கமலே பிக்பாஸ் பார்க்குறது இல்லை போல.. மாயாவும், விசித்ராவும் ஒன்னா.. "மய்யம்" தவறிட்டீங்களே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல்ஹாசன் போட்டியாளர்கள் மாயா மற்றும் ஜோவிகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மோசமான போட்டியாளர்கள் தேர்வு காரணமாக முந்தைய சீசன்களை விட இந்த சீசன் சுமாராக இருப்பதாக ரசிகர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இயல்பாக விளையாடாமல் தந்திரத்துடனே நடந்துகொள்வதாகவும், உண்மையாக விளையாடவில்லை என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

அதேபோல் ரவீனா - மணி, ஐசு - நிக்சன், பூர்ணிமா - விக்ரம் என திகட்ட திகட்ட கிரிஞ்சான காதல் காட்சிகளை காண சகிக்கவில்லை என மீம்ஸ்களை அள்ளி தெளித்து வருகிறார்கள். பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமான போட்டியாளராக பார்க்கப்பட்டவர் பிரதீப்தான். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகரிக்கவே அவரிடம் உள்ள சில குறைகள், அவர் பேசும் விதம், வார்த்தைகளை வைத்து பெண்களுக்கு அவரால் பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை கொண்டு வந்தது மாயா, பூர்ணிமா குழு. இவர்கள் சக போட்டியாளர்களை சேர்த்துக்கொண்டு பிரதீபுக்கு எதிராக அணி சேர்த்தனர்.
கடந்த வாரம் இவர்கள் பிரதீப்புக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க எபிசோடில் கமல்ஹாசனும், பிரதீபை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற சொன்னார். பிரதீப்புக்கு ஆதரவாகவும், கமல்ஹாசன், மாயா, பூர்ணிமா ஆகியோருக்கு எதிராகவும் பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்த வாரம் முழுவதுமே பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்டது தொடர்பாகவே விவாதங்கள் தொடர்ந்துகொண்டு இருந்தன. சமூக வலைதளங்களிலும் கமல்ஹாசனுக்கு எதிரான பதிவுகள் அணிவகுத்தன.

இந்த நிலையில் இந்த சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகளிலும் பிரதீப் வெளியேற்றத்தை தொடர்ந்து வீட்டில் மாயா அணிக்கும் - விஜே அர்ச்சனா அணிக்கும் இடையிலான மோதலே முக்கிய பேசுபொருளாக இருந்தது. சனிக்கிழமை எபிசோடில் பிரதீப் வெளியேற்றத்துக்கான தன்னிலை விளக்கத்தை கமல்ஹாசன் மக்கள் முன்பு தெரிவித்தார். ஆனால், அவர் தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் வகையில் பேசியதாகவும் ஒரு சார்பாக நடந்துகொள்வதாகவுமே பலர் விமர்சித்து வருகிறார்கள்.
#Vishnu to #Maya - Even though Audience supported #Vichithra #Archana #Dinesh , Kamal still supported you and #Poornima co. only !!#BiggBossTamil7 #BiggBossTamil #BBTamilSeason7
— Ganesh (@Ganesh_Gansi) November 13, 2023
குறிப்பாக மாயாவும் பூர்ணிமாவும் சக போட்டியாளர்களை நக்கல் நய்யாண்டி செய்தே நேரத்தை கடத்தி வருவதால் அவர்களை புல்லி கேங்க் என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதில் மாயா அடல்ட் பேச்சுக்களை பேசுவதாகவும், சக போட்டியாளரான நிக்சனுக்கு உள்ளாடையை காட்டியதாகவும் விமர்சனங்கள் உள்ளன. அதேபோல் வனிதாவின் மகளான ஜோவிகா தன்னைவிட வயது அதிகமானவர்களை ஒருமையில் பேசுவதும், மரியாதைக் குறைவாக பேசுவது, சைகை காட்டுவது, மிரட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
Vishnu exposed Kamal's KURUPISM #BiggBossTamil7 #BiggBossTamil https://t.co/OGTqZQfMK9
— Ellan23 *writting fanfic* (@JayVixen2) November 13, 2023
குறிப்பாக பிரதீப், விஷ்ணு, விசித்திரா போன்ற போட்டியாளர்களிடம் ஜோவிகா நடந்துகொண்ட விதம் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருந்தது. பிரதீப்புக்கு எதிராக சாட்டையை சுழற்றிய கமல்ஹாசன், மாயா, ஜோவிகாவின் நடவடிக்கைகளையும் கண்டிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பிரதீபிடம் காட்டிய கடுமையை இவர்களிடம் காட்டாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.
#KamalHassan #Pradeep ku WOMEN SAFETY ku red card kuduththu correct nu nenechurunthaa naan thaan kuduthennu thilla ah pesi iruppaar naan vachen contestants thaan kuduthaangannu jalliadichurukka maattar #BiggBossTamil7#BiggBossTamil
— oosi pattasu (@oosipattasu) November 13, 2023
இந்த நிலையில்தான் கமல்ஹாசான் மாயா மற்றும் ஜோவிகாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையே பார்ப்பது இல்லை என்றும், அதனால்தான் இவ்வாறு நடந்துகொள்வதாகவும் கூறுகிறார்கள். அநாகரிகமாக நடந்துகொண்ட மாயா, ஜோவிகாவையும் அவர்களுக்கு எதிர்வினையாற்றிய விசித்ரா, விஜே அர்ச்சனாவையும் கமல்ஹாரன் ஒரே தட்டில் பார்த்து வீக் என்ட் எபிசோடில் அறிவுரை செய்ததை பலரும் ரசிக்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications