நான் எதையும் வெளியே சொல்லாதது ஏன் தெரியுமா?.. பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ போட்டு சொன்ன ரச்சிதா
சென்னை: நான் எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்திருந்ததற்கு காரணம் இருக்கிறது என ரச்சிதா பதிவிட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
ரச்சிதா விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். கடந்த 2015 இல் உப்புக் கருவாடு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இவர் சரவணன் மீனாட்சியில் தங்க மீனாட்சி என்ற கேரக்டர் முக்கியமானது.

பிரிவோம் சந்திப்போம், இளவரசி, கீதாஞ்சலி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ரச்சிதாவுடன் ராபர்ட் மாஸ்டரை இணைத்து பலர் பேசிய போது தினேஷ் கோபப்பட்டார்.
வெளியில் இருந்தபடியே ரச்சிதாவுக்கு தினேஷ் ஆதரவு தெரிவித்தார். இதனால் வெளியே வந்ததும் இருவரும் இணைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. தினேஷும் தான் ரச்சிதாவுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தினேஷ் மீது ரச்சிதா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கூறினார்.
அதாவது தன்னுடைய செல்போனுக்கு தினேஷ் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக புகார் கொடுத்தார். மேலும் தினேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார். அவரால் தான் நிம்மதி இல்லாமல் தவித்து வருவதாகவும் கூறினார். இந்த நிலையில் போலீஸார் தினேஷை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில் ரச்சிதா ஏதோ உள்நோக்கத்துடன் இதை செய்வதாக தெரிவித்தார். அவருக்கு வேண்டுமானால் விவாகரத்து பெற்று கொள்ளட்டும். நான் இனி அவரை தொல்லை செய்ய மாட்டேன் என்றார். இந்த நிலையில் இருவரையும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் ரச்சிதா தினேஷுடன் இணைவார் என எதிர்பார்த்த நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் எல்லாவற்றையும் எனக்குள்ளேயே வைத்துள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது. எனக்கு நேர்ந்த விஷயங்களுக்காக நான் வருந்தவில்லை. ஆனால் அதிலிருந்து பாடங்களை கற்று வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தினேஷுடனான உறவு குறித்து அதிகமா இதுவரை வெளிப்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது அதை குறிப்பிட்டே இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications