தல படத்துல தங்கச்சி.. ரஜினிகாந்த்துக்கு ஜோடி.. போதும்.. இது போதும்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ரோஜா சீரியல் நடிகை பிரயங்காவுக்கு இவ்வளவு ஆசையா?- வீடியோ

    சென்னை: பிரியங்கா மனசுல ரெண்டே ரெண்டு குட்டியூண்டு ஆசை மட்டும் இருக்காம். அது நிறைவேறினால் போதுமாம்.

    சன் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் ரோஜா. இதுல சீனியர் நடிகை வடிவுக்கரசி நடித்திருப்பது ஒரு பெரிய பிளஸ். இருந்தாலும் கதையின் நாயகி ரோஜா, இவரின் உண்மையான பேர் பிரியங்கா.

    பிரியங்கா, பிரியங்கா.. கொஞ்சம் பேசலாமா என்று ஒன்இந்தியா தமிழ் வாசகர்களுக்காக அவரை அணுகவே.. ஓகே சொல்லி நம்மிடம் பகிர்ந்தவை இதோ..

     பிரியாணியில் மசாலா கம்மி

    பிரியாணியில் மசாலா கம்மி

    அதற்கு முன்பு பிரியங்கா பற்றி.. ஹைதராபாத் பாசுமதி பிரியாணியான இவரின் குரலில் அவ்வளவு காரமில்லை (மிதமான கரம் மசாலா பிரியாணி). அத்தனை ஸோ சுவீட்டாக இவர் பேசுகிறார்.

     பிரியங்காதாங்க

    பிரியங்காதாங்க

    நான் ஹைதராபாத்துல பேபி ஆர்ட்டிஸ்ட். அப்புறம் டான்சர். ஆங்கர் அப்புறம்தான் சினிமா நடிகையானேன். பார்த்தா வரிசையா தங்கச்சி ரோல்தான். 9 படம். முதலில் அந்தரி பந்துவாயான்னு ஒரு படம். தமிழ் நடிகை பத்மபிரியா தங்கச்சியா நடிச்சேன். அதுல நல்ல ரோல், தங்கச்சி வேஷமா கூப்பிடுங்க பிரியங்காவான்னு சொல்ற மாதிரி ஆயிருச்சு.

     கஷ்டப்படுத்திய படம்

    கஷ்டப்படுத்திய படம்

    ரவி தேஜா, ராகுல் பிரீத்தி சிங், சுதிர் பாபு,ஆதிகாரு, தனிஷ்ன்னு என்னோட அண்ணன்களின் பட்டியல் நீண்டு போச்சு. எனக்கு தங்கச்சி ரோல்னாலும், விதவிதமான ரோல்தான். இந்த நிலையில் கடவுள் இருக்கான் குமாருன்னு சித்தார்த், ஹன்சிகா நடிச்ச தமிழ் படத்துக்கு சான்ஸ் வந்துச்சு. ரொம்ப சின்ன ரோல்... மனசு கஷ்டமாத்தான் இருந்துச்சு.

     புரொமோஷன்!

    புரொமோஷன்!

    தமிழ் இண்டஸ்ட்ரி எனக்கு ரொம்ப புடிக்கும். ரோஜா சீரியலுக்கு ரெண்டு மாசமா கூப்டுகிட்டு இருந்தாங்க. தள்ளிப் போட்டேன், தமிழ் இண்டஸ்ட்ரி ஆசை விடலை . சரின்னு டிவிக்கு வந்துட்டேன். வந்தப்போ ஆடிஷன் இல்லை, நேரா புரொமோஷன் ஷூட். ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

     ஓபன் ஹார்ட்

    ஓபன் ஹார்ட்

    நடிப்பில் நல்ல பேர் வாங்கிட்டேன். வடிவுக்கரசி அம்மாவோட பேபி ஆர்டிஸ்ட்டா அம்முன்னு ஒரு தெலுங்கு படத்துல நடிச்சு இருக்கேன்.அவங்க ரொம்ப சுவீட. வீட்லேர்ந்து எது செய்தாலும் கொண்டு வந்து கொடுப்பாங்க. சமயத்துல அவங்க மடியில படுக்க வச்சுப்பாங்க. காயத்ரி அக்கா ரொம்ப ஃப்ரண்ட். எங்களுக்குள்ள ரகசியமே கிடையாது. எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்போம்.

     தங்கச்சி ரோல்தான்

    தங்கச்சி ரோல்தான்

    சினிமாவுல நடிக்க ரொம்ப ஆசை. இப்போ லாரன்ஸ் மாஸ்டரின் காஞ்சனா 3 படத்துல தங்கச்சி ரோல்தான் பண்றேன். அவரோட டான்ஸ் ரொம்ப புடிக்கும். பிற்காலத்துல நடிகையானா ரஜினி சாருக்கு ஜோடியா நடிக்கணும். இது கொஞ்சம் ஓவர்தான் (சிரிக்கிறார்). இல்லேன்னா லாரன்ஸ் மாஸ்டர் படத்துல வெயிட் கேரக்டர்ல நடிக்கணும்.

     தல படத்துல?

    தல படத்துல?

    சிவா மனசுல சக்தி தெலுங்கு ரீ மேக்ல, ஜீவாவுக்கு தங்கச்சி ரோல் போல, தெலுங்கு நடிகருக்கு தங்கச்சியா இவர் நடிச்சாராம். வேதாளம் படத்தில் நடிகை லட்சுமி மேனனுக்கு அஜித்தின் தங்கச்சி வேஷத்துக்கு கிடைச்ச மாதிரி, இவர் நடிச்ச தங்கச்சி கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைச்சுதாம். சொல்லிட்டீங்கள்ல..அடுத்த படத்துல அஜித்துக்கு தங்கச்சி நீங்கதான் என்றால், அதுவும் எனக்கு பெருமைதான் என்கிறார்

     தமிழ் கலையுலகம்

    தமிழ் கலையுலகம்

    வடிவுக்கரசி: முதலில் இந்த சீரியலில் நடிக்க எனக்கு வாய்ப்பு குடுத்த டைரக்டருக்கு நன்றி. ரோஜா தலைப்புக்கு ஏத்த மாதிரி, ரோஜா மாதிரி ஃபிரஷான, அழகான பொண்ணை ஹீரோயினா நடிக்க வச்சு இருக்காங்க.தெலுங்கு பொண்ணுதான், தமிழ் அவ்ளோ அழகா பேசும்.. வந்தாரை வாழ வைக்கும் தமிழ் கலையுலகம். தமிழ் மீது கொள்ளை பிரியம் வைத்துள்ள இந்த பொண்ணையும் நல்லாவே வாழ வைக்கும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+