அழகம்மை மருமக பூர்ணா சகுந்தலா தேவி மகளாமே... ஐயோ சாமி!
சென்னை: ஏங்கண்ணு சன் டிவியின் அழகு சீரியலில் ரெண்டாவது மருமக பூர்ணா இருக்குதல்லோ, அந்த புள்ளையோட அம்மா, லாயர் சகுந்தலா தேவின்னு சொல்லிப் போட்ருக்காவிய..
அழகம்மை ரொம்ப நல்லவிங்க ...அதென்னமோ இந்த புள்ளை பூர்ணாவுக்கு புடிச்சு போடலையாமா.. எப்ப பாரு கண்ணு.. சண்டை சச்சரவுன்னு குடும்பத்தையே என்ற வூட்டு ஆட்டு , உன்ற வூட்டு ஆட்டு இல்லீங்க ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டி படைக்குதுங்க.

இந்த நேரம் பாருங்க.. அம்புட்டு பெரிய லாயர் சகுந்தலா தேவி தொலைச்சுப்போட்ட ரெண்டாவது புள்ளைத்தான் பூரணங்களாம். ஏற்கனவே எட்டிக்காய் கணக்கா அழகம்மையை கண்டா இவிய ரெண்டு பேருக்குமே ஆவாது.
இப்போ தாயும், மகளுமா இருந்து ஆட்டம் காட்டிப் போடப்போறாங்க.. அழகம்மையை என்ன பண்ணுவாங்களா..குடும்பத்தையே கோர்ட்டுக்கு இழுத்து போட்டு போடுவாங்க கண்ணு..

சுதா பெத்த புள்ள மாணிக்கம் வாத்தியாரு வாரிசு இல்லை. இப்போ இந்த கண்ணு இங்க வந்திருச்சே.. இனி பூர்ணா வகுத்துல வளருதே அந்த குழந்தையை கலைச்சு போட்ருவாங்களா..

என்னங்க கண்ணு ஒன்னும் புரியலை.. வகுத்துலு வளர்ற குழந்தை ஏதும் பாவம் செய்யலைன்னு படிச்சவதானுங்களே பூர்ணா...அதுக்கு அறிவுங்ககூடியும் வேலை செய்யலியே.. பெத்து குடுக்க மனசில்லேன்னு சொல்லுதே..குழந்தையை பெத்த தாய் மட்டுமே வளர்க்க கூடாதுங்களா...
என்ன வேணா அழகம்மைய பழி வாங்குங்க.. அவிங்க மூத்த மருமக சுதா.. அந்த கண்ணு இவியலா சும்மா வுடாதுங்க. இனிமேல்ல இருக்குது அந்த புள்ள ஆட்டம்.. என்ன கண்ணு நான் சொல்லுறது...அழகம்மைக்கு ஆளா இல்லை...உக்கும்ன்னனாம்...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications