Mega Serials: வேணாம் மக்களே வேணாம்... டிவி மெகா சீரியல்!
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுனில் நிறைய விஷயங்களுக்கு நாம் பழக்கப்பட்டு விட்டோம். இதில் ஒன்றாக இந்த மெகா சீரியல் இல்லாமலும் பழக்கப்பட்டு இருக்கிறோம். உடல் நலம் கெட்டு மன நலம் கெட்டு போன இந்த மெகா சீரியலை இனியாவது ஒதுக்கலாமே!
இதிகாச புராதன கதைகள் கொண்ட சீரியல்கள் தவிர மற்ற மெகா சீரியல்களால் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலமும் இல்லை என்பதுதான் உண்மை. அதற்காக சீரியல்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை...10 எபிஸோட்ஸ்..12 எபிஸோட்ஸ் என்று இருந்தால் நன்றாக இருக்கும்தானே!
அர்த்தமில்லாமல், போகிற போக்கில் எல்லாம் வளைந்து சென்று மக்களுக்காக மக்களுக்காக என்று சொல்லி, அவர்களின் நாடி பிடித்துப் பார்த்து சீரியல்களின் எபிசோட்களை கொண்டு போகிறோம் என்று தாங்களே தங்களுக்கு நொண்டி சாக்கு சொல்லி பயணிக்கிறார்கள்.

அப்பாடா ஒரு மெகா சீரியல்!
நடிகர் நடிகைகள் அப்பாடா ஒரு மெகா சீரியல் கமிட்டாயிருச்சு என்று நிம்மதி பெரு மூச்சு விட்டுக்கொண்டு மெகா சீரியலில் கமிட்டாகி கார், வீடு என்று வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைப்பார்கள்.

மெகா சீரியல் இயக்குநர்
மெகா சீரியலில் கமிட்டான இயக்குநர். நல்ல பிரடியூசர்...இந்த டிவியில் நல்லா ரீச் ஆகும்...மெகா சீரியல் கமிட்டாகியாச்சு...மக்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி கதையில் திருப்பங்களை வைத்து ஜவ்வு மாதிரி ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு இழுத்து இதில் பல வருஷத்தை ஓட்டிடலாம் என்று நினைத்து மெகா சீரியலில் இயக்குநர் களம் இறங்குவார்.

நல்ல ரேட்டிங்
சீரியலை நல்ல ரேட்டிங்கில் கொண்டு போவதில் இயக்குநர் கைத்தேர்ந்தவரா இருக்கார். முதலீடு போட்டுவிட்டோம்.. இப்படியே சில வருஷங்கள் சீரியலை கொண்டு போயிடலாம். விளம்பரம்...வியாபாரம்..ஸ்லாட் என்று சில வருஷங்களுக்கு அலைய வேண்டியதில்லை என்று மெகா சீரியல் பிரடியூசர் நினைப்பார்.

ஸ்லாட் டைம் ஓகே
இந்த மெகா சீரியலுக்கான ஸ்லாட் டைம் நல்ல ரேட்டிங்கில்தான் இருக்குது. இப்போ எதுக்கு வேறு ஒரு சீரியலுக்கு ஸ்லாட் விலை பேசுவானேன்...நல்லாத்தானே போகுது.. போற வரைக்கும் போகட்டும் என்று சானல் நினைக்கும். இப்படி சங்கிலி பின்னலில் இருக்கும் மெகா சீரியலால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கா?

ஒன்றை தவறவிட்டால்
மெகா சீரியலில் ஒரு எபிசோட் இல்லை ரெண்டு எபிசோட் இல்லை.. பல எபிசோட் நீங்கள் தவற விட்டு இருந்தாலும், அடுத்த எபிசோட் பார்க்கும்போது அந்த கதை புரிந்துவிடும். இதற்கு எதற்கு அங்கு இங்கு போகாமல் மெகா சீரியல் கதி என்று கிடக்க வேண்டும்? வீட்டை விட்டு அங்கு இங்கு போக விடாமல் செய்த மெகா சீரியல்கள் உடலும், மனதுக்கும் கேடு விளைவிப்பவை.

குறுந்தொடர் போதும்
இனி மெகா சீரியல் வேண்டாம்... குறுந்தொடர்கள் மட்டும் பொழுது போக்குக்கு போதும் என்கிற மன நிலைக்கு வாருங்கள் மக்களே...குடும்பத்தையும் கவனிக்க முடியும்...விருந்தினர் வீட்டுக்கு... கோயிலுக்கு என்று உங்கள் பொழுதை நல்ல வழியில் கழிக்கவும் முடியும்...ஒரு முடிவுக்கு வந்துவிடுங்கள்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications