எலும்பும் தோலுமாய்! ஆளே மாறி போய்! நடிகர் ஸ்ரீ-யை கண்டுபிடிக்க உதவுங்கள்! தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
சென்னை: நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். அவர் கண்டுபிடிக்கப்பட்டு பழைய உடல்நிலைக்கு திரும்ப வேண்டும். இதற்கு யாராவது உதவி செய்ய வேண்டும் என கடைசியாக ஸ்ரீ நடித்த இறுகப்பற்று படத்தின் தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடிகர் ஸ்ரீயின் உடல்நலம் குறித்து நல் வாழ்க்கை குறித்து நாங்கள் உண்மையிலேயே மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவரை தொடர்பு கொள்ள அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார்கள்.
அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் ரெக்கை கட்டி பறப்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. எனினும் ஸ்ரீயை கண்டுபிடித்து அவரை பழைய நிலைக்கு, பழைய ஆரோக்கியத்திற்கு கொண்டு வருவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவரை கண்டுபிடிக்க யாராவது எங்களுக்கு உதவி செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். உண்மை தெரியாமல் யாரும் ஸ்ரீ குறித்து கருத்து தெரிவிக்காதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
We ar genuinely concerned about the health and well being of Shri. His family and friends including us are trying to reach him for a long time. It is so unfortunate that there is so much speculation forming around it. But reaching Shri and bring him back to good health will be…
— SR Prabu (@prabhu_sr) April 14, 2025
கனா காணும் காலங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர் இந்த சீரியலை தொடர்ந்து வழக்கு எண் 18-9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
இறுகப்பற்று
அவர் கடைசியாக நடித்த படம் இறுகப்பற்று ஆகும். இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் மெலிந்து, மேலாடை இன்று ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் ஸ்ரீயின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இன்ஸ்டாகிராம் பக்கம்
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த பலர் ஸ்ரீக்கு என்ன ஆனது, அவரது இந்த நிலைக்கு என்ன காரணம் என பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
ஸ்ரீ தலை முடிக்கு கலரிங்
அந்த புகைப்படங்களில் ஸ்ரீ தலை முடிக்கு கலரிங் செய்துள்ளார். உடல் மெலிந்து எலும்பும் தோலுமாய் காட்சியளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மச்சானுக்கு என்ன ஆச்சு என ஸ்ரீ குறித்து தனது உதவி இயக்குநர்களிடம் கேட்டறிந்து வருகிறாராம். மேலும் அவர் எங்கே இருக்கிறார் என கண்டுபிடிக்க சொல்லியிருக்கிறாராம்.
37 ஆண்டுகள்
ஸ்ரீ வெளியிடும் பதிவுகளில் கர்மா காரணமா, இல்லை காசு காரணமா, 37 ஆண்டுகள் ஏமாற்றிக் கொண்டு இருந்துள்ளேன் என புரியாத புதிர் போன்ற பதிவுகளை எல்லாம் போட்டு வருகிறாராம். தனக்கு அழகான பெண்கள், பெண்ணாக மாறிய ஆண்கள் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றும் பதிவிட்டுள்ளாராம்.
ரசிகர்கள் கோரிக்கை
இதையடுத்து ரசிகர்கள், அவரது பதிவிலேயே என்ன நடந்தது, ஏன் இப்படி இருக்கிறீர்கள். வெளியே வாருங்கள் எதுவாக இருந்தாலும் மருத்துவமனைக்கு போய் சிகிச்சை மேற்கொள்ளலாம் என கூறி வருகிறார்கள். மேலும் இதை பலர் பட புரமோஷனாக இருக்கலாம் என்கிறார்கள்.
பட புரமோஷனா?
ஆனால் பட புரமோஷன் என்றால் இப்படியா உடல் மெலிந்து காணப்படுவார்கள். அதுவும் தன்னை வறுத்திக் கொண்டா விளம்பரம் தேடுவார்கள் என விவாதங்கள் நடக்கின்றன. ரசிகர்கள் கேட்ட கேள்விகள் எதற்கும் விடை சொல்லவில்லை. மேலும் அவர் புதிதாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
யார் இந்த ஸ்ரீ?
நடிகர் ஸ்ரீ சென்னையை சேர்ந்தவர். இவருடைய முழு பெயர் ஸ்ரீராம் நடராஜன். இவர் விஸ்காம் படித்துள்ளார். பின்னர் கனா காணும் காலங்கள் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அப்படியே சினிமாவுக்குள் நுழைந்தார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications