Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கலர்ஸ் டிவியின் கருப்பு கயல் இப்போ பல பேரோட கனவுக்கன்னியாம்! #perazhagi

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பேரழகி சீரியல் மனதை கொள்ளை கொள்ளும் கருப்பழகி கயல்- வீடியோ

    சென்னை: கலர்ஸ் டிவியின் கருப்பழகி கயல்தான் இப்போது பலரோட கனவுக் கன்னியாம். அந்த அளவுக்கு பார்ப்பவர்களின் மனதில் அந்த கேரக்டர் அப்பிக் கொண்டு விட்டதாம்.

    கலர்ஸ் டிவி ஆரம்பிச்ச புதுசுல எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம்தான் டிவி பாப்புலராச்சு. கூடவே அந்த டிவி, தொடர்களை ஒளிபரப்பி, கவனத்தை திசை திருப்ப முடியாம மக்களை கட்டிப் போட்டது. அதில் ஒரு ஹிட் தொடர்தான் பேரழகி. அதில் வரும் கயல் இப்போது ரொம்ப பாப்புலர்.

    பொண்ணு கருப்பா இருக்கு, சவரன் கூட போடுங்கன்னு மாப்பிள்ளை வீட்ல கேட்டா, எங்க பொண்ணு கறுப்புதாங்க. நீங்க லண்டன், அமெரிக்கா பக்கம் போய் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாங்க.அவங்க 'கருப்புதான் எனக்கு புடிச்ச கலருன்னு உங்களை டைவர்ஸ் பண்ணிட்டு கருப்பு பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்குவாங்க' ன்னு பேரழகி பார்த்த ஒரு குடும்பத்துல பெத்தவங்க சொன்னாங்களாம்.

    பேரழகியின் நிறம்

    பேரழகியின் நிறம்

    கதை மாதிரி சொன்னா கதையாகிருமா? நிஜம்!. பேரழகியில் பிரமிக்க வைப்பது அந்த கயல்தான். ரொம்ம்ம்ப கருப்பா ஒரு பொண்ணு. கண்ணாடியை மட்டும்தான் நேசிக்கும், தான் அழகுன்னு கண்ணாடி சொல்றதா கற்பனை. இந்த கேரக்டர்தான் அத்தனை பேரையும் கவர்ந்து விட்டது.

    கருப்பு தான் நிஜம்

    கருப்பு தான் நிஜம்

    பேரழகி தொடர் வந்த போதே இது ஹிட் ஆகி விட்டது. காரணம், அந்த கேரக்டரை இயக்குநர் வடிவமைத்திருந்த விதம். கருப்பு நிறம் என்பது இன்றும் கூட பலரால் வெறுக்கப்படும், ஒதுக்கப்படும் நிறமாகவே இருக்கிறது. ஆனால் கருப்புக்குள்தான் வெண்மை, உண்மை, வெகுளித்தனம் என எல்லாமே கலந்திருக்கிறது என்பதை பலரும் உணர்வதில்லை.

    சந்தித்த சவால்கள்

    சந்தித்த சவால்கள்

    இந்த சீரியலில் வரும் போதும் பொண்ணு.. அதுதாங்க நம்ம கருப்பு கயல்.. சந்தித்த புயல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அதையெல்லாம் தாண்ட அவர் வென்றதற்கு அவரது மன உறுதியும், வைராக்கியமும்தான் ஒரு முக்கியக் காரணம். ஒருவருக்கு இருக்க வேண்டிய முக்கிய சொத்தே இந்த மன உறுதிதான் என்பதை இயக்குநர் அழகாக சொல்லிக் கொண்டு போகிறார்.

    ஜொலிக்கும் தாரகை

    ஜொலிக்கும் தாரகை

    இப்போது இந்த கருப்புப் புயல் ஒரு நடிகையாகி விட்டார். இங்கும் கூட அவருக்கு ஏகப்பட்ட சவால்கள்கள்தான். இவருக்காக தவம் கிடக்கும் தயாரிப்பாளர்கள் ஒருபக்கம், சவால்கள் மறுபக்கம். எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு சர்ச்சையான நிகழ்ச்சி நடத்தி பேரைக் கெடுத்துக்கிட்டாலும், கருப்பு, சிவப்பு எல்லாம் ஒரு விசயமே இல்லைன்ற மாதிரி பேரழகின்னு சீரியலை ஆரம்பிச்சு, அது போடு போடுன்னு போடுதாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+