ஆஹா.. மருமகளோட இடுப்புல சாவிக்கொத்து வேலை செய்யுது டோய்!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் சின்ன மருமக பூர்ணா ரொம்ப அடமன்ட். முதலில் ரொம்ப நல்ல பொண்ணாத்தான் இருந்தா. தான் ஆசைப்பட்ட ரவி அத்தானை தனக்கு கல்யாணம் செய்து வைக்கலன்னு ஆரம்பிக்குது அவளுக்கு கோபம், பொறாமை எல்லாம்.
பதிலாக மகேஷ் அத்தானை கல்யாணம் செய்து வேற வச்சுடறாங்க. ரவி அத்தானை கல்யாணம் செய்துகிட்ட சுதாவை வீட்டை விட்டு வெளியேத்தணும்னு அவ துடிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான் அவளுக்கு தான் ஒரு அனாதைன்னு தெரிய வருது.
இப்போ இந்த குடும்பத்தை விட்டு தான் போகணும்னு துடிக்கறா. பூர்ணா இந்த வீட்டை விட்டு போக அனுமதிக்க மாட்டேன்னு அழகம்மை போட்ட கேஸ்ல பூர்ணா புகுந்த வீட்டுலதான் இருக்கணும்னு தீர்ப்பு வருது.

அழகம்மை குண்டு
சாமி கும்பிட வர்லியான்னு அழகம்மை பூர்ணாவிடம் கேட்க, நேத்து என்னவோ இன்ப அதிர்ச்சி குடுக்க போறேன்னு சொன்னீகிகளே அது என்ன, நானும் ஒரு இன்ப அதிர்ச்சி வச்சிருக்கேன்னு சொல்றா பூர்ணா. இந்தா இந்த சாவிக் கொத்தை நீ வச்சுக்கோ.. இத்தனை நாள் சுதாவிடம் குடுத்து இருந்தேன். இப்போ நீ மூத்த மருமகளா இருந்து எல்லாத்தையும் கவனிச்சுக்கன்னு சொல்றாங்க அழகம்மை. நான் ஒரு இன்ப அதிர்ச்சி தரேன்னு சொன்னேனில்ல.. இந்தாங்க நானும் மகேஷும் மியூச்சுவலா விவாகரத்து அப்ளை பண்ண போறோம்னு பூர்ணா குண்டைத் தூக்கி போடறா.

விட மாட்டேன்
பூர்ணா நீ ரொம்ப ஓவரா போறே.. இதுக்கு நான் ஒத்துக்குவே மாட்டேன். இப்போ டிவோர்ஸ் பண்ணிட்டு, மறுபடியும் கல்யாணம் செய்துக்க போறாங்களாம். அப்போ மட்டும் மகேஷ் என் மகன், நீ என் மருமகள்னு இல்லாம போயிருமான்னு சொன்ன அழைக்கம்மை.. இந்த சாவிக்கொத்து இனிமே உன் பொறுப்புன்னு சொல்லிட்டு போயிடறாங்க.

சாவிக்கொத்து
அடடா பொம்பளைங்களுக்கு மட்டும் இந்த சாவிக்கொத்து இடுப்புக்கு வந்துட்டா அது பலே பலே வேலைப்பார்க்குது. அது மாதிரிதான் இங்க பூர்ணா காலையில பொறுப்பா எழுந்து, காபி போட்டு எல்லாருக்கும் குடுக்கறா. சமையல் செய்யறா..

ரவி அப்பா
அழகு பூர்ணா உன்னைவிட சூப்பரா காபி போட்டு இருக்கா அழகு. எப்படி அழகு சாவிக் கொத்தை குடுத்தா மனசு மாறும்னு தெரிஞ்சுக்கிட்டேன்னு கேட்கறார் ரவி அப்பா. பூர்ணா தான் பொறுப்பை சுமக்கனும், எல்லாரும் தன்னை பாராட்டணும்னு நினைக்கறவ ரவி அப்பா. இதை நான் முன்பே செய்திருக்கனும்னு சொல்றாங்க அழகம்மை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications