Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம மழை.. நடு ரோட்டுல.. ஒத்தக் காலை தூக்கிட்டு.. பிரமிக்க வைத்த பிரியங்கா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை பெஞ்ச நேரத்துல நடு ரோட்டில், டைட்டான டிரஸ்ஸோட ஒத்த காலில் ஆட்ட போட்ட பிரியங்கா நல்ககாரியைப் பார்த்து என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நடிகைகள் கொண்டாட்டமாக சூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ ஷூட் நடத்தி கலக்கி வருகிறார்கள். அதுவும் தற்போது ரோஜா சீரியலில் நடிக்கும் பிரியங்கா நல்கரி நடுரோட்டில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் வேற லெவல் வைரலாக பரவி வருகிறது.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் பல நடிகைகளும் சீரியலை முடித்து வெளியே வந்த பிறகு தான் தெரியும் அவர்களின் ஆட்டமும் பாட்டமும். அந்த மாதிரிதான் தற்போது ரோஜா சீரியலில் நடிக்கும் பிரியங்கா நல் கரியும் தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.

 ரோஜா ரோஜா

ரோஜா ரோஜா

பிரியங்கா, ரோஜா சீரியலில் படு போல்டான கேரக்டரில் ஹோம்லியாக நடித்திருப்பார். இவருக்கு இந்த சீரியல் மூலமாக பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முதல் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீரியலில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமாக இவரைதான் பல ரசிகர்களும் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

 ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

ஆனால் சூட்டிங் இல்லாத மற்ற நேரங்களில் ஆட்டம் போடுவது பிரியங்காவுக்கு செம கொண்டாட்டமாக இருக்குமாம். அதுவும் தற்போது மழைக்காலம் என்பதால் ஷூட்டிங் முடித்துவிட்டு அவுட்டோர் போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார் .அதுவும் மழை பெய்த ரோட்டில் விதவிதமான ஆங்கிளில் போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .இந்த போட்டோஸ்கள் அவருடைய ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக தான் இருக்கிறதாம்.

 சேலை கட்டி செம போஸ்

சேலை கட்டி செம போஸ்

தான் மட்டும் இல்லாமல் தனது தோழியரோடும் கிடைக்கும் பிரேக்கை எல்லாம் செமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம் பிரியங்கா. அதுமட்டுமல்லாமல் சேலை கட்டிக் கொண்டும் விதவிதமான போட்டோக்களை எடுத்து இருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்ததும் இவருடைய ரசிகர்கள் ஏகத்துக்கும் இவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். சூட்டிங் நேரத்திலும் கூட போட்டோஸ் எடுக்க பிரியங்கா தவறுவதில்லையாம்.

 லைவிலும் வருவார்

லைவிலும் வருவார்

சில நேரங்களில் லைவில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வருவார். இவருடைய ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு புகைப்படங்களை வாரி வழங்கி வருகிறார். அடிக்கடி பிரியங்கா எடுக்கும் போட்டோ ஷூட் களை விடவும் இந்த போட்டோ ஷூட் வித்யாசமாக இருக்கிறது. இவர் சேலை கட்டிக்கொண்டு நடுரோட்டில் படு கெத்தான பார்வையோடு உட்கார்ந்திருக்கும் போட்டோஸ் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

 என்னா லுக்கு

என்னா லுக்கு

இதை பார்த்த பல ரசிகர்களும் கமெண்ட்டுகளை பொழிந்து வருகிறார்கள். சிலர் இதில் என்ன ராஜமாதா நினைப்பா அந்த அளவிற்கு லுக்கு விட்டு ரசிகர்களை மிரட்டுகிறீர்களே என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் இந்த போட்டோவை பார்த்து திமிரு படத்தின் ஹீரோயினி போல திமிராக இருக்கிறீர்களே என்றெல்லாம் வர்ணித்து வருகிறார்கள்.

 அந்த வெட்கம் இருக்கே.. ஆஹா!

அந்த வெட்கம் இருக்கே.. ஆஹா!

இன்னொரு போட்டோவிலும் ரோட்டில் அமர்ந்து வெட்கத்தோடு கொலுசு மாட்டுவது போல ரொம்பவே சூப்பராக போஸ் கொடுத்து போட்டோ எடுத்திருக்கிறார். அந்த வெட்கம் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. இவருடைய வெட்கத்தை பார்த்து பல ரசிகர்களும் கவுந்து விட்டார்களாம். இப்படியெல்லாம் வெட்கப்பட்டால் எங்களுக்கு என்னென்னமோ பண்ணுது என்று திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+