ப்பா.. டாப் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியமானவள் பிரவீனா!
சென்னை: ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படு க்யூட்டாக இருக்கிறார் பிரியமானவள் பிரவீனா.
இப்ப இருக்கிற சூழ்நிலையில சினிமாக்களை விடவும் சின்னத்திரை நடிகர்கள் தான் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகிக் கொண்டே போகிறது. சினிமாக்களில் புதுமுகங்கள் வருவதும் அவர்கள் ஒரு சினிமாவில் நடித்து டாப்பில் வருவதுமாக இருக்கிறார்கள்.
சிலர் வந்த அடையாளம் இல்லாமல் சென்றவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு மக்களின் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த மாதிரி தான் சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் சீரியல் மூலம் ரசிகர்களிடம் நல்ல ஒரு இடத்தை பிடித்தவரான பிரவீனா.

உமா பிரவீனா
இவர் இந்த சீரியலில் உமா என்ற கேரக்டரில் நடித்தார். நடித்தார் என்று என்று சொல்வதை விட வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அழகான குடும்பத் தலைவி கணவருக்கு கட்டுப்பட்டு அமைதியாக பாசத்தால் குடும்பத்தைப் பாதுகாக்கும் ஒரு குடும்பப் பெண்ணாக 4 ஆண் பையன்களின் பாசமான தாயாகவும் நாலு மருமகளுக்கு ஸ்வீட்டான மாமியார் ஆகவும் கலக்கியிருந்தார்.

அழகு பிரவீனா
அதுமட்டுமல்ல இவருக்கு நிஜத்தில் ஒரு அழகான மகள் இருக்கிறார். அந்த குழந்தைக்கும் இவர் இப்படித்தான் ஸ்வீட்டான அம்மாவாக இருந்து கொண்டிருக்கிறாராம். குழந்தை வளர்ப்பு பற்றி பெண் குழந்தைகள் எப்போதுமே பாசமாக வளர்ப்பது மட்டும் போதாது சுற்றி நடக்கும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு வாழவும் பழகிக்கணும். இது பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும்.

அழகில் டஃப் போட்டி
அப்படித்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார் பிரவீனா. இவர் கேரளாவில் பிறந்ததால் மலையாளம் மட்டும்தான் தெரியும் என்று நினைத்துவிடக்கூடாது. இவர் அழகாக கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசுகிறார். மலையாளத்தில் நிறைய கதாநாயகிகளுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார். மனிஷா கொய்ராலா போன்ற முன்னணி நடிகைகளுக்கும் டப்பிங் கொடுத்திருக்கிறார். அவர் குழந்தையாக இருக்கும்போது மலையாள படங்களில் அறிமுகமாகியிருக்கிறார்.

பிரியமானவள்
அதன் பிறகு சினிமா வாய்ப்புகளில் இவருக்கு ஏறுமுகமாக இருந்ததால் சினிமாக்களிலும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார். தமிழில் வாய்ப்பு வரும்போது இவர் கொஞ்சம் தயங்க தான் செய்தாராம். ஆனால் பிரியமானவள் வாய்ப்பு வரும் போது இவரால் தட்ட முடியவில்லையாம். உண்மையில் இந்த சீரியல்தான் பிரவீனாவுக்கு மிகப் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்ததாம்.

பாப்புலரானார்
இந்த சீரியல் வெளிச்சம் காரணமாக தமிழகம் மட்டுமல்ல கேரளாவில் உள்ளவர்களிடமும் அதிகமான வரவேற்பு இருக்கிறது. இப்ப கூட எல்லாரும் உமான்னு தான் கூப்பிடுறாங்கலாம். அத நெனச்சி இப்போ பெருமிதம் கொள்கிறார். ஹீரோயின்களுக்கு போட்டியாக அழகாக இருக்கிற பிரவீனாவின் அழகு ரகசியம் என்னன்னு கேட்டா வெட்கப்பட்டு சிரிக்கிறார் பிரவீனா.. அட சொல்லுங்கம்மா என்றவுடன் தனது ரகசியத்தை பகிர்ந்தார்.

வெட்கச் சிரிப்பு
டெய்லி தலைக்கு தேங்காய் எண்ணைதான் தேய்ப்பாராம். ஆடம்பரமான காஸ்ட்யூம் எல்லாம் பயன்படுத்த மாட்டாராம். மனசை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் என்னோட ரகசியம் என்று சிரித்தபடி சொல்கிறார் பிரவீனா. எந்த கஷ்டங்களையும் சந்தோசங்களையும் கடந்து செல்லும் பக்குவம் மட்டும் வந்துவிட்டால் போதும் யாரும் எல்லோரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம் என்று அறிவுரையும் கூறியிருக்கிறார்.

பாந்தமான அழகுதான்
ஆனால் என்னதான் சொல்லுங்க.. இந்தக் காலத்து ஹீரோயின்களுக்கு செம டஃப் கொடுக்கும் வகையில்தான் இன்னும் க்யூட்டாக படு அழகாக பாந்தமாக இருக்கிறார் பிரவீனா. இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்போது இன்ஸ்டாகிராமில் புதுப்புது போட்டோக்கள் அப்லோட் பண்ணி இருக்கிறார் அவர் அழகை கண்டு ரசிகர்கள் ஆனந்த படுகிறார்கள்.

இளமைக் கோலம்
இவரது போட்டோஸ்கள் இப்போ வைரலாக பரவி வருகிறது. அதுவும் ஷாலினியுடன் இவர் இருக்கும் இளமைக்கால போட்டோ செம சூப்பராக இருக்கிறது. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துள்ளனர் போலும். அதில் படு க்யூட்டாக காணப்படுகிறார் ஷாலினி. அந்தப் பக்கம் ஷோபனா இருக்கிறார். இந்தப் பக்கம் பிரவீனா.. இளமை ஊஞ்சலாடும் படம் இது. ரசிகர்கள் இதை வெகுவாக ரசித்துத் தள்ளுகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications