அள்ளித் தெளித்த அழகு.. வெள்ளை உடையில் கொள்ளை அழகில் க்யூட் பவித்ரா!
பவித்ராலட்சுமிதான் இப்போது வைரலாகியுள்ளார். வெள்ளை உடையில் கொள்ளை அழகைச் சிந்தி தெளித்துள்ளார் பவித்ரா லட்சுமி.
பவித்ராலட்சுமியின் பெயரைச் சொன்னதுமே கொள்ளை கொள்ளும் அழகில் அவருடைய கலக்கலான சிரிப்பு தான் ஞாபகத்திற்கு வரும்.
ஆனால் தற்போது விதவிதமாக வெள்ளை ஆடையில் ரசித்து ரசித்து போட்டோஸ் வெளியிட்டிருக்கிறார். இவருடைய இந்த போட்டோஸ்கள் தான் தற்போது வைரலாக பேஸ்புக்கில் பரவி வருகிறது.

கோமாளி புரோகிராம்
என்னதான் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் இவருக்கு புகழின் உச்சியில் ஏற்றி வைத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் இவர் ரசிகர்களிடம் நன்றாக பிரபலமாகிவிட்டார் .இதில் இவரை பார்த்த இவருடைய ரசிகர்கள் இவரை அழகின் மறு உருவம் எனவும் ஆகா ஓஹோவென அடிக்கடி புகழ்ந்து வர்ணித்து வந்தனர்.

ரசிகர்கள் மிஸ் பண்றாங்கப்பா
தற்போது இவர் இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும் இவருடைய ரசிகர்கள் இவரை காணாமல் ரொம்பவே மிஸ் பண்ணி இருக்கின்றனர். அதனால்தான் இவர் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய போட்டோக்களை பதிவிட்டு ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். என்னதான் இவர் விதவிதமாக போட்டோஸ்கள் அப்லோடு பண்ணினாலும் இவருடைய ரசிகர்களின் கண்களுக்கு இவர் க்யூட்டான தேவதையாக தான் இருந்து வருகிறாராம்

லூட்டிகள்
ஆனாலும் இவருடைய குக் வித் கோமாளி ஜோடியான புகழுடன் இவர் செய்யும் லூட்டிகளை பலரும் கேட்டு வருகின்றனர். இந்த ,நிகழ்ச்சியில் பல கண்ட ஸ்டாண்டுகள் இருந்தாலும் கண்ணாலே ஜாடை பேசி பலருடைய மனதை கவர்ந்தவர் இவர் என்பதால் இந்த நிகழ்ச்சி எப்போது மீண்டும் ஒளிபரப்பாகும் என பலரும் கேட்டு வருகின்றனர்.

ஜாலியான நிகழ்ச்சி
பொதுவாக சீரியல்கள் என்றாலே வீட்டில் இருக்கும் ஆண்கள் ஐயோ கொடுமை படுத்துகிறார்கள் என்று பீல் பண்ணும் அளவிற்கு அழுகாச்சி சீன்களை வைத்து பாடாய் படுத்தி கொண்டிருப்பார்கள் .ஆனால் சின்னத்திரையிலும் இந்த மாதிரி ஜாலியான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இருந்து வந்தது .இந்த நிகழ்ச்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து வந்தனர் .

கூட்டாக க்யூட்னஸ்
அதிலும் அதில் கலந்து கொள்ளும் கன்டஸ்டன்ட்கள் ஒவ்வொருவருக்கும தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் .அந்த மாதிரிதான் பவித்ராவிருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும் அவருக்கு இதையும் தாண்டி இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் ,டுவிட்டரில் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். எப்போதுமே இவருடைய க்யூட்னசை புகழ்ந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் தற்போதும் இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து கன்னாபின்னாவென கவிதை பாடி வருகின்றனர் .

சாப்பிட்டபடி ஷூட்டிங்
சூட்டிங் எதுவும் இல்லாததால் விதவிதமாக சாப்பிட்டபடி போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார் .இவர் மாடலாக இருப்பதால் மாடலிங் எடுக்கும் போட்டோஸ்கள் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிடவில்லை என்றாலும் இவருடைய போட்டோஸ்கள் வைரலாக பரவி விடும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட இவர் சமந்தாவின் ரீல் கெட்டப்பில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருந்தார் .

வைரலாய்ருச்சே
அதனைப் பார்த்ததும் பல பேர் காண்டாகி கொதித்தெழுந்து இருந்தாலும் அந்த போட்டோவை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடவில்லை .இவர் போட்டோ ஷூட் எடுத்த நிறுவனம் அந்தப் போட்டோக்களை பதிவிட்டு விட்டனர் அதுதான் வைரல் ஆகி இருந்தது .அதுபோல தற்போதும் இவர் எடுத்த போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications