Azhagu Serial: சொன்னோம்ல...பூர்ணா திருந்திட்டா கதையே இல்லைன்னு!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் பூர்ணா கேரக்டர் திருந்திட்டா அழகு சீரியலுக்கு கதையே இல்லையே என்ன பண்ணுவாங்கன்னு கேட்டு இருந்த மாதிரியே, பூர்ணா திருந்துவது போல நடிச்சு இருக்கா. இதை இன்றைய எபிசோட் ப்ரோமோ சொல்லுதுங்க...!
அழகு சீரியலில் என்னதான் ஸ்டார் காஸ்டா நடிகை ரேவதி இருந்தாலும், கதை என்னவோ சுதா, பூர்ணா, சகுந்தலா தேவி இவர்களை சுற்றித்தான். ரேவதி அழகம்மையாக டைட்டில் கதாபாத்திரமாக நடித்தாலும், அவர் மீது மொத்த சுமையையும் கதைக்குழு போடவில்லை.
அவ்வப்போது வந்த போனால் போதும் என்கிற நிலைதான் ரேவதி கதாபாத்திரத்துக்கு. கதை இவரை சுற்றி இல்லாமல் வேறு பாணியில் பயணிக்கிறது. ரேவதி இல்லாதது அழகு சீரியலுக்கு குறை ஒன்றும் இல்லை என்பது போலத்தான் இருக்கிறது.

நடக்க முடியாத பூர்ணா
ஜெயிலுக்கு போன பூர்ணா திருந்தி வருவாள் என்று எதிர்பார்க்க, எதிர்பாராத விதமாக பூர்ணாவுக்கு ஜெயிலில் பிரச்சனை வந்து விடுகிறது. ஒரு ரவுடி பொம்பளை புருஷனை போட்டுத் தள்ளிட்டேன்னு ஜெயிலுக்கு வருது. அந்த அம்மா பூர்ணாவை கண்டபடி அடித்து போட்டுவிடுகிறது. இதனால் படு காயம் அடைந்த பூர்ணாவுக்கு முதுகெலும்பு உடைந்து போய் நடக்க முடியாமல் போகிறதாம்.

டாக்டரும் உறுதி
டாக்டரும் இதை உறுதிப்படுத்தி பூர்ணாவால் நடக்க முடியாது என்று கூறுகிறார். இதனால் பூர்ணா வீல்சேரில் வீட்டுக்கு வரும்படி ஆகிறது. கேஸ் ஒண்ணுமில்லைன்னு உடைச்சுட்டாங்களாம். பூர்ணா திருந்தின மாதிரி வீட்டுக்கு வர்றா. எல்லாரும் நம்பிடறாங்க. இப்போ பார்த்தால் இன்றைய ப்ரோமோவில், பூர்ணா நடிப்பதை சுதா கண்டுபிடித்து விடுகிறாள். அவள் போட்ட டான்ஸை செல்போன் வீடியோ எடுத்து பூர்ணாவிடமே காட்டுகிறாள்.

ஜெயிலில் புருஷனை
ஜெலியிலில் பூர்ணா வேண்டும் என்றே ஒரு பெண்ணை செட்டப் செய்து அவளிடம் அடிவாங்குவது போல நடித்து இருக்கார் என்றால், அந்த செட்டப் பெண் புருஷனை போட்டுத்தள்ளிட்டு ஜெயிலுக்கு வந்துட்டேன்னு சொல்லுவது போல் காண்பிச்சு இருப்பதற்கு பதில்தான் என்ன? எதையாவது கதையில் கொண்டு வந்துவிட்டு, அத்தோடு அதை மறந்துவிடுவீர்களா?

ஜென்டில்மேன் அக்ரிமெண்ட்
செல்போனில் பூர்ணாவின் ஆட்டத்தை பதிவிட்டுவிட்டு அவளிடம் காண்பிக்கும் சுதா மற்றவர்களிடம் இதை காண்பிப்பாளா ... இல்லை இன்னும் ஒரு தடவை ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் என்று பூர்ணா சுதாவிடம் பேசி, உன்னை எப்படியாவது இந்த வீட்டை விட்டு துரத்துவேன்னு அதுவரைக்கும் இதை யார்கிட்டேயும் சொல்லக் கூடாது என்று மறுபடியும் சீரியலை இழுக்க இப்படி காட்சிகளை வைப்பார்களா? என்ன இருந்தாலும் இழுவை தாங்க முடியலை... இதுவே சீரியல் கதை என்றால்.. என்னத்த சொல்ல!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications