ராஷ்மிகாவின் எல்லைமீறிய கவர்ச்சி.. புஷ்பா 2-ல் ஹீரோயின் சம்பளம் இவ்ளோவா? நம்ப முடியலயே.. பிரபலம் நச்
சென்னை: புஷ்பா 2 படத்தின்மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.. ஆனால், அந்த எதிர்பார்ப்பையும் தாண்டி இந்த படம் அபாரமாக வெற்றி பெற்றுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த படத்தில் நடித்த ராஷ்மிகா குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
King 24X7 என்ற சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், "புஷ்பா 2 படம் முதல்நாளே 285 கோடி ரூபாய் வசூலாகியிருக்கிறது.. அடுத்த நாளில் 300 கோடி, 400 கோடி என்று எகிறிவிட்டது.. தெலுங்கில் இந்த படம் சூப்பர் ஹிட் என்றால், தமிழிலும் ஹிட் ஆயிடுச்சு. மலையாளத்தில் அவருக்கு நிறைய ரசிகர்கள் உண்டு.. இத்தனைக்கும் தெலுங்கு நடிகராக இருந்துக் கொண்டு, தமிழ், மலையாளத்தில் ரசிகர்கள் சேர்ப்பது மிகப்பெரிய விஷயம்.

இப்போதைக்கு மாஸ் ஹீரோ என்றால் அது அல்லு அர்ஜூனாதான். புஷ்பா 1 படத்தின் வெற்றியை அவரே எதிர்பார்க்கல.. எனவே, புஷ்பா 2 மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று யாருமே எதிர்பார்க்கல.
மாஸ் ஹீரோ: சிரஞ்சீவி ஜூனியர் என்டிஆர், பிரபாஸ், இவங்க எல்லாரையுமே தூக்கி சாப்பிட்டுட்டாரு. புஷ்பா பேன்-இந்தியா படம் என்பதால், இந்தியிலும் இவருக்கு கிரேஸ் வந்துவிட்டது. பயங்கரமாக அவர்கள் ரசிக்கிறார்கள். ஸ்டைலிஷான ஹீரோவாகவும் அல்லு அர்ஜூனா இருக்கிறார்.. லவ் சீன்களிலும் கலக்குகிறார். மனைவி பேச்சை கேட்கக்கூடியவராக இந்த படத்தில் நடித்துள்ளார்.. பெண்களை மதிக்கக்கூடிய கேரக்டரில் நடித்திருப்பதால், பெண்கள் மத்தியிலும் மிகப்பெரிய கிரேஸ் அல்லு அர்ஜுனாவுக்கு வந்துள்ளது.. இதில் ராஷ்மிகாவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார்.. காதலியுடன் இப்படி நடந்துகொண்டால்தான், அது தவறாக உறுத்தும். ஆனால், கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி என்று அவங்களுக்குதான் தெரியும்.. அந்தவகையில் ரொமான்ஸ் என்பது அவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டது.
தம்பதி : பொதுவாக, ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டால், தம்பதியிடம் ரொமான்ஸ் குறைந்துவிடுவது இயல்பாகிவிட்டது. கல்யாணம் ஆகி சில வருடங்கள் ஆகிவிட்டால், தம்பதி இருவருமே ஒருவரையொருவர் கண்டுகொள்ள மாட்டார்கள். தம்பதி மத்தியில் ரொமான்ஸ் இருக்கணும் என்பதை இந்த படம் சொல்கிறது. இதைவிட அதிகமான கவர்ச்சி இந்த படத்தில் இருந்திருக்கும். ஆனால், பெண்கள் மத்தியில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதற்காக அது தவிர்க்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகா ஏற்கனவே தமிழில் வாரிசு, சுல்தான் படங்களில் நன்றாக நடித்திருந்தும், பெரிதாக பேசும்படியான கேரக்டர்கள் அமையவில்லை.. ஆனால், புஷ்பா 2 படத்தில் இவரது கேரக்டர் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மனைவி சொல்லே மந்திரம், மற்றதெல்லாம் தந்திரம் என்பதுதான் இந்த படத்தின் முக்கிய கருவாக உள்ளது. அதனால்தான், ரொமான்ஸ் இந்த அளவுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.
கவர்ச்சி : அதேசமயம், கவர்ச்சி ஓவராகவும் போய்விடவில்லை. கதாபாத்திரத்திற்கேற்றபடி மாறியாக வேண்டியிருக்கிறது.. இதுதான், இந்த படத்திற்கு பலமாக உள்ளது. மரத்தை சுற்றி டூயட் பாடாமல், வீட்டிற்குள்ளேயே தம்பதிகளின் ரொமான்ஸ் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்துக்காக ராஷ்மிகாவுக்கு பெரிய சம்பளம் தரப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.. இனிமேல், அடுத்தடுத்து ஐந்தாறு படங்களில் அவர் புக் ஆகிவிடுவார்.. எப்படியும் 15 கோடி, 20 கோடி என்று சம்பளம் தரவும் இனி முன்வருவார்கள்.
திருமணம்: இப்போதைக்கு ராஷ்மிகாவுக்கு 28 வயசாகிவிட்டது. எப்படியும் இன்னும் 5 வருஷத்திற்குள் கல்யாணம் செய்து கொள்வார். அதேசமயம், விஜய்தேவரகொண்டாவுடன் காதலும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். இருவருமே சினிமா தொழிலை சார்ந்தவர்கள் என்பதால், புரிதல் நன்றாகவே இப்போதைக்கு உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications