Kanmani: விஜிம்மாவுக்கு பிறந்த நாள்.. குவிஞ்சு போச்சு வாழ்த்துகள்.. மேடம் செம ஹேப்பிங்க!
சென்னை: எண்பதுகளில் கனவு நாயகியாக இருந்த பூர்ணிமா பாக்கியராஜ் தற்போது சின்னத்திரையில் அம்மா கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
அவருக்குப் பிறந்த நாள். விடுவார்களாக ரசிகர்கள், அவரது பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களும் இணையதளத்தில் வாழ்த்துக்களை குவித்து விட்டார்கள். பூர்ணிமாவின் மகன் நடிகர் சாந்தனு போட்ட பிரமாதமான வாழ்த்துகளுடன் மற்றவர்களின் வாழ்த்துகளும் சேர்ந்து கொண்டன.
இதில் ஹைலைட் என்னவென்றால் சின்னத்திரையின் மகாராணியாக வலம் வரும் ராதிகா அனுப்பிய சிறப்பான் கேக்தான். சூப்பர் சர்ப்பிரைஸாக அந்த கேக் வந்து மகிழ்வித்து விட்டதாம்.

பிரபல நாயகி
சினிமா துறையில் அந்த கால கட்டங்களில் காதலித்து திருமணம் செய்தவர்களில் இவரும் ஒருவர் இவரது திருமண வாழ்க்கை இன்று வரையிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவரது கணவரான பாக்கியராஜ் இயக்குனர் நடிகர் அப்படின்னு எல்லாருக்குமே தெரியும் இவர் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் இந்தி தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களிலும் நடித்திருக்கிறார்.

அந்தக் காலத்து ஹீரோயின்
இவரது தந்தை பட்டுக்கோட்டையை சேர்ந்தவர், தாயார் மும்பையில் பிறந்து வளர்ந்த பிராமணப் பெண் ஆவார். பெண்கள் வேலைக்கு செல்வதையே விரும்பாத காலகட்டங்களில் இவர் நடிக்க வந்து முன்னணி நடிகையாக ஜெயித்திருக்கிறார். 1984 இல் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரான கே பாக்யராஜ் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யா ஆவர்.

எம்ஜிஆர் சிவாஜி வாழ்த்து
திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாள்கள் நடிப்பதை விட்டுவிட்டு வீட்டில் இருந்த இவர் இப்போ சீரியல்களில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இவரது திருமணத்தை இவரால் ஒருபோதும் மறக்க முடியாது ஏனென்றால் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒரு புறம் என்றாலும் இவர்களுக்கு மனதுக்கு பிடித்த தலைவர்கள் வந்து இவர்களை வாழ்த்தியது இவரால் மறக்க முடியாதாம். இவர் திருமணத்திற்கு இவரும் இவரது கணவரும் எம்ஜிஆரை நேரில் சென்று அழைத்து இருக்கிறார்கள். அவர் சொன்னபோது போலயே இவருடைய திருமணத்திற்கு கரெக்டாக வந்திருக்கிறார்.

கண்மணி சீரியல்
அதுபோல சிவாஜிகணேசனும் கலந்து கொண்டிருக்கிறார் .அவர் மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்திருக்கிறார்கள். எம்ஜிஆரும் சிவாஜியும் ஒன்றாக வந்து இவர்களை ஆசிர்வாதம் பண்ணினது இவர்களால் மறக்கவே முடியாத தருணமாக அமைந்திருக்கிறது. சீரியல் மற்றும் திரைப்படங்களில் பிஸியாக இருந்த இவர் லாக்டோன் டைம்ல வீட்டில் மறுபடியும் அமைதியாக இருந்தார்.

புதுசு புதுசா கத்துக்கிட்டார்
இது அவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்திலும் இவர் தெலுங்கு கற்றுக் கொண்டு தன்னோட ஓய்வு நேரத்தை பயன்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு மலையாளம் மற்றும் மராத்தி தெரியும். இதுபோக சமையலையும் புதுசு புதுசாக கத்துக் கொண்டிருந்தாராம். மேலும் புதுசு புதுசாக கத்துக்கிட்டா நம்மளுடைய திறமையும் நம்மளோட தன்னம்பிக்கையும் வளர்க்கும். அதனால் எந்த நேரத்திலும் எவ்வளவு வயதானாலும் கத்துக்கிறத மட்டும் நிறுத்தக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

தொழில்நுட்ப வளர்ச்சி
இப்ப இருக்கிற சினிமா நடிகர்கள் எல்லாமே கத்துகிட்டு தான் நடிப்பதற்கு வருகிறார்கள். நாங்கெலாம் நடிப்பதற்கு நுழையும்போது நடிப்பை பற்றியோ தொழில்நுட்பங்களை பற்றியோ ஒன்றுமே தெரியாமல் தான் நடிக்க வந்தோம். இப்ப இருக்கிறவர்கள் ஸ்கிரிப்ட் முதல் கேமரா கோணம் வரை நன்கு அறிந்திருக்கிறார்கள். இவங்க இவ்வளவும் கத்துக்கிட்டது தொழிநுட்பமும் ஒரு காரணம் இணையம் மற்றும் ஆன்லைன் பயன்படுத்துவதால் ஈசியாக கத்துக்க முடிகிறது என்று கூறியிருக்கிறார்.

கண்மணி சீரியலில் நடிப்பு
சன் டிவியில் முன்னணி சீரியல் ஆன கண்மணி சீரியலில் இவர் விஜயலட்சுமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த கேரக்டர் இவருக்கு முழுமையாக பொருந்தியிருக்கிறது. இந்த சீரியலில் சஞ்சீவ் கண்ணனாகவும் லிசா கதாநாயகி சௌந்தர்யாகவும் நடித்திருக்கிறார்கள். இதில் கண்ணனின் அக்காவாக சௌந்தர்யாவின் அம்மாவாகவும் இவர் நடித்திருக்கிறார். தன் தம்பியின் மீது பாசத்தைக் கொட்டுவதிலும் தன் மகளின் வாழ்க்கையை நினைத்து உருகுவதும் இவருடைய நடிப்பு மிக கச்சிதமாக இருக்கிறது.

60வது பிறந்த நாள்
இவ்வளவு நாளா ஷூட்டிங் நடைபெறாத நிலையில் இப்போ சூட்டிங் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள் ரசிகர்கள. இவருக்கு இணைதளங்களில் வாழ்த்துக்களை கூறி குவித்து விட்டனர். இவரது மகனான சாந்தனு ட்விட்டரில் கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியுமென்றால் அது ஒரு தாயின் வடிவத்தில் மட்டுமே.... அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஹாட்டின் போட்டு வாழ்த்து கூறியிருந்தார்.

ராதிகாவின் அன்பு கேக்
இதை விட முக்கியமாக பூர்ணிமாவின் இனிய தோழிகள் சிலர் சேர்ந்து ஒரு அருமையான கேக்கை அனுப்பி அசத்தியுள்ளனர். அந்த தோழிகளில் ஒருவர் ராதிகா சரத்குமார். இந்த கேக்கைப் பார்த்து பூர்ணிமா குடும்பமே ஆச்சரியமாகி விட்டதாம். வீட்டு வளாகத்தில் வைத்து கேக்கை வெட்டி மொத்த குடும்பமும் சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. மகன், மகள், மருமகள், கணவர் புடை சூழ சந்தோஷமாக தனது 60வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் பூர்ணிமா பாக்கியராஜ்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications