அடி பட்டாலும் பட்டது.. புகழ் ரம்யா பாண்டியனுக்கு உதவி செய்யறாராம்...!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளியில் நடிகை ரம்யா பாண்டியன் குக்காக கலந்துக்கொண்டனர். இவருக்கு கோமாளியாக மணிமேகலை வந்திருந்தார். மணிமேகலைக்கு அடிப்பட்டுவிட, இதற்கு கவலைப்படாத புகழ், 20 நிமிஷம் ரம்யா பாண்டியனுக்கு உதவி செய்கிறேன் என்று பெர்மிஷன் கேட்டுக்கொண்டு இருந்தார்.
Recommended Video
குக்கு வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார், உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், நடிகை ரேகா ஆகியோர் போட்டியின் இறுதியாளராக கலந்துக்கொண்டனர். நடிகை ரேகாவுக்கு புகழ் கோமாளியாக சேர்ந்தார்.
வனிதா விஜயகுமாருக்கு பாலாவும், உமா ரியாஸுக்கு சிவாங்கியும் கோமாளிகளாக வந்திருந்தனர். சிவாங்கி வாத்து சமையலோடு போராடிக்கொண்டு இருந்தார்.

சார் மணிமேகலைக்கு
சமையலுக்கு என்னவோ செய்துக்கொண்டு இருந்த மணிமேகலைக்கு அடி பட்டுவிட்டது. அடி பட்ருச்சு.. அடி பட்ருச்சு என்று ரம்யா உச்சுக் கொட்டிக்கொண்டு இருக்க, ரேகாவிடம் இருந்த புகழ், ரம்யாவிடம் ஓடிவந்து விட்டார். அடி பட்ருச்சா என்று கேட்ட அடுத்த நிமிடம், சார்... மணிமேகலைக்கு அடிபட்ருச்சு என்று கத்தினார்.

20 நிமிஷம்
என்னடா ஆச்சு என்று செஃப் தாமு கேட்க, மணிமேகலைக்கு அடி பட்ருச்சு. ரம்யா பாண்டியனுக்கு ஒரு 20 நிமிஷம் ஹெல்ப் பண்றேன்னு கேட்டுகிட்டே புகழ் நிற்கிறார். அதற்குள் செஃப் வெங்கடேஷ் வந்து, உனக்கு செய்ய குடுத்த டிஷ் பேரென்ன சொல்லு என்று மடக்கினார். சொல்லத் தெரியாத புகழ் சரி, நான் அங்கேயே போயி இருக்கேன்னு சொல்லிட்டு ரேகா பக்கமே போயிட்டார்.

வாத்து ஃ ப்ரை
அவரவர் இஷ்டப்பட்டதை சமைக்க தேவையானதை எடுத்து வரலாம்னு ஒரு செக்மென்ட். அதில் சமைக்க ரேகா வாத்து எடுத்து வந்தார். ஆனால், அதை போட்டியாளர்கள் மாற்றிக்கொண்டு சமைக்க வேண்டும் என்றபோது, வாத்து உமா ரியாஸ் கையில் வந்தது. பாவம் நான் வெஜ் ...இதெல்லாம் எனக்கு சமைக்க வராது என்று சொல்லியும் ஷிவாங்கிதான் அதை கிண்டும்படி, கிளறும்படி, கடாயில் இருந்து எடுத்து வடிக்கட்டும்படி ஆனது.

மாப்பிள்ளை புகை வருது
ரேகா மைக்ரோவ் அவனில் வைத்த டிஷில் இருந்து புகை வருகிறது என்று தாடி பாலாஜி கத்தினார். ஓடிய புகழ் அங்கு சூழ்ந்து இருந்த புகையைப் பார்த்து, ரேகாவை மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று அழைத்து, மாப்பிள்ளை புகை வருது மாப்பிள்ளை என்கிறார். மாப்பிள்ளை என்று ரேகாவை புகழ் அழைக்க மச்சான் என்று ரேகா இவரை அழைக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications