புகழ்...யாருக்கு வேணும்னாலும் நீங்க ரெமோ முத்தம் தரலாம் போல....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் புகழ், நடிகை ரேகாவுக்கு அந்நியன் படத்தின் ரெமோ முத்தம் போல உதட்டைத் துடைத்து ஒரு முத்தம் பறக்க விடுகிறார்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்குகள், இவர்கள் சமையலை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்வது போல கோமாளிகள்...இப்படியான ஒரு நிகழ்ச்சி இது. என்றாலும் குக்கு வித் கோமாளி சூப்பர் ஹிட் ஷோ.

கோமாளிகள் சமையலை கெடுப்பார்கள் என்று நினைத்தால் பாலா, புகழ், சிவாங்கி மூவரும் குக்குகளுக்கு நன்றாகவே உதவி செய்யும் கோமாளிகளாக இருந்தனர்.

 தேர்ந்தெடுத்த கோமாளிகள்

தேர்ந்தெடுத்த கோமாளிகள்

குக்குகள் கோமாளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி நடிகை ரேகா தேர்ந்தெடுக்கும்போது அவருக்கு புகழ் கோமாளியாக கிடைத்தார். ரேகா சமைக்கும்போது தவறு செய்துவிட்டால் டென்ஷனில் கோமாளியை நன்றாக போட்டு அடித்து விடுவார். அப்படி அடிவாங்கிய கோமாளிகளில் மணிமேகலை ஐயோ பாவம்!

 புகழ் மச்சான்

புகழ் மச்சான்

புகழும், நடிகை ரேகாவும் ஏற்கனவே ஓரிரு எபிசோடுகளில் குக் கோமாளியாக ஜோடி சேர்ந்தவர்கள். அப்போதே புகழ் ரேகாவை மாப்பிள்ளை என்று கூப்பிட, ரேகா புகழை மச்சான் என்று கூப்பிட்டு பழக்கம். இப்போதும் மாப்ளே.. என்னை அடிக்க மாட்டேன்னு சத்தியம் செய்ங்க.. இல்லேன்னா இப்படியே போயிருவேன்னு சொல்ல...

 ஜெயிக்க வச்சுரு மச்சான்

ஜெயிக்க வச்சுரு மச்சான்

என்னை ஜெயிக்க வச்சுரு மச்சான்னு சொன்ன ரேகா...நிஜமா புகழை எனக்கு கோமாளியா வரவேற்கிறேன்னு சொன்னார். அப்போதுதான் புகழ், தனது உதட்டைத் தடவி நடிகை ரேகாவுக்கு அந்நியன் ரெமோ முத்தத்தைப் பறக்க விட்டார். இப்படி அநியாயத்துக்கு ஜாலியாக இருக்கிறது குக்கு வித் கோமாளி.

 டிரஸ் மாத்த மாட்டீங்களா?

டிரஸ் மாத்த மாட்டீங்களா?

தாமு சார்...கோமாளிகளுக்கு டிரஸ் மாத்தற மாதிரி, குக்குகளுக்கு டிரஸ் மாத்த மாட்டீங்களா என்று கேட்டார் புகழ். ஏண்டா என்று தாமு கேட்க, பின்னால் இருந்து பார்த்தல் ரேகா மேமுக்கும், மோகன் வைத்யாவுக்கும் வித்தியாசம் தெரியலை என்று கலாய்த்தார் புகழ். மோகன் வைத்யாவும் நிறைய முடி வளர்த்து ரேகா மாதிரி பேண்ட் ஷர்ட்டில் இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+