்ல


இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என பீல் பண்ணி வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் நாங்கள் மேக்கப்போடு தான் சுற்றிக் கொண்டு இருப்போம் என பல நடிகைகளும் மேக்கப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு போட்டோஷூட்டில் பிசியாக இருந்து வருகின்றனர் .அதிலும் பவித்ரா லட்சுமியும் நானும் இருக்கிறேன் என தன்னுடைய பங்குக்கு
தன்னால் முடிந்ததை தன்னுடைய ரசிகர்களுக்காக செய்து வருகிறார்.

விஜய் டிவி கோமாளி

விஜய் டிவி கோமாளி

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இளைஞர்களை மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரையும் தன்னுடைய சிரிப்பாலே வசியம் செய்து வைத்திருக்கும் பவித்ரா லட்சுமி தற்போது இணையத்தளங்களிலும் செம ஆக்டிவாக இருந்துவருகிறார். இதற்கு முன்பு இவர் சூட்டிங் அதிகமாக இருப்பதால் தான் மாடலிங்கில் எடுக்கும் போட்டோக்களை எப்பவாது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வருவார் .

கவிதை கமெண்டுகள்

கவிதை கமெண்டுகள்

ஆனால் இவர் எப்ப போஸ்ட் போட்டாலும் உடனே இவருக்கு கவிதைகளை கமெண்டுகளாக கொட்டத் தொடங்கிவிடுவர் .ஆனால் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததால் இவரை பார்க்காமல் தவித்து வந்த ரசிகர்கள் மீண்டும் இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக மாறவும் செம ஹாப்பியா மாறிவிட்டனர். முன்னெல்லாம் சினிமா நடிகைகளை தான் இளைஞர்களும் இ இளம் பெண்களும் அதிகமாக ரசித்து வருபவர்

சிரிப்பரசி

சிரிப்பரசி


அவர்களைத்தான் ஹீரோயினியாக ஏற்றுக் கொண்டிருந்தனர் .ஆனால் தற்போது சினிமாவும் சின்னத்திரையும் எல்லாமே ஒன்றுதான் என நடிகைகளை தங்களுக்கு மனசுக்கு பிடித்து இருந்தாலே போதும் என கொண்டாட தொடங்கிவிட்டனர் .அதுவும் லேட்டஸ்டாக வந்திருக்கும் பவித்ரா லட்சுமிக்கு இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது .

செம அழகு

செம அழகு

இதனால் தான் இவருடைய போட்டோஸ்கள் பலருடைய வாட்ஸ்ஸப் டிபிகளிலும் ப்ரோபைல் களிலும இருந்து வருகிறது. இவருடைய க்யூட்டான அழகை ரசிக்கும் ரசிகர்கள் குழந்தை போன்ற கொஞ்சலான பேச்சையும் கொண்டாடி வருகின்றனர். இவர் எப்போது சினிமாவில் வலம் வருவார் என காத்திருக்கும் இவருடைய ரசிகர்கள் தற்போது எடுத்திருக்கும் போட்டோ சூட்டுக்கு என்ன மாதிரி கமெண்ட் போடணும் என தெரியாமல் தங்களுடைய ஹார்டின் களை மட்டுமே அதிகமாக அனுப்பி வருகின்றனர்.

ஓரப் பார்வையில் அசத்தல்

ஓரப் பார்வையில் அசத்தல்

மஞ்சள் உடையில் மங்களகரமாக கதவு ஓரத்தில் நின்றுகொண்டு ,ஓரப் பார்வையால் பார்த்தபடி பார்ப்பவர்களை காந்தம் போல கவர்ந்து இழுத்து இருக்கிறார் .இவருடைய இந்த போட்டோவிற்கு ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரத்தை தாண்டி கமெண்ட்கள் வந்துவிட்டது. ஆனாலும் எதற்கும் பதிலளிக்காத பவித்ரா கேப்ஷன் மட்டும் அனைவரையும் குழப்பும் வகையில் வைத்திருக்கிறார். முதல் நீ முடிவும் நீ என காட்டினை பறக்க விட்டிருக்கிறார். இது யாருக்கான பதிலாக இருக்கும் என தெரியாமல் ரசிகர்கள் புலம்பித் தவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+