Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புஷ்பா படத்தால பிரிய போகும் "பிரபல ஜோடி".. ஓவரா புகழ்ந்துட்டு போற போக்குல வெடிய வீசி.. யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படம் புஷ்பா 2 என்று பாராட்டு தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.. அத்துடன், ஒரு திரையுலக ஜோடி குறித்தும், யூகமான கணிப்பை வீசிவிட்டு சென்றுள்ளார்.

King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், புஷ்பா படத்தை பற்றி விமர்சனம் விலாவரியாக செய்துள்ளார்.

pushpa 2 the rule rashmika 2

அவர் சொல்லும்போது, "ஏற்கனவே புஷ்பா 1 படம் வெளியாகி மிகப்பெரிய வசூலை அள்ளியது.. இந்த 2024ம் ஆண்டின் அனைத்து பட வசூலையும், இந்த புஷ்பா படம் 2 கண்டிப்பாக ஓவர்டேக் செய்துவிடும். அதில் சந்தேகமேயில்லை. எப்போதுமே பொழுதுபோக்கு படம் என்றாலே லாஜிக் இல்லாத மேஜிக்காகவே இருக்கும்.. செம்மரக்கடத்தலை வைத்து, பல படங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.. ஆனால், இந்த செம்மரக்கடத்தலில் முதலமைச்சர் வரைக்கும் லஞ்சம் போவதுதான், இந்த படத்தின் அடிநாதமாக உள்ளது.

திருப்பாச்சி காப்பி: பேரரசு எழுதி இயக்கிய "திருப்பாச்சி" படத்தில், தங்கச்சியை அவமானப்படுத்திடுவாங்க.. உடனே விஜய் வெகுண்டெழுந்து ஆவேசத்தில் பொங்கி, கிளைமேக்ஸை முடித்திருப்பார்.. அதே திருப்பாச்சி படத்தின் கதையைதான், இந்த படத்தின் இயக்குனர் சுகுமாரன் வைத்திருக்கிறார்... பேரரசு படத்தின் காப்பியடித்த போர்ஷன், இதில் இடைவேளைக்கு பிறகு வருகிறது.. ஆக, புஷ்பா 2 படத்தின் கிளைமேக்ஸ், திருப்பாச்சி படத்தின் காப்பி என்பது தெளிவாக தெரிகிறது.

அதேபோல, இந்த படம் ரஜினி நடித்த பாட்சா படம் போலவே இருக்கு.. அதாவது 3 பாட்சா படத்துக்கு சமம் இந்த புஷ்பா 2 படம். அதுல ரகுவரன் எவ்வளவு வில்லனாக இருக்கிறாரோ, அதுபோலவே இந்த படத்திலும் வில்லன் வருகிறார். அதுல பாட்சா, பாட்சா என்று ரஜினி திரும்ப திரும்ப சொல்வது போல இதுலயும் வருது.

தமிழில் பேசினார்: அல்லு அர்ஜுன் இந்த படத்தில் ஸ்டைலிஷாக, தோளை தூக்கிட்டு நடக்கிறார்.. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே தமிழில்தான் பேசினார்.. இந்த படத்திலும் தமிழில் பேசியிருக்கிறார்.. அதுவும் வித்தியாசமான டோனில் பேசியிருக்கார்.. சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோரையே ஓவர்டேக் செய்துவிட்டார்.. இவங்க எல்லாரும் ஒரே குடும்பம் என்றாலும், தியேட்டரில் ரசிர்கள் துவம்சம் செய்றாங்க.. மும்பையில் 2 ஆயிரம், 3ஆயிரம் என்று டிக்கெட் விற்பனை ஆகுது.

இந்த படத்தில், ஸ்டன்ட் மாஸ்டரை பாராட்டியே ஆக வேண்டும். கையும், காலும் பின்னாடியே கட்டிப்போடப்பட்ட நிலையில், அப்படியே 10 பேரை பறந்து பறந்து அடிக்கிறார் ஹீரோ. ஆனால் லாஜிக்கான ஃபைட்தான்.. சாதி பிரச்சனையை லேசாக சொல்லி இருக்காங்க.. அதுக்காக பா.ரஞ்சித் மாதிரி சாதி படமாக ஆக்கவில்லை.. மேலாட்டமாக கதைக்கு தேவையான அளவுக்கு சாதி பிரச்சனை சொல்லப்பட்டிருக்கிறது.

