காப்பிரைட் பிரச்சனை.. அப்பா பேசிய வார்த்தைக்கு பிரேம்ஜி பதிலடி! இவ்வளவு ஓபனா பேசிட்டாரே.. பாராட்டும் அஜித் ரசிகர்கள்
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல் பயன்படுத்தியதற்காக இளையராஜா வழக்கு தொடுத்து இருந்தார். இது குறித்து அவருடைய தம்பி கங்கை அமரன் இளையராஜாவுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார். இந்த நிலையில் பிரேம்ஜி தன்னுடைய அப்பா சொன்ன கருத்து தப்பு என்று தைரியமாக பேசி இருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜா சமீப காலமாகவே தன்னுடைய பாடல்களை எந்த திரைப்படத்திலும் பயன்படுத்தக்கூடாது, அப்படியே பயன்படுத்தினால் அதற்கு உரிய அனுமதி வாங்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். ஆனாலும் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்திய போது அதற்காக வழக்கு தொடுத்திருந்தார். அப்போது அந்த பாடல்கள் உரிமை வைத்திருக்கும் நிறுவனத்திடம் தங்கள் அனுமதி வாங்கிவிட்டோம் என்று திரைப்பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

இளையராஜா வழக்கு
பிறகு இளையராஜாவுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமாக முடித்து இருந்தனர். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பாடல்களுக்கு என்னிடம் அனுமதி வாங்கவில்லை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது எனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று இளையராஜா வழக்கு தொடுத்து இருந்தார்.
கங்கை அமரன் பேட்டி
இந்த பாடல்களின் உரிமை யாரிடம் இருக்கிறதோ அவர்களிடம் நாங்கள் அனுமதி வாங்கி விட்டோம் என்று குட் பேட் அக்லி பட குழுவினர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு கங்கை அமரன் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது என்னுடைய அண்ணன் உருவாக்கிய பாடலை குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்தியதால் தான் அந்த படம் வெற்றி பெற்றது, அஜிதுக்காக அந்த படம் வெற்றி பெறவில்லை.
பிரேம்ஜி விளக்கம்
அந்த படத்தின் இசையமைப்பாளருக்கு ஏழு கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட பிறகும் அவர் போட்ட பாடலுக்கு மக்கள் கைதட்டவில்லை. என்னுடைய அண்ணன் பாடலை தான் மக்கள் கொண்டாடுகிறார்கள், கைதட்டுகிறார்கள். அப்போ அவருக்கு தானே அந்த உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி பேசியிருந்தார். இதுகுறித்து தங்கை அமரனின் மகனான பிரேம்ஜி சமிபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது இந்த பிரச்சனை பெரியப்பாவுக்கும், காப்பி ரைட்க்கும்தான்.
பிரேம்ஜி ஓபன் பேட்டி
அதனால் தன்னுடைய அண்ணனுக்காக என்னுடைய அப்பா சப்போர்ட் பண்ணி பேசுறாரு. இப்போ எங்க அண்ணனை பற்றி ஏதாவது வந்துதுனா நான் சப்போர்ட் பண்ணி பேசுவேன். அந்த மாதிரி தான் அஜித் படம் இளையராஜா பாடல்களை வைத்து தான் ஓடுதுன்னு சொல்றாங்க அதெல்லாம் சும்மா. தலயால் தான் அந்த படம் ஓடும். ராயல்டி என்பது மியூசிக் போன்றவர்களுக்கு மட்டுமல்ல பாடுபவர்களுக்கும் கூட ராயல்டி இருக்கு. அது எல்லாருக்குமே வர்ற விஷயம்.

ரசிகர்களின் பாராட்டு
மியூசிக் உருவாக்குற எல்லாருமே ராயல் டி வந்துட்டு தான் இருக்கு. நானே 15 படம் மியூசிக் பண்ணி இருக்கிறேன் எனக்கு இப்போதும் பணம் வந்துட்டு தான் இருக்கு. பெரியப்பா கேட்கிறது அவருக்கானதை அவர் கேட்கிறார் என்று பிரேம்ஜி பதில் கொடுத்து இருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் பிரேம்ஜியை பாராட்டி வருகிறார்கள். பிரேம்ஜி மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து இருந்தார். அதுபோல தன்னுடைய அப்பா பேசியது தவறு என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களுமே பாராட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications