கட்டில் மீது ஒத்தைக் காலை தூக்கி வச்சு.. இது என்ன போஸ்.. பிரமிக்க வைக்கும் பிரியங்கா!
சென்னை: சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அப்பப்போ போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ரோஜா சீரியல் கதாநாயகி பிரியங்க நல்கர் வித்தியாசமான போட்டோவைப் போட்டுள்ளார்.
கட்டில் மீது ஒரு காலை மட்டும் தூக்கி வைத்து வித்தியாசமாக அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது. அதேபோல மொட்டைமாடி போட்டோஷூட்டில் விதவிதமான போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணி இருக்கிறார்.
இவரது போட்டோஸ் இப்போ வைரலாக பரவி வருகிறது. குறுகிய காலத்தில் ரசிகர்களின் இதயங்களைக் கைப்பற்றியவர் இந்த பிரியங்கா. கொழுகொழுவென்று இருக்கும் இவரை குடும்பம் குடும்பமாக ரசித்து மகிழ்கிறார்கள்.

அழகிய தமிழ்
இவர் ஆந்திரா பெண்ணாக இருந்தாலும் தமிழ் அழகாக பேசுபவர். இவர் தமிழில் காஞ்சனா படத்தின் மூலமாக அறிமுகமாகி தற்போது ரோஜா சீரியல் மூலம் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவரது கேரக்டர் ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெருகிக்கொண்டு வருகிறது.

ரோஜா
தற்போது ரோஜா சீரியல் பெரும் பரபரப்பு ஓடும் முக்கியமான திருப்பங்களோடும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிஐடி ஆபிஸர் ரேஞ்சுக்கு இறங்கி வேலை செய்து கொண்டிருப்பவர் ரோஜா .இவர் இந்த சீரியலில் மனைவியாக நடித்து இந்த வீட்டிற்குள் உள்ளே நுழைந்து தற்போது அர்ஜுனனை உண்மையாக காதலித்து அவருக்காக எதையும் செய்யும் அளவிற்கு தன்னுடைய உயிரை பணயம் வைத்து வேலை செய்துகொண்டிருக்கிறார்.

திருப்பங்கள் நிறைந்த சீரியல்
பல திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. டிஆர்பி ரேட்டிங் கிலும் முன்னணியில் இருக்கிறது. இவ்வளவு இந்த சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் கிடைக்கும் கொஞ்ச நேரங்களிலும் பிரியங்க நல்கர் சும்மா இருப்பதில்லை தன்னுடைய பெயரில் ஒரு யூடியூப் சேனல் ஓபன் பண்ணி அதில் விதவிதமான வீடியோக்களை போட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் லைவ்
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து ரசிகர்களுடன் கொண்டாடினார். சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது இவர் கல்யாண பொண்ணு போல மேக்கப் பண்ணிக்கொண்டு லைவ்வில் வந்து ரசிகர்களிடம் பேசினார். யூடியூப் சேனல் மட்டுமல்லாமல் வீட்டிலேயும் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் குவித்து வருகிறார்.

மொட்டை மாடி போட்டோஸ்
எப்பவும் மொட்டை மாடியில் ஆட்டம் போட்டு வீடியோக்களை அப்டேட் பண்ணிக் கொண்டிருக்கும் இவர் தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணி இருக்கிறார். அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்திருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்களை வைத்து இருக்கிறார். அதனால் இவர் போட்டோ போட்டதும் ரசிகர்கள் கமெண்ட்டுகளாக குவிக்கிறார்கள்.

ஒத்தைக் காலை தூக்கி வைத்து போஸ்
இப்போது கூட பெட்ரூமில், கட்டில் மீது காற்றோட்டமாக ஒற்றைக் காலைத் தூக்கி வைத்துக்கொண்டு கலக்கல் போஸ் கொடுத்திருக்கும் இவரது போட்டோக்களை பார்த்து பல ரசிகர்களும் உருகி உருகி வழிந்து கமெண்டுகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இருந்தாலும் தனக்கே உரிய சிரிப்போடு ஒவ்வொரு போட்டோக்களை அப்லோட் பண்ணி கொண்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications