எல்லாமே வதந்தி.. நடந்தது இதுதான்! சீரியல் பூஜை இல்லை! ரட்சிதா மகாலட்சுமி கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, பிக் பாஸ் நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த ரட்சிதா மகாலட்சுமி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜை புகைப்படங்களை வெளியிட்டு இருந்தாார். இதனால் ரட்சிதா மகாலட்சுமி சீரியலில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அது எல்லாம் வதந்தி உண்மையில் என்ன நடந்தது என்று அந்த புகைப்படங்கள் பற்றி ரட்சிதா இப்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் எல்லாம் சினிமாவில் அறிமுகமாகி அங்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய பிறகுதான் நடிகைகள் சின்னத்திரைக்கு வருவார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறாக இருக்கிறது. சின்னத்திரையில் அறிமுகம் ஆகிவிட்டால் எளிமையாக ரசிகர்களிடம் பிரபலமாகிவிடலாம் என்ற நிலைதான் இருக்கிறது.

காரணம் டிவியில் மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவிலும் சீரியல் வீடியோக்கள் தான் அதிகமாக வைரலாகி கொண்டு இருக்கிறது. அதனால் பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து இப்போது வெள்ளித்திரைக்கு பயணித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவருக்கு பிரபலம் கிடைத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் தான். ஆனால் அதற்கு முன்பு சன் டிவியில் இளவரசி, விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சன் டிவியில் இளவரசி சீரியலில் மட்டும் தான் இவர் நடித்திருக்கிறார். அதுபோல விஜய் டிவி மட்டுமல்லாமல் கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதற்குப் பிறகு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அதிலும் சமீபத்தில் அவர் நடித்த ஃபயர் திரைப்படம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவரைக்கும் சீரியலில் ஹோம்லியாக பார்த்து வந்த ரச்சிதாவா இது என்று ரசிகர்கள் வியந்து போகும் அளவிற்கு அந்த திரைப்படத்தில் அவருடைய காட்சிகள் இருந்தது. இந்த நிலையில் ரச்சிதா மகாலட்சுமி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து இருந்தார்.
அதில் சூட்டிங் ஸ்பாட்டில் பூஜை நடக்கும் புகைப்படங்கள் இருந்தது. அதை பார்க்கும்போது இது திரைப்படத்திற்கான பூஜையாக இருக்குமா? அல்லது சீரியலுக்கான பூஜை புகைப்படங்களை என்ற கேள்விகள் எழுந்து வந்தது. ஆனால்் சன் டிவியில் விரைவில் வெளியாக இருக்கும் திகில் கலந்த சீரியலுக்கான பூஜை என்ற செய்திகள் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் இதுகுறித்து ரட்சிதா விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்று நான் வெளியிட்ட பூஜை பட புகைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கான புகைப்படங்கள் தான் இது சீரியலுக்கான புகைப்படங்கள் அல்ல மீண்டும் சீரியலில் உங்களை சந்திப்பதாக இருந்தால் சந்தோஷம்தான் ஆனால் இந்த தவறான புரிதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியிருக்கிறார்.
அதுபோல பூஜையில் ரச்சிதாவோடு இருப்பவர்கள் யாரும் பழக்கமானவர்களாக தெரியவில்லை. புதியவர்களாக தான் தெரிகிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தில் ரட்சிதா தான் முக்கிய கேரக்டரில் இருக்கிறார் என்று தெரிகிறது. அதுபோல இன்னும் சிலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலரும் ரச்சிதாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ரட்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்தனர். பிறகு சில வருடங்களிலேயே திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ரட்சிதா தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல தினேஷும் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதாக செய்திகள் வைரலாகி வந்தது. அதை உண்மை என்று சொல்லும் வகையில் ரட்சிதா தினேஷுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாவற்றையம் சோசியல் மீடியா பக்கங்களில் டெலிட் செய்திருந்தார்.
அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா அங்கு தினேஷ் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை. ஆனால் தினேஷ் ரச்சிதாவிற்கு முழு சப்போர்ட் செய்து கொண்டு இருந்தார். இதனால் ரச்சிதா நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் தினேஷை புரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதுபோல எந்த சம்பவமும் நடைபெறவில்லை.
ஆனாலும் அதற்கு அடுத்த சீசனில் தினேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். எப்படியாவது டைட்டில் வெற்றி பெற்று ரச்சிதாவின் மனதை மாற்றி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பல இடங்களில் தினேஷ் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் ரச்சிதா தொடர்ச்சியாக தினேஷுக்கு எதிராகவே பதிவு வெளியிட்டுக் கொண்டிருந்தார்.
இப்போது இருவருக்கும் விவாகரத்து நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் பேசாமல் தனித்தனியாக இருக்கிறார்கள் ஆனாலும் ரச்சிதா தற்போது வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் சிலர் தினேஷுடன் மீண்டும் ரச்சிதா சேர்ந்து வாழ வேண்டும் என்று கமெண்ட் கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications