மண்டை மாறினாலும் கொண்டை மாறலை.. இதுதான் பொதிகை.. கேட்க கேட்க இனிமை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூர்தர்ஷன் பொதிகை சானல் ஆரம்பத்தில் இருந்தே நடத்திக் கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்தாமல் இன்றுவரை தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பாட்டு பாடு போட்டி போடு நிகழ்ச்சியும் ஒன்று.

கடந்த பல வருடங்களாக செட்டையும் மாத்தலை... ஜோடி சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் "செட்" டையும் மாத்தலை. கலக்கப் போவது மூலமா விஜய் டிவியில் அறிமுகம் ஆன அரவிந்த் இந்த நிகழ்ச்சியின் ஆஸ்தான தொகுப்பாளர் என்று சொல்லும் அளவுக்கு பல வருடங்களாக நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

அரவிந்துடன் சேர்ந்து மக்கள் டிவி புகழ் ஆர்த்தி கடந்த சில வருடங்களாக இவருடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்த பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி, கச்சேரி கச்சேரி களைக் காட்டுதடி என்கிற பாடலுக்கு ஏற்ப இருக்கிறது.

பொதிகை கொள்கை

பொதிகை கொள்கை

என்னதான் கிண்டல் பண்ணினாலும், கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காமல் .கொள்கைப் பிடிப்புடன் தாங்கள் வழங்க வேண்டிய நிகழ்ச்சிகளை மிக அருமையாக நடத்தி வருகிறது. வேளாண் நேரம்.. அப்போது வயலும் வாழ்வும் என்று வழங்கி வந்தது. இன்றும் இந்த நிகழ்ச்சி விவசாயிகளுக்கான பயன் உள்ள ஒரு நிகழ்ச்சிதான்.

சென்சார் உண்டு

சென்சார் உண்டு

பொதிகை சானலில் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு நாடகத்தை ஒளிபரப்புகிறார்கள் என்றால் அது பல தணிக்கைகளைக் கடந்துதான் ஒளிபரப்பப் படும். இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு ஸ்லாட் வழங்கும்போதே பல கன்டிஷன்ஸ் சொல்லுவார்கள். இதற்கு கட்டுப்பட்டு நீங்கள் நிகழ்ச்சிகள் தயாரித்தால் மட்டுமே தயாரிப்பு செலவு உங்களுக்கு கிடைக்கும்.

சொந்த மார்க்கெட்டிங்

சொந்த மார்க்கெட்டிங்

பொதிகை சானல் நிகழ்ச்சிகளை தங்களது சொந்த மார்க்கெட்டில்தான் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். இதனால் இந்த பிரச்சனை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இல்லை என்றாலும், நிகழ்ச்சிகளைத் தரமாக தயாரித்து பொதிகையிடம் வழங்குவது என்பதே ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.

பாட்டு பாடு போட்டி போடு

பாட்டு பாடு போட்டி போடு

அரவிந்த், ஆர்த்தி தொகுத்து வழங்கி வரும் பாட்டு பாடு போட்டி போடு நிகழ்ச்சி, ஆர்கெஸ்டரா வைத்து நடத்தும் இசைக் குழுவுக்கு வாய்ப்பு தந்து அவர்களுக்கு உதவியாக இருக்கிறது. நிறைய பாடல்களை பாடும் வாய்ப்புத்தான் நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களிலும் நடக்கிறது. ராகம், தாளம், பல்லவி என்று அணியினருக்கு பெயர். பங்கேற்பவர்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள் என்பதால் கேட்க கேட்க இனிமையான பாடல்கள் என்று நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அரவிந்தும் பாடல் பாடுகிறார்.

ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+