என்ன மறுபடியும் மாங்காய் கடிக்க வச்சுட்டாரா.. சான்ட்ராவை கலாய்க்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் சீரியல் பிரபலமாக இருந்தாலும் நாங்களும் காதலர்கள் தான் என மாந்தோப்புக்கு போய் காதல் ரவுசு பண்ணி கலக்கலாக கிராமத்து உடையில் போட்டோஸ் போட்டுள்ளனர் பிரஜின் சான்ட்ரா ஜோடி.

இதைப் பார்த்த ரசிகர்கள், என்ன மறுபடியும் கர்ப்பமா என்று கேட்டு இன்ஸ்டாகிராமில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சின்னத்தம்பி சீரியல் மூலமாக சின்னத்திரையில் கிராமத்து அழகாக வலம் வந்த பிரஜின் மற்றும் தனது அழகான சிரிப்பால் தொகுப்பாளராக இருந்து சீரியலில் களைகட்டி பறந்த சான்ரா ஜோடியை யாரும் மறந்து விட முடியாது.

டிவி தொகுப்பாளர்கள்

டிவி தொகுப்பாளர்கள்

இவர்கள் இருவரும் தொகுப்பாளராக இருக்கும் போதே காதலித்து சீரியலில் தனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைத்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டனர் .திருமணம் செய்து கொண்டாலும் அதன் பிறகு இருவரும் தங்களுடைய காதலோடு திரை பயணத்தையும் வளர்த்து வந்தனர் .அதனால் தான் இருவரும் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்துகொண்டிருந்தனர்.

கல்யாணம்

கல்யாணம்

என்னதான் காதலாக இருந்தாலும் காதலுக்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்ததும் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த சான்ரா தற்போது தனது கணவருடன் கலக்கலான போட்டோ ஷூட்டை வெளியிட்டிருக்கிறார். பிரஜின் பழைய வண்ணாரப்பேட்டை என்னும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது ஒளிபரப்பாகும் அன்புடன் குஷி என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார் .

அன்புடன் குஷி

அன்புடன் குஷி

இந்த சீரியலில் பணக்கார வீட்டு அழகான பெண் இவர் மீது காதல் கொண்டு இவரை சுற்றி சுற்றிக் கொண்டிருக்க இவர் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லாத போல அவர் மீது காதல் இருந்தாலும் வெளிக்காட்டாமல் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த சீரியலில் நடிக்கிறார் என்பது சொல்வதைவிட சீரியலில் கேரக்டராகவே மாறி விட்டார்.

ரொமான்ஸ்

ரொமான்ஸ்

அந்த சீரியலில் இதுவரைக்கும் நடித்து வந்த கதாநாயகி தற்போது விலகி விட்டாலும் புது கதாநாயகிகளுடன் ரொமான்ஸில் பின்னி பெடல் எடுத்து வந்து கொண்டிருக்கிறார் .ஆனால் அது எல்லாம் ரீல் .ரியல் ஆனா என்னோட கதாநாயகி இவர்தான் என தன்னுடைய ஆசை மனைவியை கட்டிப்பிடித்தபடி கலக்கலாக போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

காதல் மனைவியுடன்

காதல் மனைவியுடன்

இவர் என்னதான் சீரியலில் பிசியாக இருந்தாலும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருப்பதுதான் தனது பெரிய கனவு என அடிக்கடி குழந்தைகளுடன் விளையாடும் வீடியோக்களையும் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார் .கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட அவரது மகளின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு அந்த வீடியோக்கள் வைரலாக பரவி வந்தது.

மாந்தோப்பில் காதல்

மாந்தோப்பில் காதல்

இந்த நிலையில் தற்போது இவர் தனது மனைவியை கட்டி அணைத்தபடி மாந்தோப்பு க்குள் இருக்கும் போட்டோவை வெளியிட்டிருக்கிறார் .அதை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் என்ன மீண்டும் அப்பாவாக போகிறீர்களா என கேள்விகளை கேட்டு வருகின்றனர். காரணம் சான்ரா சேலை கட்டி கொண்டு இருப்பதை பார்க்கும் போது அவர் கர்ப்பமாக இருப்பது போலத்தான் இருக்கிறது.

சான்ட்ராவின் வெட்கம்

சான்ட்ராவின் வெட்கம்

அதிலும் அவர் மாங்காயை கைகாட்டி சிரித்தபடி போஸ் கொடுத்து இருப்பதை வைத்து தான் பலர் இந்த மாதிரி கேட்டு வருகின்றனர் .ஆனால் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இந்த ஜோடி இருந்து வருகிறது. என்னதான் சொல்லுங்க, கல்யாணமாகி, குழந்தையும் பெற்றுக் கொண்டாலும் கூட மாங்காய் கடி கடிக்கும்போது பெண்களுக்கு வரும் வெட்கமே தனிதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+