அடிபட்ட அதிர்ச்சியில் ராணவ் அம்மா.. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகிறாரா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டியாளர்கள் மத்தியில் டைட்டில் வெல்லும் முனைப்பும், பொறாமையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், போட்டியாளர் ராணவ் (Raanav) கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் நிகழ்ச்சியைத் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் ஒன்றில், ஜெஃப்ரி, ராணவ்வை கீழே தள்ளியதில் ராணவ்வின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த ராணவ்வை சக போட்டியாளர்கள் சிலர் "டிராமா" செய்வதாகக் கூறியது கண்டனத்திற்கு உள்ளானது. பின்னர் அருண் அவரை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு ராணவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். கட்டுப்போட்டுவிட்டு பிக்பாஸ் ஹவுசிலேயே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ராணவ் கழுத்துவலியால் அவதிப்பட்டபோது, அவரது தாயார் பிக்பாஸ் நிர்வாகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தனது மகனை வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். போட்டியாளர்கள் தனது மகனை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதைப் பார்க்க முடியவில்லை என்று அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். அதற்கு பிக்பாஸ் நிர்வாகம், ராணவ் தனது கனவை அடையவே இங்கு வந்துள்ளார் என்றும், அவர் தைரியமாக விளையாடி வருகிறார் என்றும் அவருக்கு உறுதியளித்தது. ராணவ்வின் தாயார், தனது மகன் வலியால் துடித்ததை பார்த்து அன்றிரவு முழுவதும் தூங்காமல் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
தற்போது கையில் ஏற்பட்ட காயத்தால் ராணவ் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தனது மகனின் உடல் நலனில் மிகுந்த கவலையில் இருக்கும் அவரது தாயார், மீண்டும் பிக்பாஸ் நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் ராணவ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற நேரிடலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணவ்வின் உடல்நிலை மற்றும் தாயின் கவலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிக்பாஸ் நிர்வாகம் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications