வனிதா மட்டும் சின்ன பொண்ணா இருந்திருந்தா.. காதலித்து, திருமணமும் செய்ய ஆசைப்பட்ட பிரதீப் ஆன்டனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வனிதாவை காதலித்து திருமணம் செய்ய தற்போதைய பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் பிரதீப் ஆன்டனி ஆசைப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பொறுமையை கடைப்பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் பிரதீப் ஆன்டனி. இவர் கவினுடைய நண்பர் என்பது அனைவரும் அறிந்ததே.

Pradeep Antony says that he likes to marry Vanitha Vijayakumar

இந்த நிகழ்ச்சி தற்போது 25 ஆவது நாளை எட்டியுள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 பேர் எலிமினேட் ஆகிவிட்டனர். பவா செல்லதுரை அவராகவே உடல்நிலையை கருத்தில் கொண்டு வெளியேறிவிட்டார்.

முதலில் அனன்யா வெளியேற்றப்பட்டார். அடுத்த வாரம் பவா செல்லதுரை விருப்பப்பட்டு வெளியேறினார். விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து 3ஆவது வாரம் வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா, பிரதீப், விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ் , நிக்ஷன், விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டோர் விளையாடி வருகிறார்கள்.

பூர்ணிமா இந்த வார கேப்டன். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்துவிட்டு யாருடையது பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு லைக்கும் பிடிக்காத வீடியோக்கும் டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும். அதில் பிரதீப், ஜோவிகா வீட்டிலிருந்து அனுப்பப்பட்ட வீடியோக்களை பார்த்துவிட்டு வெளியே வந்தார்.

அப்போது ஜோவிகாவுக்கு லைக் கொடுக்கார். அப்போது ஜோவிகா கண் கலங்கும் ப்ரோமோ வெளியானது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நண்பர் கவினை பார்க்க பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் பிரதீப் ஆன்டரி, வனிதாவுடன் நடத்திய உரையாடல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ஜோவிகா ஆர்மி வைரலாக்கி வருகிறது.

அந்த வீடியோவில் வனிதாவிடம் பிரதீப் ஆன்டனி, "உங்களுக்கு மட்டும் கல்யாணம் ஆகாம இருந்து, நீங்கள் சின்ன பொண்ணா இருந்திருந்தா நான் நிச்சயமாக உங்களை காதலித்திருப்பேன். உங்களை மாதிரி ஒரு ஆள் கூட இருந்தா நான் கண்டிப்பாக இந்த உலகத்தையே ஜெயிச்சுருவேன்" என்கிறார். உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷெரின், இப்போ மட்டும் என்ன அவங்க சின்ன பொண்ணுதான் என்கிறார். அதற்கு வனிதா "ஏம்மா நீ வேற " என்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் கவின் பயன்படுத்தும் காதல் உத்திகள் எல்லாம் என்னுடையது என்றே கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பெண்களை காதலில் விழ வைக்க தனியார் ஸ்ட்ராடஜி எல்லாம் பயன்படுத்திறியா என வனிதா கேட்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் வனிதாவின் கண்களிலும் சிக்கியது அவர் ஜாலியான ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+