பிரபல நடிகை சங்கீதாவை ஞாபகமிருக்கா? கவர்ச்சியை சுத்தமா நம்பலை.. சினிமாவை விட்டு விலக காரணமே இதுதான்
சென்னை: நடிகை சங்கீதாவின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அவர் தெரிவித்திருக்கும் தகவல்கள், ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த பேட்டியில் தான் ஏன் சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்பது குறித்தும் "பூவே உனக்காக" சங்கீதா விளக்கமாக கூறியிருக்கிறார்.
சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராக, ஹீரோயின்கள் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து நடிப்பதில்லை.. 10 வருடங்களை தாண்டி ஹீரோயினாக நடிப்பவர்கள் மிகவும் குறைவுதான்.

குழந்தை நட்சத்திரம்: எனினும் சில நடிகைகள், குறுகில காலம் மட்டுமே படங்களில் நடித்திருந்தாலும், மக்களின் மனதில் என்றுமே தங்கியிருப்பார்கள்.. அப்படிப்பட்டவர்தான் நடிகை சங்கீதா. இவர் கேரளாவை சேர்ந்தவர். 5 வயதிலேயே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர்.. தமிழிலும் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமாகி, அதற்கு பிறகு ஹீரோயினாக உயர்ந்தவர்.
ராஜ்கிரணின் எல்லாமே என் ராசா தான் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானாலும், விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றார்..
ஹோம்லி முகம்: குடும்ப பாங்கான முகவெட்டும், யதார்த்த நடிப்பும் சங்கீதாவிற்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்தன.. இதயவாசல், தாலாட்டு, கேப்டன் மகள், சீதனம், அம்மன் கோவில் வாசலிலே, நம்ம ஊரு ராஜா உள்பட பல படங்களில் நடித்தார்.. தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் மலையாள படத்திலும் பிஸியான நடிகையாக வலம்வந்தவர்.
நடிகை சங்கீதா, "பூவே உனக்காக" படத்தில் கேமராமேனாக இருந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.. "பூவே உனக்காக" படம் முடிந்து ஒரு வருடம் கழித்தும், இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லையாம். பிறகு, "ஆஹா" படத்தின் ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்தபோதுதான், சரவணன் இருந்த ஸ்டூடியோவில் வேறொரு படத்தில் நடிகை சங்கீதா நடித்துக்கொண்டிருந்தபோது இருவரும் சந்தித்துள்ளனர்... அப்போதுதான் காதல் மலர்ந்ததாம்.
கல்யாணம்: சங்கீதாவுக்கு விரைவில் காதல் திருமணம் என்று அன்றைய காலகட்டத்தில், பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதுமே, அவர் விஜய்யை தான் கல்யாணம் செய்துகொள்ள உள்ளதாக பரபரப்பு பேச்சும் தமிழ்சினிமாவில் அடிபட்டது...
இதற்கு காரணம், நடிகர் விஜய்யும், அவருடைய மனைவியான சங்கீதாவை அந்த நேரத்தில் காதலித்து வந்தார்.. 2 பேரின் பெயரும் ஒன்றாக இருந்ததாலும், பூவே உனக்காக படத்தில் இணைந்து நடித்ததாலும், விஜய் நடிகை சங்கீதாவை காதலிப்பதாக வதந்தி தீயாக பரவியது. எனினும், விஜய்க்கு தான் சரவணனை காதலிப்பது ஏற்கனவே தெரியும் என்பதால், அவர் இந்த வதந்தியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நடிகை சங்கீதாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
22 வயது: திருமணம் செய்து கொள்ளும்போது, சங்கீதாவுக்கு 22 வயதுதானாம்.. உச்சத்தில் இருந்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு ஒதுங்கியது தமிழ், மலையாள ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இப்போது சங்கீதாவுக்கு 20 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார்.
சமீபத்தில்கூட ஒரு பிரபல சேனலுக்கு சங்கீதா பேட்டி தந்துள்ளார்.. அதில், சினிமாவில் திடீரென நடிக்காமல் ஒதுங்கியது ஏன் என்பது குறித்தெல்லாம் விளக்கமாக சொல்லி உள்ளார்.. "
கவர்ச்சி: எனக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன். கிளாமராக நடிக்கணும் என்ற கண்டிஷனுக்காகவே நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை. எனக்கு பிடித்த படங்களில் நடிப்பது தான் ரொம்ப பிடிக்கும். கிளாமராக நடிக்கணும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லாததால், சினிமாவிலிருந்தே ஒதுங்கிவிட்டேன்.
அத்துடன் எனக்கு, குழந்தை குடும்பம் என்று ஆனதால், சினிமாவில் தொடர முடியவில்லை.. குடும்பத்தை பார்த்துக் கொள்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் நடித்தேன், தமிழில் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.. சங்கீதா தெரிவித்திருக்கும் இந்த தகவல்தான், 90'ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications