சமந்தா விஷயத்தால்.. நாக சைதன்யா சோபிதா துலிபாலா வாக்குவாதம்? தலையிட்ட நாகார்ஜுனா
ஹைதராபாத்: நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களது திருமணத்திற்கு முன்பே ஜோடிகளுக்கு இடையே சமந்தா விஷயமாக ஒரு சிறிய வாக்குவாதம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகார்ஜுன் புகுந்து சமாதானம் செய்தும் இன்னும் அந்த விஷயம் நீருபூத்த நெருப்பாகவே உள்ளதாம்.
தெலுங்கு மீடியாக்கள் சில இதுதொடர்பான செய்திகளை இன்று வெளியிட்டிருந்தன. அது என்ன தெரியுமா.. வாங்க பார்க்கலாம். சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே.

பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் சோபிதா துலிபாலா. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டிசம்பர் முதல் வாரத்திலேயே திருமணத்தை நடத்தப்போவதாகவும் கூறுகின்றனர். சமீபத்தில் வெளியான திருமண சடங்குகள் புகைப்படங்கள் ரசிகர்களை திருமணம் தொடர்பாக ஆர்வத்தை தூண்டியுள்ளன.
இந்த நிலையில்தான் சோபிதா, நாக சைதன்யாவின் முன்னாள் மனைவி சமந்தா வசித்த அதே வீட்டில் காலடி எடுத்து வைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடு சமந்தாவின் நினைவுகளுடன் தொடர்பு கொண்டிருப்பதால் அங்கு சமந்தா நினைவு தனக்கு வரும் என சோபிதா நினைக்கிறாராம். எனவே அங்கு வசிப்பது தனக்கு பிடிக்கவில்லை என ஷோபிதா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யா, சோபிதாவை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அது தனது வீடு என்பதால், அங்கேயே வசிக்க விரும்புகிறார் என்றும், அது தனது சொந்த வீடுதானே தவிர சமந்தா வீடு இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இருப்பினும் சோபிதா தனது முடிவை மாற்றவில்லை. இதனால், இருவரும் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெலுங்கு மீடியாக்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யாவின் தந்தை, நாகார்ஜுனா இந்த விவகாரத்தில் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், உரசல் என்னவோ இருப்பதாகவே அங்குள்ள மீடியாக்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications