பிரிதிவிராஜ் நன்றாக சவால் விடுகிறார்...!
சென்னை: ஜெயா டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி சவால். இதைத் தொகுத்து வழங்கி வந்தவர் பப்லு என்று செல்லமாக அழைக்கப்படும் பிரிதிவிராஜ். இவர் தொகுத்து வழங்கி வந்த சவால் நிகழ்ச்சி, லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்து மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பிரிதிவிராஜ் அலட்டல் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை மிக அருமையாகத் தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்களை ஊக்குவிப்பது... அந்த இடத்தில் எதாவது காமெடி நடந்தால் சிரிப்பது என்று ஆங்கருக்கே உரித்தான அத்தனைத் தன்மைகளுடனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இருக்கார்.
சவால், ஜெயா டிவி ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இருந்தே, ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பித்த காலம் தொட்டே பிரிதிவிராஜ்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

விளையாட்டுகள் பலவிதம்
கல்லூரி பிள்ளைகள், சாலைகளில் செல்வோர், அலுவலகம், ஸ்டுடியோ என்று எல்லா இடத்திலும் இந்த சவால் நடக்கும். சும்மா சின்ன சின்ன விளையாட்டுப் போட்டிகள்தான். செங்கல்லை கையில் எடுத்து எடுத்து அதில் கால் வைத்து நடப்பது, பந்தை தன்னை சுற்றி தூக்கிப்போட்டு பிடிப்பது என்று எளிதான சுவாரஸ்யமான விளையாட்டுக்கள்.

இப்போதும் பார்க்க
சவால் நிகழ்ச்சியில் பொது மக்கள் கலந்துக் கொள்வதாலும், மாணவர் மாணவிகளை போட்டியில் பார்ப்பதாலும், நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், மக்கள் போரடிக்காமல் பார்க்கிறார்கள். இதில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பங்கும் நிறையவே உள்ளது.

தொகுப்பாளர் கலாய்
இப்போதெல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்று வந்தால், அவருக்கு கலாய்க்கத் தெரிந்து இருக்க வேண்டும் என்கிற ஒரு குவாலிஃபிகேஷனும் இருக்கிறது. இதை அமல் படுத்திய பெருமை விஜய் டிவிக்கே சாரும். விஜய் டிவியைப் பார்த்து சன் டிவியும் கற்றுக்கொண்டது. விஜய் டிவி போலவே சன் டிவியின் அத்தனை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும் இந்த கலாய்க்கும் பணியை மிகக் கேவலமாக செய்து வருகிறார்கள்.

பெப்சி உமா
பெப்சி உமா போன்ற தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளை இன்றும் பார்க்கலாம். ஆனால், அது மாதிரி நிகழ்ச்சிகளை எல்லாம் ஓரம் கட்டி பெட்டிக்குள் போட்டு பூட்டிவைத்து இருக்கும் சன் டிவி ஏற்கனவே ஒளிபரப்பிய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இது மக்களின் பொறுமையோ பொறுமையை சோதிப்பது போல் இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications