குடும்பத்திற்கு மகிழ்ச்சி தந்ததற்கு நன்றி! மருமகள் பற்றி பூர்ணிமா வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் பாக்யராஜின் மனைவியான பூர்ணிமா பாக்கியராஜ் தன்னுடைய மகன் மற்றும் மருமகளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இதற்கு இணையத்தில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சினிமா துறையில் ஒரு சிலர் குடும்பமே சினிமாவில் பிரபலங்களாக இருக்கின்றனர். அந்த வகையில் பலருக்கும் பரிச்சயமான குடும்பம் தான் பாக்கியராஜின் குடும்பம். பாக்யராஜ் இயக்குனராகவும், நடிகராகவும் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அதேபோல அவருடைய மனைவி பூர்ணிமாவும் பிரபல நடிகை தான்.

அந்த காலத்தில் பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்து இப்போது அம்மா கேரக்டரிலும், மாமியார் கேரக்டரிலும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இவர்களின் இந்த தம்பதியின் மகன் மற்றும் மகளும் நடிகர்களாக இருக்கின்றனர். நடிகர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிக்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இதில் சரண்யா பாக்யராஜ் இயக்கிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த நிலையில் இப்போது சினிமாவை விட்டு விலகி பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சாந்தனு தொடர்ந்து சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சாந்தனுவின் மனைவி கிகி என்ற கீர்த்தி பல சேனல்களில் தொகுப்பாளராக இருக்கிறார். பூர்ணிமாவை பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டது போல தான் சாந்தனு தொகுப்பாளராக இருக்கும் கிகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தான் காதலிப்பது பற்றி தன்னுடைய தந்தையிடம் தான் முதலில் சாந்தனு சொல்லி இருந்தாராம் உடனே பாக்யராஜ் கிகி வீட்டில் நேரடியாக சென்று பேசி இருக்கிறார். பிறகு இரு விட்டாரின் சம்மதத்தோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் இன்று தான் இவர்களுடைய திருமண நாளாம். அதனால் பூர்ணிமா பாக்யராஜ் தன்னுடைய மகன் மற்றும் மருமகளின் திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். இது பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
அந்த பதிவில் கிகிக்கு பூர்ணிமா பாக்கியராஜ் நன்றி கூறியிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் கீர்த்தி வந்து மகிழ்ச்சியை கொண்டு வந்ததற்காக நன்றி. சோனுவும் (சாந்தனு), கிகி (கீர்த்தி) நீங்கள்தான் எங்கள் உயிர். அம்மா மற்றும் அப்பாவிடம் இருந்து உங்கள் இருவருக்கும் நிறைய அன்பு. உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும் என்று அந்த பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு தங்களுடைய குடும்ப புகைப்படங்களையும் பூர்ணிமா பாக்கியராஜ் அந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறார். இது குறித்து பலரும் சாந்தனு மற்றும் கிகி தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த பதிவுக்கு கி.கி மற்றும் சாந்தனு இருவரும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications