இன்ஸ்டாவில் ஃபிரண்ட் ரிக்வஸ்ட் அனுப்பாதீர்! என்னை ஃபாலோ செய்யாதீர்! பிரதீப் ஆண்டனியின் திடீர் ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூகவலைதளங்களில் என்னை யாரும் பின்தொடர வேண்டாம் என ரசிகர்களுக்கு பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி கோரிக்கை விடுத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஸ்ட்ராங் கன்டெஸ்டென்ட் என அறியப்பட்டவர் பிரதீப் ஆன்டனிதான். அவர் கன்னாபின்னா என பேசுவதுதான் அனைவருக்கும் எரிச்சலை கிளப்பும். அவருக்கு மன ரீதியில் ஒரு குறைபாடு இருப்பதை அவரே தெரிவித்திருந்தார்.

Pradeep Antony in his tweet says that no one give friend request for him

ஆனல் எல்லாவற்றையும் விட அவரால் பிக்பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியேற்றிவிட்டார். இதுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவரிடம் எந்தவொரு விளக்கத்தையும் கேட்காமல் உரிமைக் குரல் என்ற பெயரில் கூடி கூடி அவரை வெளியேற்ற மாயா உள்ளிட்டோர் போட்ட பிளானுக்கு கமல் துணை போய்விட்டார் என்ற கருத்துகளும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இது கமலின் அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. மேலும் தான் மட்டும் இதை முடிவெடுக்காமல் என்டமால் நிறுவன அதிகாரிகளிடமும் தான் கலந்தாலோசித்ததாகவும் அவர்களும் பெண் பாதுகாப்புதான் முக்கியம் என சொன்னார்கள் என்றும் ஒரு வேளை அவர்கள் பிரதீப் தொடரட்டும் என கூறியிருந்தால் நான் வெளியேறி இருந்திருப்பேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரதீப் கூறிய விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஹவுஸ்மேட்ஸ் குற்றம்சாட்டியிருந்தனர். இதற்கு மாயா, மணி, ரவீனா, ஐஸு உள்ளிட்டோரும் காரணம் என சொல்லப்படுகிறது. பிக்பாஸ் டைட்டிலை ஜெயிக்கும் நிலையில் இருந்த பிரதீப்பை இப்படி ஒரு தவறான பட்டத்தை கட்டி வெளியேற்றியது விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்டோருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வெளியே சென்ற பிரதீப்பும் தற்போது தொடர் ட்வீட்டுகளை போட்டு வருகிறார். வெளியே வந்ததும் அவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி ட்வீட் போட்டார். அதனுடன் தீர விசாரிப்பதே மெய் என்ற ஹேஷ்டேக்கையும் போட்டிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அது போல் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் பிக்பாஸுக்கு ரீஎன்ட்ரி கொடுப்பதாகவும் மறைமுகமாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது. அவரை சமூகவலைதளங்களில் பின்பற்ற முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் அவர் இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் தனியுரிமைக்கான ஒரு கோரிக்கை. இன்ஸ்டாகிராமில் எனக்கு பிரன்ட் ரிக்வஸ்ட் கொடுக்காதீர்கள்.

அந்த இன்ஸ்டாகிராம் எனது தனிப்பட்ட இடம். அதில் எனது நண்பர்களுடன் மட்டுமே நான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும். அதற்காக நான் உங்களை என் நண்பர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அர்த்தம் இல்லை. என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. சமூகவலைதளங்களில் பாசிட்டிவும் இருக்கும் நெகட்டிவ்வும் இருக்கும்.

அது எப்போதாவது தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சிக்கும். எனக்கு விமர்சனங்கள் பிடிக்கும். ஆனால் என்னால் என் குடும்பத்தினரோ நண்பர்களோ மற்றவர்களின் விமர்சனத்திற்குள்ளாவதை நான் விரும்பவில்லை. எனக்கு பொது வெளியில் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியை பகிர வேண்டும் என நினைத்தால் நானே பகிர்கிறேன். அது வரை எனக்கு நெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே நான் மகிழ்ச்சியை பகிர்வேன்.

என் பெயரை தவறக பயன்படுத்தி கிரவுட் ஃபண்டிங் செய்கிறார்கள். அதை நம்பாதீர்கள். நான் வாழ்க்கையை விளையாட்டாகவே வாழ்கிறேன். எனவே என் பெயரில் யாராவது பணம் கேட்டால் கொடுக்காதீர்கள். நான் ஏழையாக இருக்கலாம். ஆனால் எனக்கென நெறிமுறைகள் இருக்கின்றன. நான் பிக்பாஸை விரும்பினேன். ஒவ்வொரு விளையாட்டையும் விரும்பியே விளையாடினேன்.

ஆனால் என்னை அசிங்கப்படுத்தும் இடத்தில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. நான் சக போட்டியாளர்கள் யாருக்கும் எதிரி அல்ல. விளையாட்டை பொருத்தமட்டில் நான் தோல்வி அடைந்துவிட்டேன் என நினைக்கலாம். ஆனால் நான் விலைமதிப்பில்லாத சிலவற்றை வென்றுளளேன். எனது திறமைகளை உலகிற்கு நிரூபிப்பேன். அன்புக்கு நன்றி. நல்லா இருங்க! என பிரதீப் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+