ராஷ்மிகா: இந்த படத்தில், ராஷ்மிகா சாய்பல்லவி மாதிரியே ஆடறாங்க.. சாய்பல்லவி மாதிரியே நடிச்சிருக்காங்க.. இப்போது விஜய் தேவரகொண்டாவுடன் லிவிங் டூகெதரில் ராஷ்மிகா இருக்காங்க. விரைவில் அவரை கல்யாணம் செய்ய போவதாக ராஷ்மிகாவே சொல்லியிருக்காங்க.. ஒருவேளை இந்த படத்தை , விஜய் தேவரகொண்டா பார்க்க நேர்ந்தால், நம்மளவிட அதிகமாக ஹீரோவுடன் ஒட்டியிருக்காங்களே என்று நினைத்துவிடுவார்.. ராஷ்மிகாவை பிரியவும் வாய்ப்புண்டு. அந்த அளவுக்கு ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார் ராஷ்மிகா.

இந்த படத்தில், ஸ்டன்ட் மாஸ்டரை பாராட்டியே ஆக வேண்டும். கையும், காலும் பின்னாடியே கட்டிப்போடப்பட்ட நிலையில், அப்படியே 10 பேரை பறந்து பறந்து அடிக்கிறார் ஹீரோ. ஆனால் லாஜிக்கான ஃபைட்தான்.. சாதி பிரச்சனையை லேசாக சொலலி இருக்காங்க.. அதுக்காக பா.ரஞ்சித் மாதிரி சாதி படமாக ஆக்கவில்லை.. மேலாட்டமாக கதைக்கு தேவையான அளவுக்கு சாதி பிரச்சனை சொல்லப்பட்டிருக்கிறது.

பொழுதுபோக்கு:
ஒளிப்பதிவு வேற டோன்ல இருக்கு.. சிவப்பா, பச்சையாக பளீர்னு ஒளிப்பதிவு இருக்கு. தேவி ஸ்ரீ பிரசாத்தின் 3 பாடல்களும் அருமை.. பொழுதுபோக்கு ஐட்டங்கள் அத்தனையும் இந்த படத்தில் இருக்கு. வாழ்வியல் படம், விருதுக்குரிய படமெல்லாம் இது கிடையாது.. 200 ரூபாய் கொடுத்தால் 300 ரூபாய்க்கு சந்தோஷப்படுத்தும் படம், அவ்வளவுதான்" என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருந்த விமர்சனத்தில், "புஷ்பா படத்தின் முதல் பாகமேஏன் ஓடியது என்று தெரியல. இதுல 2வது பார்ட் வேற எடுத்து வெச்சிருக்காங்க. முதல் பாதி ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியெல்லாம் சொல்றதுக்கு ஒன்னுமில்லை.. ஒவ்வொரு சீனையும் ஜவ்வு மாதிரி இழுத்து வெச்சிருக்காங்க. ஆனால், டெக்னிக்கலாக படம் சூப்பராக இருக்கிறது. ஆனால், இந்த படத்தை பார்க்கறதுக்கே ஒரு மன தைரியம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருந்த விமர்சனத்தில் இதற்கு எதிர்மாறான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.. அதாவது, "புஷ்பா படத்தின் முதல் பாகமேஏன் ஓடியது என்று தெரியல. இதுல 2வது பார்ட் வேற எடுத்து வெச்சிருக்காங்க. முதல் பாதி ஓரளவுக்கு நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியில் சொல்றதுக்கு ஒன்னுமில்லை.. ஒவ்வொரு சீனையும் ஜவ்வு மாதிரி இழுத்து வெச்சிருக்காங்க. ஆனால், டெக்னிக்கலாக படம் சூப்பராக இருக்கிறது. ஆனால், இந்த படத்தை பார்க்கறதுக்கே ஒரு மன தைரியம் வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+