டான்ஸ் ஜோடி டான்ஸ்... ஜட்ஜம்மா யாரு.. அட நம்ம பிரியா மணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடிகை பிரியா மணி புதிய ஜட்ஜாக பங்கேற்கிறார்.

நடிகைகள் பிரியா ராமன், பூஜா, சினேகா உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டு இருந்தனர்.

இப்போது நடிகை சினேகா இடத்தில் பிரியா மணி புதிய ஜட்ஜாக களம் இறங்குகிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்

டான்ஸ் ஜோடி டான்ஸ்

சன், விஜய் போன்ற தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட டான்ஸ் போட்டி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டன. சன் டிவி முற்றிலுமாக இந்த ரியாலிட்டி ஷோவை நிறுத்தி விட்டது. விஜய் டிவி அவ்வப்போது இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறது. ஜீ தமிழ் டிவி மட்டும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர், சீனியர் என்று தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

புதிய ஜட்ஜ்

புதிய ஜட்ஜ்

டான்ஸ் ஜோடி டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் புதிய ஜட்ஜாக நடிகை பிரியா மணி கலந்துக்கொண்டு இருக்கிறார். இந்த வாரம் 80 களின் பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனம் ஆடுகின்றனர். இதை ரசித்தபடி பங்கேற்கும் ஜட்ஜஸில் ஒருவராக பிரியாமணியும் உள்ளார்.

அடிக்கடி பிரியாமணி

அடிக்கடி பிரியாமணி

இப்போது பிரியாமணி அடிக்கடி சமூக வலைத் தளங்களில் தலை காண்பித்து வருகிறார். ரசிகர்கள் அவரை மீண்டும் நடிக்கலாமே என்று தங்களது ஆசையை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.இந்த நேரத்தில்தான் ரசிகர்களின் ஆசையை ஒரு விதத்தில் நிறைவேற்றும் விதமாக ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் வருகிறார்.

வெப் சீரிஸ் தொலைக்காட்சி

வெப் சீரிஸ் தொலைக்காட்சி

வெப் சீரிஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று ஒரு ரவுண்டு வர ஆரம்பித்து இருக்கும் பிரியா மணியின் இரண்டாவது இன்னிங்ஸ் அவருக்கு எந்த அளவுக்கு கைக்கொடுக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். பருத்தி வீரன் இவருக்கு அளித்த பெயரையும் புகழையும் முறியடிக்கும் அளவுக்கு இன்னும் இவர் எந்த ஒரு புராஜெக்டும் பண்ணவில்லை என்பதுதான் உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+