தனியாவே பண்றதுதான் வெண்பாவுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!
சென்னை: பல திரைப்படங்களில் நடித்து வாங்கும் பேரையும் புகழையும் ஒரு சில சீரியல்களில் பெற்று உச்சம் அடைந்து விடுகிறார்கள் சில நடிகைகள்.
அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் வெண்பா கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் ப்ரீத்தி ஷர்மா இன்ஸ்டாகிராமில் கலக்கலாக ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி வருகிறார்.
இவர் எப்போதுமே தனியாகவே போட்டோ சூட்டும் வீடியோக்களும் எடுக்கிறாராம். ஆள் வைத்து எடுப்பது பிடிக்காதாம். அவருடைய போட்டோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

ஹோம்லி லுக்
மாடல் உடையில் தொடங்கி ஹோம்லியாக பல நடிகைகளும் களமிறங்கியிருக்கும் போட்டோஷூட்டில் இருவரும் தற்போது களமிறங்கி கலக்கி வருகிறார். அவருடைய ரசிகர்களுக்கு இவருடைய போட்டோக்களை பார்த்து புகழ்ந்து தள்ளுவதற்கே நேரம் போதவில்லை. அந்த அளவிற்கு போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார். இந்த லாக்டோன் நேரத்துல பல நடிகைகளும் பொழுதைக் கழிப்பதற்காக போட்டோ சூட்டை நடத்தி கொண்டிருந்தார்கள்.

பிடிச்சுப் போன ப்ரீத்தி
ப்ரீத்தி ஷர்மாவும் போட்டோஷூட்டில் விதவிதமாக கலக்கிக் கொண்டிருந்தார். இவருக்கு ஷூட்டிங் போக மிச்சமிருக்கும் டைம்ல்ல எப்பவும் டிக் டாக் வீடியோக்கள் டாப்ஸ்மாஷ் களிலும் கலக்கிக் கொண்டு இருப்பார். பொதுவாக இவருக்கு தனியாகவே இருந்து போட்டோக்களாக எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது ரொம்பவே பிடிக்குமாம் .அதனால் விதவிதமான உடை அணிந்து போட்டோஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் கலங்க வைத்து வருகிறார்.

லக்னோவில் பொறந்த லட்டு!
ப்ரீத்தி ஷர்மா பிறந்தது லக்னோ. ஆனால் சிறுவயதிலியே குடும்பத்துடன் கோவையில் செட்டிலானதால், கோயம்புத்தூரில் தான் பள்ளிப் படிப்பையும் முடித்திருக்கிறார். இவர் 12 படிக்கும்போது கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை என்னும் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். அப்பவே மாடலிங்கிலும் காலடி எடுத்து வைத்து கலக்க ஆரம்பித்து விட்டார். அதன்பிறகு கல்லூரி படித்தபோது, பாடகராக வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாராம். இந்த நேரத்தில்தான் வந்தது டிக்டாக். அதனால் டிக்டாக்கில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார் .

கலக்கல் வீடியோக்கள்
டிக்டாக்கில் இவருடைய நடிப்பை புகழ்ந்து தள்ளாத ரசிகர்களே கிடையாது. அந்த அளவுக்கு வெகுவாக தன்னுடைய செல்லமான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். டிக்டாக் மூலமாக இவருக்கு ஒரு கதை பழகுமா என்னும் ஆல்பம் சாங் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் எங்க போன ராசாவே என்னும் சாங்கிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் கவிதா கேரக்டரிலும் நடித்து கொண்டிருந்தார். அதில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு சன் டிவியிலிருந்து ஆடிஷன் இன் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சித்தி கொடுத்த சந்தோஷம்
சன் டிவி ஆடிஷனின்போது சித்தி2 சீரியலில் நடிக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். அதைக் கேட்டதும் இவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்திருக்கிறது .ஏன் என்றால் ராதிகாவுடன் நடிப்பது இவருக்கு பெரும் பாக்கியமாக நினைத்து இருக்கிறார் . சித்தி ஒன்றுக்கு கிடைத்த வெற்றியை மனதில் நினைத்து இவர் இதில் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் . அதன் பிறகு இந்த சீரியலில் இவர் பிசியாக நடித்துக் கொள்வதால் திருமணம் சீரியல் இவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அந்த சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார். இந்த சீரியலில் தனது முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

ராதிகாவுடன் நெருக்கம்
முதல் நாள் ஷூட்டிங்கில் ராதிகாவை இவர் முத்தம் கொடுப்பது போன்று சீன் இருக்கும். அதில் நடிக்கும் போது இவருக்கு ரொம்பவே உணர்ச்சி பூர்வமாகவும் உணர்ச்சிவசப்படவும் வைத்திருக்கிறதாம். முதலில் அவருடன் நடிக்கும் போது அவரால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளா திரையையே பார்த்துக் கொண்டிருந்த நபரை பக்கத்தை பார்க்கும் போது ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் தற்போது அதெல்லாம் பழகிப் போய்விட்டது. இவருக்கு தெரியாத சில விஷயங்களையும் ராதிகா இவருக்கு சொல்லிக் கொடுத்து வருகிறாராம்.

அதிகரிக்கும் ரசிகர்கள்
அதனால் இவர்களுக்கு உண்மையான ஒரு பாசம் ஏற்பட்டு விட்டதாம். சீரியலில் இவருக்கு தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளம் கிடைத்துவிட்டது. இருந்தாலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய ஆதிக்கத்தை இவர் செலுத்தி வருகிறார். விதவிதமான போட்டோவில் கலக்கிவிட்டு ரசிகர்களை கவருகிறார். முதுகில் குத்தி இருக்கும் டாட்டூவை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக ஒரு பக்கம் கையில்லாமல் டிரஸ்சை போட்டு ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளார். அது மட்டுமல்ல சேலையிலும் இவர் கொடுத்திருக்கும் கலக்கலான போஸ்க்கும் கவர்ச்சியான சிரிப்புக்கு ரசிகர்கள் இவரிடம் விழுந்து விட்டார்களாம்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications