Ponnukku thanga manasu serial: ஹல்வா என்றாலே.. ஆனால் இது சத்யராஜ் ஹல்வா இல்லை!
சென்னை: ஹல்வா என்றாலே இன்னும் கூட நடிகர் சத்யராஜ் நினைவுதான் பலருக்கும் வரும். அமைதி படை படத்தில் சத்யராஜ் கஸ்தூரிக்கு ஹல்வா கொடுத்து கரெக்ட் பண்ணி விடுவார்.
கஸ்தூரி அந்த படத்தில் வெகுளிப் பெண்ணாக ஹல்வாவை ருசித்து சாப்பிடும் அழகும், சத்யராஜ் கள்ளத்தனமாக ரசிக்கும் தனி பாணியும் அருமையான காட்சி.
ஹல்வாவை மக்கள் மத்தியில் வேறு விதமாய் சத்யராஜை வைத்து பதிய வைத்த மறைந்த மணிவண்ணன் மறக்க முடியாத பல படங்களை தந்த வெற்றி இயக்குநர்.

தங்க மனசு இல்லை
விஜய் டிவியின் பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் மாமியாரான பொண்ணுக்கு இல்லை தங்க மனசு. வரதட்சணை கொண்டு வரவில்லை என்று மருமகளை திட்டித் தீர்க்கும் மாமியார். இவங்களுக்கு அடங்கி அடங்கி வாழ்ந்து வந்த மருமகளுக்கு தங்க மனசுதான் என்றாலும், ஒரு கட்டத்தில் மாமியாரை எதிர்க்கும் துணிவு வந்துவிடுகிறது.

மருமகளை மகனுடன்
மருமகளை தனது பிள்ளையுடன் சேரவிடாமல் பார்த்துக் கொள்ளும் பணியை மாமியார் கன கச்சிதமா செய்துகிட்டு வந்தாலும், அவங்க கண்களில் மண்ணைத் தூவி சந்தோஷமா இருக்கிற மாதிரியான தோற்றத்தை உண்டாக்கிட வேண்டும் என்று மருமகள் திட்டம் போட்டு ஆரம்பிக்கிறாள் நாடகத்தை.

ஹல்வா சீன்
புருஷனுக்கு சாப்பாடு கொண்டு போகிறேன் என்று அவனது பேக்கில் ஹல்வா,ஜாதி மல்லி பூவை தானே வைக்க சொல்லிவிட்டு, மாலை அவனை நடு ஹாலில் மறித்து, ஹல்வாவை இங்கேயே குடுங்க.எதுக்கு ரூமில் ஒளிச்சு வச்சு நமே சாப்பிடணும்னு சீன் போடுகிறாள்.ஹாலில் மாமனார், அடுத்து வந்த மருமகள் என்று கூடி இருக்கிறார்கள். மாமியார் மட்டும் மிஸ்சிங். ஹல்வா ரொம்ப நல்லாருக்குங்க.. இந்தாங்க மாமா நீங்க சாப்பிடுங்க, தம்பி உங்களுக்கு வேணுமான்னு கேட்டு புருஷனின் தம்பி பொண்டாட்டியை வெறுப்பேத்தறா.

தவிக்கும் புருஷன்
நாம் அம்மா பேச்சை கேட்டுக்கிட்டு பொண்டாட்டி கூட ஒட்டாமாத்தானே இருக்கோம்.இவ என்ன இப்படி பண்றாளேன்னு புருஷன் தவிப்புடன் நிற்க,தம்பி பொண்டாட்டி தம்பியை வெறுப்பேத்தறா. அவரை பார்த்து கத்துக்கோ என்பது போல.. தம்பி, என்னண்ணா உங்க ரொமான்ஸை ரூமில் வச்சுக்க கூடாதா? அவளை நான் எப்படி சமாளிப்பேன்னு கத்தறான்.

விஷயமே வேறடா
விஷயமே வேறடான்னு அண்ணன் அலுத்துக்க, இவள் ஹல்வாவை எடுத்துக்கிட்டு ரூமுக்கு போறேன்..நீங்க வாங்கன்னு சொல்லிட்டு மாடிப் படியில் குஷியுடன் ஏறிப்போகிறாள். ஒன்னும் தெரியாத புருஷன் பின்னாலே போயி, இவ இன்னிக்கு என்ன புதுசா இப்படி பண்றாளேன்னு நினைச்சுக்கறான்.

சந்தோஷம் புருஷன்
உள்ளே போயி பேசாம படுத்து தூங்க..அவனது தம்பியின் பொண்டாட்டி ரூமில் என்ன நடக்குதுன்னு ஒட்டு கேட்கறா. இதை தெரிஞ்சுக்கிட்ட இவள், புருஷன் கூட சந்தோஷமாயிருக்கற மாதிரி இப்போ சீன் போடணும் என்ன பண்றதுன்னு யோசிச்சு ஒரு வழியா ஐடியாவுக்கு வந்துட்டறா.

உங்க பிள்ளை
அவன் சட்டை பட்டனில் தன் தலை முடியை அப்படியே சுற்றிவிட்டு, அய்யோ மாட்டிக்கிடிச்சு என்னங்க ஏங்க இப்படி பண்றீங்கன்னு இவள் கேட்கிறாள். அவன் விழித்து எழுந்து இரு இரு எடுத்து விடறேன் இருன்னு சொல்றான். இப்படி ஒரே கொஞ்சலிக்கெஞ்சல்போலப்பேச்சு போக..இங்கே வெளியில் ஒட்டு கேட்கும் ஓரகத்தி கர்மம் கர்மம் என்று தலையில் அடிச்சிருக்கறா.அப்பறம் என்ன, மாமியார் கிட்டே போயி, உங்க மூத்த பிள்ளை உங்க பேச்சை ஒண்ணும் கேட்கலை. பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்கார்னு வத்தி வைக்கிறா. அப்படியா விஷயம் நான் பார்த்துக்கறேன்னு சொல்றாங்க மாமியார்.
விஷயம் பத்திக்கிச்சு!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications