பிரியங்காவுக்கு மேடையிலேயே முத்தம்! பிரபலத்துடன் மகிழ்ச்சி வாழ்வு ஆரம்பம்! பக்கெட் லிஸ்ட் நிறைவேறுது
சென்னை: விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே திடீரென்று 2-ஆவது திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் பிரியங்காவுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. அப்போது பிரியங்காவின் பக்கெட்லிஸ்ட் நிறைவேறவும் ரசிகர்கள் வாழ்த்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.. பிரியங்கா திருமணம் செய்துள்ள மாப்பிள்ளை யார் யார் தெரியுமா?
விஜய் டிவி பிரியங்கா முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார்.. சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊ ஊம் சொல்றியா என்ற ரியாலிட்டி ஷோக்களை இப்போதும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எத்தனையோ சலசலப்புகள், சர்ச்சைகள் வந்தாலும்கூட, பிரியங்காவிற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளங்களே உண்டு. இந்நிலையில் நேற்று வசி என்பவரை திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளார்.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிறைவேறுதா பக்கெட் லிஸ்ட்
ரசிகர்கள் பிரியங்காவுக்கு திருமண வாழ்த்து சொல்லி வருவதுடன், பக்கெட் லிஸ்ட் விரைவில் நிறைவேறும் என்று ஆல் தி பெஸ்ட் சொல்லி வருகிறார்கள்.. காரணம், சமீபத்தில் தன்னுடைய பக்கெட் லிஸ்ட் பற்றி பிரியங்கா பேசியிருந்தார்..
அதில், பிக் பாஸ் போக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது.. இனி நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.. என்னை என்னுடைய கணவர் தாங்க வேண்டும்.. இப்போதைக்கு என்னுடைய தம்பி குழந்தை தான் எனக்கு எல்லாமே" என்று கூறியிருந்தார். இதையடுத்து, பிரியங்காவுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து கவருகிறார்கள.
பிரியங்காவின் காதல்
பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். பிரியங்காவின் திருமண வீடியோவும் இணையத்தில் தற்போது பரவி வருகிறது. அந்த வீடியோவில் தலை நரைத்த ஒருவர் தாலி கட்டியதுமே பிரியங்கா எமோஷனல் ஆகிவிடுகிறார், உடனே மாப்பிள்ளை நெற்றியில் முத்தம் தந்து அவரை ஆசுவாசப்படுத்துகிறார்.. யாரிந்த மாப்பிள்ளை என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பிரியங்கா திருமணம் செய்துள்ளவரின் பெயர் வசி.. இவரும் பிரபல டி.ஜே. (DJ)வாக இருந்து வருகிறார்.. சொந்தமாக ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்... பிரபல கிளப், discotheque போன்றவை மட்டுமின்றி பல பெரிய திருமண நிகழ்ச்சிகளுக்கு டி.ஜே.வாக வசி இருந்திருக்கிறார். பார்ட்டி, திருமண வரவேற்பு போன்றவற்றில் தன்னுடைய குழுவுடன் சென்று பாடல் கச்சேரிகளை செய்து வருகிறார்.
விஜே - டிஜே காதல்
அந்தவகையில் 3 வருடங்களுக்கு முன்பே, வசியின் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பங்கேற்றிருக்கிறார்.. அப்போது பிரியங்கா பாடிய வீடியோவும் வெளியாகியிருக்கிறது... அந்த நிகழ்ச்சியில் தான் பிரியங்கா மற்றும் வசி இருவரும் சந்தித்து கொண்டிருக்கிறார்கள். பிறகு இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. அந்தவகையில், தன்னுடைய நீண்டகால நண்பரையே பிரியங்கா திருமணம் செய்துள்ளார்.. அதாவது பிரியங்கா வி.ஜே என்றால், வசி டி.ஜே ஆவார்.
பிரியங்கா - வசி திருமணத்தில் நெருங்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.. இதில், பலரது கவனத்தையும் ஈர்த்தது பிக்பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்றிருந்த அமீர், பாவ்னி இருவரும்தான்..
பங்கேற்ற காதல் ஜோடி
பிக்பாஸ் வீட்டிலேயே அமீர் பாவனியை காதலிப்பதை வெளிப்படுத்தியிருந்தார். பிக்பாஸிலிருந்து வெளியேறிய பிறகு தங்கள் காதலை பகிரங்கமாக அறிவித்தார்கள்.. இந்த சீசனில்தான், பிரியங்காவும் இவர்களுடன் பிக்பாஸில் கலந்து கொண்டிருந்தார்.. பாவனி - அமீர் இருவருக்கும் திருமணம் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், பிரியங்காவின் திருமணத்திற்கு இருவரும் ஜோடியாக சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications