டிஸ்கவரி சானலில் நடிகர் பிரகாஷ்ராஜ் குரல்...!
சென்னை: டிஸ்கவரி சானல் பெரும்பாலான இந்திய மொழிகளில் களம் பதித்து இருக்கிறது. இந்த டிவியின் நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுப்பது என்பது பெரும்பான்மையானவர்கள் விருப்பமாக கூட இருக்கிறது.
முக்கியமாக பல நிகழ்ச்சிகளுக்கு டப்பிங் மட்டும்தான் தேவைப்படுகிறது. மற்றபடி காட்சிகளில் விலங்குகள் ஆதிக்கம் மட்டும் இருக்கும். இப்படியான நிகழ்ச்சிகளுக்கு பிரபலங்கள் குரல் கொடுக்கும்போது அது கூடுதல் பிளஸாகவும் இருக்கிறது.
இப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேன் வெஸ்ஸஸ் வைட் என்கிற நிகழ்ச்சியில் காடு மலை என்று நிஜமாகவே சென்று வந்தார். இப்போது பிரகாஷ் ராஜ் டிஸ்கவரி சானலில் இணைந்து இருக்கார்.

கர்நாடகா தமிழ்நாடு
பிரகாஷ் ராஜ் டிஸ்கவரி சானலில் தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழி சானலுக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்க இருக்கிறார். இந்த லாக்டவுன் நேரத்தில் இவருக்கு இந்த வாய்ப்பு தேடி வந்து இருப்பது என்பது எல்லா விதத்திலும் பிரகாஷ் ராஜுக்கு பிளஸாகவே இருக்கும்.

லாக்டவுனில் அருமை
லாக்டவுனில் நடிகர் நடிகைகள் எந்த வாய்ப்பும் இல்லாமல், வெளியில் போகவும் வழியின்றி வீட்டோடு முடங்கிக் கிடக்கிறார்கள். இப்படியான சூழலில் பிரகாஷ் ராஜுக்கு டிஸ்கவரி சானல் மூலம் கிடைத்து இருக்கும் இந்த வாய்ப்பு, லாக்டவுன் நேரத்தின் அருமையான வாய்ப்பு என்று சொல்லலாம். அதாவது இப்போது பலரும் வீட்டில் இருந்து டிவி நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பித்து உள்ளனர்.

குழந்தைகளுக்கு பிடித்தம்
குழந்தைகளுக்கு பிடித்தமான சானல்களில் டிஸ்கவரி சானலும் ஓன்று. பெரும்பாலானவர்கள் இந்த லாக்டவுன் நேரத்தில் டிஸ்கவரி சானலை விரும்பிப் பார்ப்பதால், டிஸ்கவரி சானலும் பொறுப்பு கூடிவிட்டது என்று எண்ணி நிறைய புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

அதில் ஒன்றுதான் இது
ஜூன் 5 வெள்ளி கிழமை முதல் 8 மணிக்கு வைல் கர்நாடகா என்கிற இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழிலும், கன்னட மொழியிலும் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்து இருக்கார். ஒரே நிலப்பரப்பில் இணைந்து வாழும் விலங்குகள் வாழ்க்கை பற்றிய நிகழ்ச்சி இது என்பதால் அனைவரும் விரும்பிப் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications