சீரியல் டைரக்டருக்கு மட்டும் கிடைப்பதில்லையே? கேள்வி எழுப்பிய பாரதி கண்ணம்மா இயக்குனர்.. காரணம்?
எந்த ஒரு அவார்டும் சீரியல் டைரக்டருக்கு மட்டும் கிடைப்பதில்லை ஏன் என்று இயக்குனர் பிரவீன் பெண்ணட் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி போன்ற சீரியல்களை பிரவீன் பெண்ணட் இயக்கி வருகிறார்.
நாங்கள் இயக்கும் சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கு அவார்டு கிடைக்கும் ஆனால் எங்களுக்கு அவார்டு கிடைப்பதில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார்.
சினிமாவில் கூட அனைத்து துறையினர்களுக்கும் அவார்ட் கிடைக்கிறது ஆனால் சீரியலில் அப்படி கிடைப்பதே இல்லை என்று தன்னுடைய வருத்தத்தை கூறி இருக்கிறார்.

பிரபல சீரியல் இயக்குனர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீசன் 2 க்கும் இயக்குனர் பிரவீன் பென்னெட் தான். அதுமட்டுமல்லாமல் ராஜா ராணி சீரியல், மகாநதி சீரியல் போன்ற சீரியல்களின் இயக்குனராக பிரவீன் பெண்ணட் இருந்து வருகிறார். இவர் இயக்கும் சீரியல்களில் சிறிய கேரக்டரில் நடித்தாலும் கூட தங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிடும் என்று பல நடிகர்கள் கூறி வருகிறார்கள் காரணம் இவர் தொடர்ந்து பல வருடங்களாகவே சீரியலை இயக்கி வருகிறார்.

சின்னையாவை அறிமுகப்படுத்தியவர்
அதுமட்டுமல்லாமல் இவர் இயக்கிய பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் இரண்டுமே இரண்டு சீசன்கள் தொட்டுவிட்டது. அதுவும் முதல் சீசனில் எல்லாமே புது முகங்களாக இவர் அறிமுகம் செய்தாலும் தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்த சீரியல்களில் கமிட்டாகி விடுகிறார்கள். அதனால் இயக்குனர் பிரவீன் சீரியல்களில் நடிக்க நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இவர் இயக்கும் சீரியல்கள் அதிகமாக சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. குறிப்பாக முதல் முதலாக ராஜா ராணி சீரியலில் சின்னையா என்று கணவரை அழைக்கும் முறையை இவர்தான் அறிமுகப்படுத்தி இருந்தார்.

டிஆர்பியில் முன்னணி
இப்ப வரைக்கும் பல சீரியல்களில் அர்ஜுன் சார், ஹஸ்பண்ட் சார் என்று கணவனை அழைக்கும் முறை இவரால்தான் வந்தது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவை பேக்கோடு பல மாதங்களாக நடக்க வைத்த பெருமையும் இவரையே சாரும். இந்த நிலையில் அடிக்கடி பல திரைப்பட கதைகளையும் தன்னுடைய சீரியல்களில் காப்பியடித்து ஒரு சில வாரங்களை ஓட்டி விடுவது இவருடைய வழக்கம் என்றும் நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருவார்கள். ஆனாலும் இவருடைய சீரியல்கள் எப்போதும் டிஆர்பி குறைந்த பாடு இல்லை. டிஆர்பி யில் முன்னணியில் தான் இவருடைய சீரியல்கள் எல்லாம் இருந்து வருகிறது.

விருது கிடைப்பதே இல்லை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார் அதில், பொதுவாக ஒரு சீரியலாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி அது வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு முக்கியமான காரணம் ரைட்டர் தான் அவருடைய கையில் தான் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக இயக்குனர் இருந்து வருகிறார். ஆனால் எந்த சீரியலில் வெற்றிக்கும் இயக்குனருக்கும், ரைட்டருக்கும் விருதுகள் வழங்கப்படுவதே இல்லை. இது வருத்தமாகத் தான் இருக்கிறது. ஒரு நடிகர் பேட்டி கொடுத்தால் பலர் பார்க்கிறார்கள். பலர் அதை ஷேர் செய்வார்கள் ஆனால் ஒரு இயக்குனர் கொடுத்தால் அந்த அளவிற்கு அது ரீச் ஆவதும் இல்லை. இது எப்போது மாறப்போகுது என்று தெரியவில்லை என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications