Eeramana Rojaave Serial: டோர் டெலிவரி... வீடு தேடி சாப்பாடு..என்ன கஷ்டம்?
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவின் கணவன் புகழ், சாப்பாடு ஆர்டர் செய்கிறவர்களுக்கு வீடு தேடி சாப்பாடு கொண்டு கொடுக்கும் ஆன் லைன் டோர் டெலிவரி வேலை பார்க்கிறான்.
வேலைக்குப் போறேன்னு பைக்கில் ஊர் சுற்றுவதா இந்த டோர்டெலிவரி பாயின் வேலை? பொசுக்குன்னு ஒரு டோர் டெலிவரி பையனப் பார்த்து இப்படி சொல்லிட்டாளே.. அவன் எந்த அளவுக்கு கொந்தளிக்கப் போறான் என்று பார்த்தால் உண்மைதான்...
கோபம் வந்துருச்சு அவனுக்கு எங்களோட கஷ்டம் புரியாம இப்படி ஈஸியா சொல்லிட்டீங்களே மேடம்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டான். அகிலாவால் ஒன்னும் பேச முடியலை.

அகிலா புகழ்
அண்ணன் வெற்றி வயலில் இறங்கி தானே விவசாயம் பார்த்துக்கொண்டு இருக்க, தம்பி புகழ் வீட்டில் சும்மா இருப்பது மனைவி அகிலாவுக்கு பிடிக்காமல் போகுது. இப்படி வெட்டியா வீட்டில் உட்கார்ந்து இருக்கியே.. நீயும் வேலைக்கு போகலேன்னா ரெண்டு பேரும் எப்படி உட்கார்ந்து சாப்பிட முடியும். நாளையிலேர்ந்து நான் வேலைக்கு போறேன்னு சொல்றா அகிலா.

ஆன்லைன் டோர்டெலிவரி
புகழுக்கு உடனே ரோஷம் வந்து ஆன்லைன் டோர்டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறான். காலையில் போனால் இரவுதான் வீட்டுக்கு வருகிறான். இதை பொறுத்துக்க முடியாமத்தான் ஒரு பையனிடம் வேலைக்கு போறோம்னு பைக்கில் பொழுதுக்கும் ஜாலியா ஊரை சுத்திட்டு ராத்திரி வீட்டுக்கு வரவேண்டியதுன்னு சொல்லிட்டா.

எங்க கஷ்டம்
எங்க கஷ்டம் உங்களுக்குத் தெரியுமா மேடம்..சாப்பாடு கொண்டு வர கொஞ்சம் லேட்டாயிருச்சுன்னா ஏதாவது பேசி உங்களை கூல் பண்றோம்னு சொல்றீங்க. அப்படி இல்லை மேடம்...ஒரு நாளைக்கு கொஞ்சம் கிலோ மீட்டர்னா பைக் ரிப்பேர் ஆகாது. தினமும் பல கிலோ மீட்டர் போகும் எங்க பைக் எதாவது ஒரு சமயம் பஞ்சர் அது இதுன்னு ஆகத்தான் மேடம் செய்யும்.

என்னதான் பிரச்சனை
பைக்கில் பிரச்சனை இல்லை... டிராஃபிக் பிரச்சனை என்று எது வந்தாலும் அதையும் சமாளிச்சு, கஸ்டமருக்கு பசி நேரத்துல உணவைத் தரணும்னு குறிக்கோளில்தான் மேடம் நாங்க இருப்போம். வெயில், மழை, புயல்னு எது இருந்தாலும் எங்களுக்கு உணவை சரியான நேரத்தில் உங்களுக்கு சேர்த்தால்தான் மேடம் எங்களை குறை சொல்ல மாட்டாங்க. லேட்டா வந்தா கேட்கறீங்களே.. என்னிக்காவது சரியான நேரத்துல வந்து உங்க பசியைத் தீர்த்தத்துக்கு நன்றி சொல்லி இருக்கீங்களான்னு கேட்கிறான். அகிலாவுக்கு கன்னத்தில் அடித்தது போல் இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications