Azhagu Serial: சே.. என்ன பொண்ணு இந்த பூர்ணா?
சென்னை: சே என்ன பொண்ணு இந்த பூர்ணான்னு கேவலப்படும் அளவுக்கு நிலைமை போனாலும், சுதா அவளை விட்டுக் கொடுப்பதாக இல்லை.
நிலைமை இப்படி சீரியஸான கட்டங்களை நோக்கி சென்று கொண்டு இருந்தாலும், கதையின் முக்கிய கதாபாத்திரமான அழகம்மை அதாவது ரேவதி கடந்த ஒரு வார எபிசோட்களில் இல்லவே இல்லை.
சன் டிவியின் அழகு சீரியலில்தான் இந்த நிலைமை இப்போது ஓடிகிட்டு இருக்கு...

அழகம்மை அழகு
அழகு சீரியலில் பொம்மை மாதிரி அழகாக அவ்வப்போது வந்து போகிறார் நடிகை ரேவதி. சீரியலின் மொத்த பாரத்தையும் தூக்கி சுமப்பவர் சுதாதான். சீரியல் நடிகை ஸ்ருதிக்குத்தான் முக்கிய கதாபாத்திரம். அழகம்மை சீரியலுக்கு அழகு சேர்ப்பவர் என்று சொல்லிக்கலாம்.

பூர்ணா தங்கை
சுதாவின் தங்கை பூர்ணா என்று தெரிந்ததும். அவள் செய்யும் அத்தனை தவறுக்கும், துணை போகும் கதாபாத்திரம் சுதாவுக்கு. ஒரு பொண்ணு எந்த தவறை எல்லாம் செய்யக் கூடாதோ.. அத்தனை தவறையும் செய்துவிட்டு தெனாவெட்டாக இருக்கும் பூர்ணா...சே.. என்ன பொண்ணு இந்த பூர்ணான்னு சொல்ல வைக்கிறாள்.

உப்பு சப்பு
சில சமயம் இவள் செய்யும் மாபெரும் தவறுகளுக்கு இவளே சொல்லிக் கொள்ளும் காரணங்கள் உப்பு சப்பு இல்லாமல் இருக்கின்றன. பிரியாவுக்கும் புருஷனுக்கும் எந்தவித உறவும் இல்லைன்னு தெரிஞ்சும் கூட, பிரியாவை பூர்ணா கொலை செய்ய நினைப்பது என்பது அறியாமையின் உச்சம்.

காயத்ரி ஜெயராம்
காயத்ரி ஜெயராம் தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து அதை விட்டுக் கொடுக்காமல் காட்சிக்கு தேவையானபோது வந்து நடித்து இருப்பது சற்று ஆறுதலான விஷயம். ரேவதிக்கு இவர் எவ்வளவோ தேவலை என்று சொல்லலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications