அடடா பிரியமானவள் அம்மா டாடா காமிக்க போறாங்களே...
சென்னை: சன் டிவியின் பிரியமானவள் சீரியல் வரும் சனிக்கிழமையோடு முடிவுக்கு வருது. இதன் மறு ஒளிபரப்பு பகல் நேர சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
முதலில் பிரியமானவள் சீரியலில் எல்லார் மனதையும் கவர்ந்தவர் அதில் கிருஷ்ணனின் மனைவியாகவும், நான்கு ஆண் பிள்ளைகளின் அம்மாவாகவும் நடித்த உமாதான்.

அவ்வளவு அழகு...அம்மா கதாபாத்திரத்துக்கே உண்டான கனிவான முகம் என்று பார்ப்பவர்களின் நெஞ்சங்களை அள்ளினார். சீரியல் எடுத்த எடுப்பிலேயே கொலை, ஆள் கடத்தல்னு ஒரே திகில்தான்.
போலீஸ், விசாரணை இதுக்கு கொஞ்சமும் குறைவில்லை. இதனாலேயே கிரியாக நடித்த வில்லன் போலீஸ் காதாபாத்திரமும் எல்லாருக்கும் பிடிச்சு போச்சு.
சீரியல் முடியும் இந்த நேரத்தில் கிரியாக நடிச்சவர் குழந்தைகளுக்கு நான் ரொம்ப பிடிச்சவனா இத்தனை நாள் பிரியமானவள் சீரியல் மூலம் இருந்தேன்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலான பயணம். ஒரு நாள் ஹோட்டலுக்கு சாப்பிட போலாம்னு போயிகிட்டு இருந்தேன்..கிரி அங்கிள்னு ஒரு சத்தம். சுத்தி சுத்தி பார்க்கிறேன் யாரையும் காணோம்.
நான் மறுபடியும் போயிகிட்டு இருந்தேன்..இப்போ தம்பி தம்பின்னு ஒரு வயசான அம்மா கூப்பிட்டாங்க. திரும்பி பார்த்தேன்..என்ன தம்பி என் பேத்தி உங்களை கூப்பிட்டுக்கிட்டே இருக்கு..நீங்க பாட்டுக்கு போறீங்கன்னு கேட்டாங்க.
பார்க்கறேன்.. இத்துனூண்டு குழந்தை..எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது. இப்போ குழந்தைகள் வில்லன்களை அதிகம் விரும்புகிறார்கள் என்று கூறினார்.

எது எப்படியோ.. பிரியமானவள் சீரியலின் அழகிய அம்மா சனிக் கிழமையோடு டாடா காமிக்க போறாங்க. இதுவரை 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலின் நேரத்தை டப்பிங் சீரியலான அருந்ததி பிடித்துள்ளது.
அருந்ததி சீரியலின் கதை பக்தியுள்ள பெண்ணுக்கும், இவளை அழித்தே தீர வேண்டும் என்கிற ஒரு பேய்க்குமான கதைன்னு நடிகை கோவை சரளா ப்ரோமோவுல சொல்லிக்கிட்டு இருக்காங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications