thenmozhi BA serial: என்னங்க கதை விடறீங்க.. ஒருத்தருக்கு பதில் இன்னொருத்தரா?
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் தேன்மொழியின் சிஸ்டர் இன் லா குழந்தை பிறக்க வேண்டி, கோயிலில் அங்கபிரதட்சம் செய்யறேன்னு வேண்டிக்கிறாங்க. விரதம் இருந்த அவங்களாலே அங்கப்பிரதட்சணம் செய்ய முடியலையாம்.
ஐயர் சொல்றார், வேண்டிக்கிட்டு செய்யாம இருந்தால் சாமி குத்தம் என்று. சரின்னு முயற்சி செய்யலாம்னு பார்த்தாலும் தேன்மொழியின் சிஸ்டர் இன் லாவால் முடியலை. உடனே இதை பார்த்த ஐயர் என்ன சொல்லுவார்?
அதுதாங்க.. அவங்களால முடியலேன்னா இன்னொரு நாளைக்கு கூட இதைத் தள்ளிப் போடக் கூடாதாம். அவங்களுக்கு பதில் அந்த குடும்பத்தைச் சார்ந்த சுமங்கலி பெண்கள் இந்த வேண்டுதலை நிறைவேற்றலாமாம்.

எந்த ஊர் நியாயம்?
விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் ஒரு பிள்ளைத் தாய்ச்சி பெண்ணுக்கு அவளால் முடியவில்லை என்று அந்த பெண்ணுக்கு பதில் ஜானு கையில் அகல் விளக்கை ஏத்தி அக்கினியில் நடந்து வரும் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கிறாள். இப்போது குழந்தை பேறு வேண்டி தேன்மொழியின் சிஸ்டர் இன் லாவுக்கு பதில் தேன்மொழி கோயிலில் அங்கபிரதட்சணம் செய்யறா.தேன்மொழி பிஏ சீரியலில்.

அங்கபிரதட்சணம் செய்தால்
அங்கபிரதட்சணம் செய்தால் குழந்தை பிறந்துருமா? டாக்டர்கிட்டே கன்சல்ட் பண்ணுவியா அதை விட்டுட்டு இந்த காலத்துல அங்கபிரதட்சணம் செய்துகிட்டு என்று ஹீரோ அருள் திட்டுகிறான். அதுக்கு தேன்மொழி பிஏ, ஹீரோ சார் அங்கபிரதட்சணம் செய்தால் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு குழந்தை உண்டாகும் பாக்கியம் கிடைக்கும் என்று அறிவியல் ரீதியாக பேசுகிறாள்.

அவருக்கு பதிலாக
ஆனால், அவளுக்கு பதிலாக இவள் அங்கபிரதட்சணம் செய்தால் எப்படி அறிவியல் ரீதியாகக் கூட குழந்தை பேறு பாக்கியம் கிடைக்கும். முதலில் இவருக்கு பதில் இவர் என்று போட தெய்வ வழிபாடு என்ன தொலைக்காட்சி சீரியலா?என்னதான் சீரியல்தான் என்றாலும் கூட தெய்வ காரியத்திலும் உங்கள் வரைமுறையைத் தளர்த்திக் கொள்வீர்களா?

எதற்கு வேண்டுதல்?
இந்த விதிமுறைகளைத் தளர்த்துவதற்காகவும், புது புது வேண்டுதல்கள் என்று மிக கஷ்டமான வழிபாடுகளை புகுத்துவதற்காகவும் தொலைக்காட்சி சீரியல்களில் வேண்டுதல், தெய்வ வழிபாடு என்று வைப்பீர்களா? கற்பனைக்கு தெய்வ வழிப்பாட்டையும் வளைத்துக் கொள்வீர்கள்... அதுக்கு பொய்யா ஒரு கோயிலை செட்டப் செய்துக்கொண்டு நீங்களே வழிபாட்டு முறைகளையும்மாத்திக்க வேண்டியதுதானே..பலரும் வந்து சாமி கும்பிடும் அந்த கோயிலில் உங்கள் கற்பனையைப் புகுத்தி வேடிக்கை பார்க்கிறீர்களா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications