பிரபலத்தின் கண்ணை உறுத்திய பிரசாந்தின் சென்னை தி நகர் 2 சென்ட் நிலம்.. நடிகர் தியாகராஜன் விடலயே
சென்னை: 1990-களில் தமிழ் சினிமாவில் ஆணழகன், காதல் இளவரசன் என்று கொண்டாடப்பட்டவர்தான் பிரபல நடிகர் பிரசாந்த். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பிறகு மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் இவர்தான் வலம் வருவார் என்று எழுத்தாளர் சுஜாதாவால் பாராட்டப்பட்ட ஒரே நடிகரும் பிரசாந்த்தான்.. இந்நிலையில், பிரசாந்த், தியாகராஜன் குறித்து மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், சில பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார்.
நடிகர் பிரபு வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.. எனினும் பிரசாந்த்துக்கு திருப்புமுனையாக அமைந்தது 1998ல் ஆண்டு வெளியான ஜீன்ஸ் படம்தான். ஒருகட்டத்தில் பிரசாந்த்துக்கான படவாய்ப்பு குறைந்தது..

நடிகர் பிரசாந்த்
எனினும், பிரசாந்த்துக்கு ஒவ்வொரு மாதமும் கோடிகளில் வருமானம் வருகின்றதாம். அன்று பிரபலமாக இருந்தபோது, சென்னை தி.நகரில் இடம் ஒன்றினை வாங்கி, அதில் கோல்டு டவர் என்கின்ற 17 மாடியில் பிரம்மாண்ட கட்டிடத்தையும் கட்டினார். இந்த தளத்தில் மிகப்பெரிய ஷோரூம்கள் தற்போதும் இயங்கி வருகின்றன..
ரூ.1 கோடிக்கு மேல் மாதம் ஒன்றிற்கு இந்த ஷோரூமிலிருந்து வருமானம் வருவதாகவும், மொத்தத்தில் பிரசாந்த்துக்கு ரூ.85 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாகவும் சமீபத்தில்கூட மீடியாக்களில் செய்திகள் கசிந்திருந்தன.
தி.நகர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "கடந்த 2001ம் ஆண்டு வாக்கில், சென்னை தி.நகரில் பிரசாந்த் குடியிருந்த பகுதியில், 2 சென்ட் இடம் இருந்தது. 2 செண்ட் 4 கோடி ரூபாய் என்று அப்போதே சொன்னார்கள்..
இந்த அளவுக்கு பிரம்மாண்டமான இடம், நகரின் மையப்பகுதியில் இருந்தால் பலருக்கும் கண்ணை உறுத்ததான் செய்தது.. எனவே எப்படியாவது அந்த இடத்தை வாங்கிவிட வேண்டும் என்றுகூட சிலர் நினைத்தார்கள்..
நடிகர் பிரசாந்தின் 2 செண்ட் இடம்
அந்தவகையில் தியாகராஜன் சாரை கூப்பிட்டு, அந்த இடத்தை சசிகலா தரப்பில் கேட்டதாக செய்திகள் உண்டு.. 2 செண்ட் இடம் தங்களுக்கு வேண்டும் என்றும், அதற்கு ஒரு தொகையை தருகிறோம் என்றும் சசிகலா சொன்னாராம்.
ஆனால், தி.நகர் தவிர வேறெங்கும் தியாகராஜன் சாருக்கு இடம் இல்லை என்பதால், அதனை விற்க தயக்கம் காட்டியிருக்கிறார்.. மேலும் இந்த இடத்தில்தான் தன்னுடைய படங்களுக்கான ஷூட்டிங்கையும் நடத்தி கொள்வார்.. அதற்கு முன்பு அங்கு டைரக்டர் சங்கர் ஆபீஸ் வைத்திருந்தார்..அதற்கு பிறகுதான் அந்த இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் செட்டிங் போடப்பட்டு, ஷூட்டிங் நடத்தி வந்தனர்.
தர்மசங்கடத்தில் தியாகராஜன்
இந்த இடத்தை சசிகலா கேட்கவும், அது தியாகராஜனுக்கு தர்மசங்கடாய் போய்விட்டது.. அதற்கு பிறகுதான் என்ன செய்வதென்று தெரியாமல், குடும்பத்துடனேயே முதல்வராக இருந்த ஜெயலலிதாவை சென்று தியாகராஜன் சந்தித்ததாக நான் அப்போது கேள்விப்பட்டுள்ளேன்.
ஜெயலலிதாவும், தானும் ஒரே சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால், இடையில் யாருடைய குறுக்கீடும் இல்லாமல், நேரடியாகவே கிளம்பி வந்துவிட்டார் தியாகராஜன்..
தன்னுடைய குடும்ப சூழ்நிலையை ஜெயலலிதாவிடம் சொல்லி, தி.நகர் இடத்தை மட்டுமே நம்பி தன்னுடைய குடும்பம் இருப்பதாகவும், அதை எப்படி விலைக்கு தருவது? என்றும், உருக்கமாக சொல்லியிருக்கிறார்.
மனம் இரங்கிய ஜெயலலிதா
இதைக்கேட்டதுமே ஜெயலலிதா, சரி, அதனாலென்ன பரவாயில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கை தந்தாராம்.. ஆனால், தியாகராஜன் குடும்பத்தினர் - முதல்வர் ஜெயலலிதாவுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அப்போது பத்திரிகைகளில் செய்திகளும், அது தொடர்பான போட்டோக்களும் வெளியாகியிருந்தன. இதற்கு பிறகுதான் அந்த இடம், பிரசாந்த் டவராக மாறியது.
கோபம் ஜெயலலிதாவுக்கு அதிகமாக வரும்.. நியூஸ்பேப்பரை தனக்கு முன்னால் வேறு யாராவது பிரித்து படித்திருந்தால், தூக்கி விசிறியடித்துவிடுவாராம்.. ஆனால், தன்னை நாடி, நேரடியாக வந்து அன்புடன் கோரிக்கை வைத்தால், உடனே அதை நிறைவேற்றக்கூடியவரும்கூட. அதனால்தான் தியாகராஜன், இட விவகாரத்தில் தூது எதையும் நம்பாமல் நேரடியாக சென்று சந்தித்து பேசினார்.
சிறப்புகளை கொண்ட தியாகராஜன்
அதுமட்டுமல்லாமல், தியாகராஜன் அப்போது பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர்.. சினிமா பாடல்களின் உரிமைகளை வாங்கி விநியோகம் செய்து வந்தனர்.. இளையராஜாவை முதன்முதலில் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றவர்.. எம்ஜிஆர் மீது பாசம் கொண்டவர்.. அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு எம்ஜிஆரிடம் விருதையும் வாங்கியவர்..
இத்தனை சிறப்புகளை கொண்டவர் என்பதால், தியாகராஜனுக்குரிய மரியாதையை ஜெயலலிதா அப்போது தந்து, அவரது கோரிக்கையையும் நிறைவேற்றினார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications