ஆஹா மருமகள்.. அடடே மாமியார்.. பூர்ணிமா கீர்த்தி மாதிரி இருக்கணும்!
சென்னை: பூர்ணிமா பாக்யராஜ் நல்ல நடிகை. அப்போது இவரது தந்தை பெயரான ஜெயராமுடன் சேர்ந்துதான் இவர் பெயர் பூர்ணிமா ஜெயராம் என்று இருக்கும்.
முதன் முதலில் கிளிஞ்சல்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். அந்த படம் சூப்பர் ஹிட்டாக இவருடன் ஜோடி சேர்ந்த நடிகர் மோகன் பாடகர் எனும் அளவுக்கு இளையராஜா இசை பாடல்கள் மூலம் புகழடைந்து இருந்ததும் காரணம்.
கிளிஞ்சல்கள் படத்துக்கு டி.ராஜேந்தர்தான் இசை அமைத்து இருந்தார். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் என்கிற பாடல் உட்பட பல இனிய பாடல்கள் கொடுத்து இருந்தார் டி.ராஜேந்தர். இந்த படத்தின் மூலம் பூர்ணிமா ஜெயராம் ரசிகர்கள் மனதில் கனவுக் கன்னியாக இடம் பிடித்து இருந்தார்.
|
விதி டார்லிங் டார்லிங்
பயணங்கள் முடிவதில்லை படத்தில் இன்னும் இன்னும் என்று இவரது புகழ் கூடிக்கொண்டே போனது. தங்க மகன் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார். விதி படம் இவரை வேறொரு பாதைக்கு அழைத்துச் சென்றது. டார்லிங் டார்லிங் படத்தில் பாக்கியராஜுடன் ஜோடி சேர்ந்து நடிக்கையில்தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து கல்யாணத்திலும் முடிந்தது.

பூர்ணிமா பாக்கியராஜ்
பூர்ணிமா பாக்கியராஜ் ஆன பிறகு நடிப்பதை நிறுத்தி முற்றிலும் குடும்ப பெண்ணாக மாறினார். குடும்பத்தை கவனித்துக்கொண்டு இருந்த பூர்ணிமாவால் என்றுமே பாக்கியராஜின் படப்பிடிப்புக்கு இடையூறு இருந்ததில்லை. ராசுக்குட்டி படம் ஷூட்டிங் நடைப்பெற்ற நாளில்தான் குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட பூர்ணிமா பாக்கியராஜ் பெண்களுக்கான புடவை மற்றும் உடைகள் டிசைனிங் பொட்டிக் ஆரம்பித்தார்.

ராசுக்குட்டி படத்தில்
அப்போதே ராசுக்குட்டி படத்தில் நடிகை ஐஸ்வர்யாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் முத்து, பவளம் பதித்த பட்டுப் புடவையை டிசைன் செய்து கொடுத்தார். இப்போதும் அதை விடாமல் செய்து கொண்டு இருக்கும் பூர்ணிமா பாக்கியராஜ் சன் டிவியின் கஃண்மணி சீரியல் மூலம் நடிப்புக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

கீர்த்தி மருமகள்
இவரது மருமகள் டான்ஸ் மாஸ்டர் கலாவின் உறவுப் பெண்ணான கீர்த்தி. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். சாந்தனுவை காதலித்து மணம் செய்துகொண்டவர். இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக செல்லும் இடங்களில் எல்லாம், இவரது உடையைப் பற்றித்தான் பலரும் வியந்து பார்க்கிறார்களாம். இதை பெருமையுடன் கூறுகிறார் கீர்த்தி. இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரர் இவரது மாமியார் பூர்ணிமா பாக்கியராஜ்தான்.
இந்த மருமகள் பாக்கியசாலிதானே?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications