ஐ... பவுர்ணமி பாப்பாவுக்கு காதல் வந்துருச்சு.. குதூகலிக்கும் பாட்டி!
சென்னை: சன் டிவியின் பகல் நேர சீரியல் பவுர்ணமி. இது தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட சீரியல்னாலும், பார்க்க கலர்ஃபுல்லா நல்லாருக்கு.
பவுர்ணமி வாடாத மல்லி பூவை எப்போதும் தலையில வச்சுக்கிட்டு, அழகா பாவாடை தாவணியில காட்சி தர்றது கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.
ஆனா, இந்த பொண்ணு பாவம் பிறந்த அடுத்த நிமிஷம் , இவ அம்மா செத்துடறாங்க. இதனால இவ ராசி இல்லாதவன்னு பவுர்ணமி பாப்பாவோட அப்பாவுக்கு பவுர்ணமியை கண்டாலே ஆகாது. ஆனா, இன்னொரு கல்யாணம் செய்து பிறந்த பவானியை உயிருக்கு உயிரா நினைச்சு வாழறார்.

என் நம்பர்
அம்மா.. என்கூட படிச்ச பையன்.. அவன் சில வருஷமா வெளியூரில் படிச்சுட்டு இப்போத்தான் இங்க வந்திருக்கான். அவனைப் பார்த்தேன்.. என் நம்பரை கேட்கறான் குடுக்கவான்னு அம்மாகிட்ட பவுர்ணமி கேட்கறா. குடு பவுர்ணமி.. அந்த பையன் நல்லவனா, உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்கறாங்க அம்மா. நல்ல பையன்தான்மா..நம்பர் குடுக்கட்டுமா, வேண்டாமான்னு கேட்கறா பவுர்ணமி. குடு பவுர்ணமின்னு சொல்றாங்க அம்மா

எப்போதும் கண்ணாடி
அம்மா பாட்டியிடம் பவுர்ணமி பத்தி சொல்றாங்க. பவுர்ணமி அந்த பையனை காதலிக்கறான்னு நினைக்கறேன் அத்தைன்னு சொல்றாங்க. பவுர்ணமியை பார்க்க பாட்டி வரும்போது, பவுர்ணமி கண்ணாடியில் பார்த்து தாவணியை மாத்தறா.. தோட்டை மாத்தறா... சிரிச்சுகிட்டே கண்ணாடியில் பார்க்கறா..பார்த்த பாட்டிக்கு ரொம்ப சந்தோசம். நிச்சயமா பவுர்ணமி யாரையோ காதலிக்கறான்னு மருமக கிட்ட சொல்றாங்க மாமியார்.

ராம்கி டிராப்
பவுர்ணமியையே நினைச்சுகிட்டு தான் வளர்க்கும் சிறுவனிடம் பேசிகிட்டு இருக்கான் ராம்கி. திடீர்னு அங்கே பவுர்ணமி வந்து, ராம்கி என்னை மார்க்கெட்டுல டிராப் பண்றியான்னு கேட்க ஷாக் ஆகிடறான் ராம்கி. உடனே கிளம்புன்னு சொல்லிட்டு, பவுர்ணமியை மார்க்கெட்டுக்கு அழைச்சுக்கிட்டு போறான்.

நிறுத்துங்க
ராம்கி வண்டியை நிறுத்துங்கன்னு பவுர்ணமி சொல்ல, என்னாச்சு பவுர்ணமின்னு வண்டியை நிறுத்திட்டு கேட்கறான். வண்டியில இருக்க கண்ணாடி பின்னாடி வர்ற வண்டியைப் பார்க்க. பின்னாடி உட்கார்ந்துகிட்டு வர்றவங்களைப் பார்க்க இல்லேன்னு சொல்றா பவுர்ணமி.

நான் பாக்கியம்
என் வண்டியும், நானும் பாக்கியம் செய்திருக்கோம் பவுர்ணமி. நீ என் வண்டியில வந்தது உண்மையா.. என்னை வலிக்கற மாதிரி கிள்ளு பவுர்ணமின்னு சொல்றான். வலி எதுக்கு ராம்கி..சந்தோஷத்துக்கு வலி தேவை இல்லைன்னு சொல்றா. இல்ல பவுர்ணமி இது சுகமான நினைவா கடைசிவரை இருக்க இந்த வலி தேவைன்னு சொல்றான். நான் என்ன செலிபிரிட்டியா ராம்கி.. இப்படி சந்தோஷப்படறேன்னு கேட்கறா பவுர்ணமி. நீ படிக்கறப்பவே எனக்கு செலிபிரிட்டிதான் பவுர்ணமின்னு சொல்றான் ராம்கி.

அப்பா பார்க்க
வண்டியில பாவ்ர்ணமி போறதை அவளை பிடிக்காத அவளோட அப்பா சக்ரவர்த்தி பார்த்துடறார்.கோபமா வீட்டுக்கு வர்றார். இங்க பாட்டி, வீட்டுல இருக்க எல்லாத்துக்கும் பேத்தி லவ் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கான்னு ஸ்வீட் குடுத்து சந்தோஷப்படறாங்க.பவுர்ணமி இன்னும் வீட்டுக்கு வராத இந்த நேரத்துல அப்பா பயங்கரமா சத்தம் போடறார்.
பாட்டி அப்படி .. அப்பா இப்படி.. பவுர்ணமி காதல் எப்படி?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications