3 கல்யாணம் பற்றி ஏற்கனவே மனம் திறந்த பவன் கல்யாண்.. அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு திரை உலகில், பவன் கல்யாணின் 3வது திருமண வாழ்க்கையும் முடிவுக்கு வந்திருக்கும் செய்தி தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரஷ்யாவை சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை தான் பிரியப் போவதாக பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டிருந்தார். 13 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறது என்று அவர் போஸ்ட் போட்டதும், அவருடைய பழைய பேட்டிகள் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனது 3 திருமணங்கள் குறித்தும் பவன் கல்யாண் பேசியிருக்கிறார்.

பவன் கல்யாண் அரசியலுக்கு வந்த பிறகு தன்னுடைய திருமணத்தை வைத்து பல விமர்சனங்களை எதிர்கொண்டு இருக்கிறார். குறிப்பாக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அரசியல் மேடைகளிலும் விவாதிக்கப்பட்டது. இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாகத்தான் கடந்த 2023 ஆம் ஆண்டு நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பவன் கல்யாண் மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா நேரடியாகவே பவன் கல்யாணிடம் அவருடைய 3 கல்யாணம் குறித்த சர்ச்சையை பற்றி கேள்வி கேட்டிருக்கிறார்.

Pawan Kalyan

நடிகர் பவன் கல்யாண் விளக்கம்

அதற்கு பவன், உண்மையில் எனக்கு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணம் ஆரம்பத்தில் இல்லை. நான் ஒரு பிரம்மச்சாரியாகவே வாழ வேண்டும், யோக மார்க்கத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த விஷயங்களை திரும்பி பார்க்கும்போது இப்படி எல்லாம் எனக்கு நடந்ததா? என்று நானே ஆச்சரியப்படுகிறேன். வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டு செய்யவில்லை. நடந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்துக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார்.

Pawan Kalyan

திருமணம் பற்றிய சர்ச்சைகள்

மேலும், தன்னுடைய முதல் மனைவி நந்தினி உடனான திருமணம் முழுக்க முழுக்க குடும்பத்தினர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம், ஆனால் உறவு எல்லா நேரத்திலும் எதிர்பார்த்தபடி அமையும் என்று சொல்ல முடியாது. சில விஷயங்கள் ஒத்துப் போகாத போது தம்பதிகள் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்று தனது முதல் திருமண வாழ்க்கை பிரிவு பற்றி பேசி இருந்தார். மேலும் இரண்டாவதாக நடிகை ரேணு தேசாய் உடன் செய்து கொண்ட திருமணத்தை பற்றி பேசும்போது, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது, சில விஷயங்களில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. அதனால் அந்த உறவும் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று கூறி இருக்கிறார்.

3 கல்யாண அனுபவம்

நடிகை ரேணு தேசாயை 2009 ஆம் ஆண்டு பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2012ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய திருமணத்தை வைத்து வரும் விமர்சனங்கள் பற்றி பேசுகையில், நான் அந்த 3 பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ளவில்லை. 3 பேருடன் ஒரே வீட்டில் வாழவும் இல்லை. ஒருவருடன் வாழ்க்கை சரியாக அமையாததால், பிரிந்து அதன் பிறகு இன்னொருவரை திருமணம் செய்து கொண்டேன். அதுவும் ஆசையாலோ மோகத்தாளோ எடுத்து முடிவு கிடையாது.

வாழ்க்கையில் அப்படி நடந்து விட்டது. இந்த திருமண அனுபவங்கள் எல்லாமே வலியை உள்ளடக்கியது என்று அந்த பேட்டியில் பவன் கல்யாண் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+